டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருபவர் ராதாமணி என்கிற பாட்டல் ராதா(குரு சோமசுந்தரம்). டைல்ஸ் ஒட்டுவதில் கில்லாடியான அவர் மதுவுக்கு அடிமை. ராதாவை குடிப்பழக்கத்தை நிறுத்த வைக்க கட்டிட வேலைக்கு அழைப்பதாக பொய் சொல்லி மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிடுகிறார் மனைவி(சஞ்சனா நடராஜன்).
DOWNLOAD
அசோகன்(ஜான் விஜய்) நடத்தும் அந்த மறுவாழ்வு மையம் ஒரு சிறை போன்று இருக்கிறது. பாட்டல் ராதாவுக்கு அங்கு இருக்க பிடிக்காமல் தப்பியோடிவிடுகிறார். இனியும் இவரை திருத்த முடியாது என குடும்பம் பிரிகிறது. இழந்த குடும்பத்தை மீண்டும் பெற குடியை கைவிடுவாரா ராதா என்பதே கதை.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் படும் கஷ்டத்தை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். குடிப்பழக்கம், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், திருந்துவது குறித்து படத்தில் காட்டப்பட்டாலும் கதை புதிது இல்லை. அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடிகிறது.
நிஜமான குடிகாரன் போன்று நடித்திருக்கிறார் இல்லை இல்லை வாழ்ந்திருக்கிறார் குரு சோமசுந்தரம். தன் அபார நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவிட்டார். மறுவாழ்வு மையத்தை நடத்துபவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜான் விஜய். ராதாவின் மனைவியாக அருமையாக நடித்திருக்கிறார் சஞ்சனா நடராஜன். மாறனின் காமெடி சில இடங்களில் கை கொடுத்திருக்கிறது. படத்தின் நீளம் தான் பொறுமையை சோதிப்பதாக இருக்கிறது.
Post a Comment