Home » , » Devara Movie Rview

Devara Movie Rview

இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டை சீர்குலைக்க இரண்டு தாதாக்கள் திட்டமிட்டிருப்பதாக மும்பை போலீஸுக்கு தகவல் கிடைக்கிறது. அவர்களைப் பிடிக்க கடற்கரை பகுதியான ரத்தினகிரிக்கு வரும் போலீஸ் டீம் , கப்பலில் கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவரான பைராவிடம் (சைஃப் அலிகான்) உதவி கேட்கிறது. அவர் மறுக்கிறார். அதற்குக் காரணம் தேவரா (ஜூனியர் என்.டி.ஆர்). அந்த ஊரில் இருக்கும் சிங்கப்பா (பிரகாஷ்ராஜ்) போலீஸ்காரர்களிடம் பழைய கதையை சொல்கிறார். அந்த பிளாஷ்பேக்கில் நடக்கும் விஷயங்கள்தான் முதல் பாகத்தின் கதை.

DOWNLOAD

வழக்கமான கதைதான் என்றாலும் தனது பிரம்மாண்ட மேக்கிங் மூலம் வெற்றிபெறுகிறார் இயக்குநர் கொரட்டலா சிவா. அதற்கேற்ப கடலும் மலையும் சூழ்ந்த இடத்தில் கதைக்களம் நகரும் விதமும் கட்டிப்போடுகிறது. பிளாஷ்பேக் தொடங்கியதும் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், கடலில் இறங்கி, கடற்படையினர் கண்ணில் மண்ணைத் தூவி கொள்ளையடிக்கும் காட்சிகளைப் படமாக்கியிருக்கும் விதம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

இப்படி கொள்ளையடிப்பவர்களை அதிகாரத்தில் உள்ளவர்களும் அவர்களை ஆட்டுவிப்பவர்களும் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முதல் பாதி திரைக்கதையும் காட்சிகளும் இரண்டாம் பாதியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.
ஆனால், பிளாஷ்பேக்கின் காலம் மாறும்போது மொத்தப் படமும் தடுமாறத் தொடங்கிவிடுகிறது. தேவரா மாயமாவதைப் போலவே திரைக்கதையும் மாயமாகி விடுகிறது. அடுத்த தலைமுறையின் காட்சிகளும் கதாபாத்திரங் களும் பார்வையாளர்களைச் சோதிக்கின்றன. கடலில் இறங்கி சுறாவையே அடக்கி காட்டும் நாயகனின் பராக்கிரமம் மிரள செய்கிறது.
கடற்படை அதிகாரியின், சுடு பேச்சு நாயகனைத் திருத்தி விடுவதாகக் காட்டும் காட்சியில் பூச்சுற்றல். நகமும் சதையும் போல பழகியவர்களில் ஒருவரைக் கொல்ல இன்னொருவர் பல ஆண்டுகளாகக் காத்திருப்பதும் அதற்காகப் பயம் தெரியாத இளைஞர் கூட்டத்தை அவர் தயார் செய்வதும் லாஜிக் ஓட்டை. அந்தளவுக்கு வெறுப்பு ஏற்பட,வேறு சில காட்சிகளை இயக்குநர் யோசித்திருக்கலாம். படத்தின் முதல் காட்சிக்கும் இறுதிக் காட்சிக்கும் தொடர்பே இல்லாமல் படம் முடிவதும் ஏமாற்றமளிக்கிறது. ஒரு பான் இந்தியா படத்தில் கதாநாயகியை ஊறுகாய் போல பயன்படுத்தி இருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.
ஜூனியர் என்.டி.ஆர், இரட்டை வேடத்தில் மிரட்டியிருக்கிறார். அவருக்கு இணையாக சைஃப் அலிகானுக்கும் வலுவான கதாபாத்திரம். ஒரு வீரனைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று புலம்பும் கதாபாத்திரம் ஜான்வி கபூருக்கு. அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், காந்த், கலையரசன், முரளி சர்மா, நரேன், அஜய், அபிமன்யு சிங் என பலரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அனிருத்தின் பின்னணி இசை படத்துக்குக் கைகொடுத்திருக்கிறது. ரத்னவேலுவின் கேமரா மலையையும் கடலையும்அழகாகப் படம் பிடித்திருக்கிறது. தேவையில்லாத காட்சிகளைப் படத்தொகுப்பாளர் கர் பிரசாத் கருணையின்றி வெட்டியிருக்கலாம். மேக்கிங்கில் காட்டிய உழைப்பைத் திரைக்கதையில் காட்டியிருந்தால் ‘தேவரா’ இன்னும் மிளிர்ந்திருப்பார்.
Share this article :

Post a Comment