ஆதர்வா பிளீடிங் டிஸ் ஆர்டர் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் காரணமாக அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதனை உணர்ந்த அவரது தந்தை ஜெயப்பிரகாஷ் கவனமாக மகனை வளர்த்து வருகிறார். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன் பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க ஜெயப்பிரகாஷ் முயற்சிக்கிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இந்நிலையில் ஒரு தவறான தொலைபேசி அழைப்பால் ஸ்ரீதிவ்யாவுக்கும் ஆதர்வாவுக்கும் நட்பு ஏற்படுகிறது. இருவரும் நேரில் சந்திக்கமலேயே காதலித்து வருகின்றனர். தடகள இறுதி போட்டிக்காக சென்னைக்கு வருகிறார் அதர்வா. சென்னை வந்தவுடன் ஸ்ரீதிவ்யாவை சந்திக்க செல்கிறார் அதர்வா.
இதற்கிடையில், ஸ்ரீதிவ்யாவின் அண்ணனுக்கு ஒரு பிரச்னை ஏற்படுகிறது. ஸ்ரீதிவ்யாவிற்காக அவரது அண்ணன் பிரச்னையில் அதர்வா தலையிடுகிறார். இதனால் எதிரி கும்பலின் கோபல் ஆதவா மீது திரும்புகிறது. மேலும் அதர்வாவிற்கு சிறு காயம் பட்டால்கூட உயிரிழந்து விடுவான் என்பதையும் அந்தக் கும்பல் தெரிந்துக் கொள்கிறது.இறுதியில் அந்த கும்பலிடமிருந்து அதர்வா எவ்வாறு தப்பித்து, தடகள போட்டியில் கலந்துகொண்டு அவரது தந்தையின் லட்சியத்தை நிறைவேறினாரா என்பதே மீதிக் கதை
அதர்வாவுக்கு இது முக்கியமான படம்தான். இந்த படத்திற்காக அவரது கடுமையான உழைப்பு நன்றாகவே தெரிகிறது. அதற்குரிய பலனும் கிடைத்துள்ளது என்றே சொல்லலாம். ஸ்ரீதிவ்யா தனக்குரிய பங்களிப்பை சிறப்பாகவே செய்துள்ளார்.
இயக்கம் ரவி அரசு. தெளிவான திரைக்கதையால் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் க்ளைமாஸ் வழக்கம்போல் அதர பழசே... ராஜா முகமதுவின் எடிட்டிங் படத்துக்கு கூடுதல் பலம். தயாரிப்பு மைக்கேல் ராயப்பன்.
Post a Comment