பெண்கள் ஆடைகளை அணிந்து பார்க்கும் ட்ரையல் ரூமில் ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமராவின் கண்களுக்கு ஒரு இளம் பெண் சிக்கி கொள்கிறார். அந்த பெண்ணை ஒருவன் பிளாக்மெயில் செய்கிறான். ஒரு சில நாட்கள் கழித்து அந்த பிளாக்மெயில் பேர்வழியை ஒரு இளைஞன் கொலை செய்து அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுகிறான்.
DOWNLOAD
இந்த கொலையை நேரில் பார்த்த திரிஷா ஒரு விபத்தில் சிக்கி தற்காலிக பார்வை இழப்பை சந்திக்கிறார். ஓவியரான டெவினோ தாமஸை காவல் துறை அழைத்து வந்து த்ரிஷா சொல்லும் கொலையாளியின் அங்க அடையாளங்களை வரைய சொல்கிறது. டெவினோவும் வரைகிறார். கடைசியில் டெவினோவின் உருவமே வந்து நிற்கிறது. இது என்ன புது ட்விஸ்ட்? என்று நாம் யோசிக்கும் போது, இந்த கதை இல்லாமல் வேறொரு கதையையும் படத்தில் வைத்திருக்கிறார்கள். கொலையாளியின் அடையாளத்தை தேடும் முயற்சியில் வெற்றி கிடைத்ததா என சொல்லும் முயற்சியே இந்த 'Identity'.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
படத்தின் முதல் காட்சியான பிளாக்மெயில் செய்வது தொடங்கி இடைவேளை வரை காட்சிகள் விருவிருப்பாக இருக்கிறது. இடைவேளையில் அவசர அவசரமாக பாப்கானை வாங்கி கொண்டு வந்து இருக்கையில் அமரந்தால் படம் ஆக்ஷனை நோக்கி நகர்கிறது சஸ்பென்ஸ் த்ரில்லர் ஆக்ஷன் த்ரில்லர் இரண்டையும் ஒரே படத்தில் தருவது கடினம். இரண்டையும் மிக சிறப்பாக தந்திருக்கிறார்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான்.
கொலை செய்தது இவனா? அல்லது இவனா? என்ற டென்ஸனை படம் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் ஏற்ப்படும் போது படத்தின் வெற்றி உறுதியாகி விடுகிறது.
ஹெலிகாப்டர் சண்டை காட்சியில் ஒளிப்பதிவாளரின் தனித்துவம் தெரிகிறது. ஜாக்ஸ் பிஜாயின் பின்னணி இசையில் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. டெவினோ தாமஸ் தென்னிந்தியாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறி வருகிறார். அளவான பேச்சு, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு என திரையில் ஆளுமை செய்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின்பு த்ரிஷாவுக்கு திறமையை காட்டும் படமாக வந்துள்ளது Identity. தனது இத்தனை வருட நடிப்பு அனுபவத்தை காட்சிகளில் கொண்டு வந்துள்ளார்.
மாறுபட்ட கதைக்களம், சொல்லப்படும் விதத்தில் புதுமை, சரியான நடிகர்கள் தேர்வு என மலையாள சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. புத்தாண்டில் முதல் வெற்றி படமாக வந்துள்ள 'Identity' தென்னிந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக வந்துள்ளது.
Post a Comment