Home » , » Kidaari Movie Review

Kidaari Movie Review

தமிழகத்தின் விருதுநகர் - சாத்தூர் பகுதியையே தன் கைக்குள் வைத்துக் கொண்டு சின்னதாய் தொழிலும் , பெரிதாய் கட்டப் பஞ்சாயத்தும் செய்து வரும் கொம்பையா பாண்டியன் - வேல ராமமூர்த்தியின் வளர்ப்பு மகன் மாதிரியான கையாள் கிடாரி - சசிக்குமார்.ஊரில் உயர வளர்பவர்களையெல்லாம் பஞ்சாயத்து எனும் பெயரில் ஒங்கி தலையில் தட்டி., இவர்களுக்கு கீழ் உட்கார வைக்கும் இவர்கள் இருவரது சண்டியர் தனத்தால்., பலரையும் பகைத்துக் கொள்ளும் இருவரையும் பழிவாங்க தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் எதிராளிகள் .அவர்களின் கை ஒங்கியதா ? கிடாரியால் ஒடிக்கப்பட்டதா ..? என்பது தான் கிடாரி படத்தின்கதை . இதில் , கொஞ்சம் சசிக்குமார் -நிகிலா விமலின் காதலையும் கலந்து கட்டி ,தந்திருக்கின்றனர் 'கிடாரி' படக் குழுவினர் .

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

காட்சிப்படுத்தல் :கம்பெனி புரடக்ஷன்ஸ் எம்.சசிக்குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில் , வெளிவந்திருக்கும் மற்றுமொரு படைப்பு. புதியவர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் ., சசிக்குமார் ஜோடியாக நிகிலா விமல் நடிக்க ., வேல ராமமூர்த்தி , மூ .ராமசாமி , வசுமித்ரா ,சுஜாவாருன்னி, சுபா மோகன் , கே.என்.காளை , தெனாலி ... உள்ளிட்டோர் முக்கிய பாத்திரமேற்று உடன் நடிக்க வெளிவந்திருக்கும்"கிடாரி " .படத்தில் ,கொஞ்சமே கொஞ்சம் சசிக்குமார் -நிகிலா விமலின் காதலையும் கலந்து கட்டி ., 'கிடாரி'யை ., தேவர் மகன் , விருமாண்டி ஸ்டைலில் மண் மணம் கமழ சிறப்பாய் காட்சிப்படுத்தி தர முயற்சித்திருக்கிறார்கள் ... இப்படக் குழுவினர் .அதற்காக அவர்களை பாராட்டலாம்.
கதாநாயகர் :கிடாரியாக சசிக்குமார்., உப்பு சாப்பிட்ட வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாது என ஆக்ஷன் காட்சிகளில் ., தன் அப்பா மாதிரியான வேல ராமமூர்த்தியை எதிர்ப்பவர்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்வதிலாகட்டும். அப்பா மாதிரியான அவர் தன் அப்பா நெப்போலியனையும் அவரது நம்பிக்கையையும் நயவஞ்சகமாக தீர்த்து கட்டியவர் ... என்பது தெரிந்து துடிப்பதிலாகட்டும் சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார் .அதிலும் ,லவ் எபிசோட்களில் நிகிலா விமலுடன் செம மூடு கிளப்புகிறார். பட பட பைக்கில் பந்தாவாக பவனி வரும் படம் முழுக்க அவரது லந்து ., ட்ரை ஏரியா படத்தை போரடிக்காமல் பார்த்து கொள்கிறது.
கதாநாயகி : நிகிலா விமல் ., சசியுடன் ஜோடி சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் இது என்பதால் எக்கச்சக்கமாய் நெருக்கம் , கிறக்கம் காட்டியிருக்கிறார். அது படத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது . வாவ்!
வில்லனிக் ஹீரோ : வேல ராமமூர்த்தி கரிசல் மண்ணுக்கே உரிய வீர ராமமூர்த்தியாகவும் ஆரம்ப நாட்களில் துரோகமூர்த்தியாகவும் படம் முழுக்க வியாபித்திருக்கிறார். கெஸ்ட் ரோலில் ப்ளாஷ்பேக்கில் வரும் நெப்போலியனை நம்ப வைத்து ., கே.என் காளையுடன் சேர்த்து வைத்து இவர் தீர்த்து கட்டி ராஜ்ஜியத்தை பிடிக்குமிடம் ரசனையான நயவஞ்சகம்.

பிற நட்சத்திரங்கள் : வேல மூர்த்தியின் சம்பந்தி 'ஜோக்கர்'மூ.ராமசாமி தொடங்கி ., அம்மா வசுமித்ரா ,சுஜா , சுபா , கே .என்.காளை , தெனாலி உள்ளிட்டோருடன ப்ளாஷ்பேக்கில் கெஸ்ட் ரோலில் வரும் மாஜிநாயகர் நெப்போலியன் வரை... ஒவ்வொரு கேரக்டரும் பாத்திரமறித்து பளிச்சிட்டுள்ளது படத்திற்கு பெரும் பலம்!
தொழில்நுட்பகலைஞர்கள் : எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் விருதுநகர் - சாத்தூர் பகுதி களிலேயே நாமும் அந்த இரண்டரை மணி நேரம் வாழ்த்து வந்த ப்ரமை ஏற்படுகிறது.தர்புகா சிவாவின் இசையும் பிரமாதமாய் பேசியிருக்கிறது . திலீப் சுப்பாராயனின் சண்டை பயிற்சியும் மிரட்டல் .
பலம் : சண்டை காட்சிகளும் ., பின்னணி இசையும் பலம். மேலும் .,கிடாரி மற்றும் கொம்பையா பாண்டியனின் விரோதிகளை ரசிகனுக்கு ஒவ்வொருவராக அறிமுகம் செய்து காட்டும் விதம் புதுசாக இருப்பது பெரும் பலம்.
பலவீனம் :வெட்டு குத்து என ஒவர் இரத்த வாடை அடிப்பது சற்றே பலவீனம்.
இயக்கம் : மொத்தத்தில் .,பிரசாத் முருகேசனின் இயக்கத்தில் ., ஒரு சில சிறு சிறு குறைகள் இருந்தாலும் கரிசல் மண்ணும் அம்மண்ணைச் சார்ந்த வீரமும் , துரோகமும், குரோதமும் , காதலுமாக வெளிவந்திருக்கும் "கிடாரி ' க்கு ஆக்ஷன் விரும்பும் ரசிகர்கள் அதிக 'கிளாப்ஸ் 'அடிக்கலாம்!"
Share this article :

Post a Comment