Home » , » Madha Gaja Raja Movie Review

Madha Gaja Raja Movie Review

சுமார் 10 ஆண்டுகள் கழித்து ரிலீஸாகியிருக்கிறது மதகஜராஜா. 90ஸ், 2கே வைபில் வந்திருப்பது தான் மதகஜராஜா படத்தின் பெரிய பலமே.

DOWNLOAD

கதையில் புதுமையை எல்லாம் தேட வேண்டாம். மதகஜராஜா என்கிற எம்.ஜி.ஆர். என்கிற ராஜாவை(விஷால்) சுற்றியே கதை நகர்கிறது. கேபிள் நெட்வொர்க் வைத்திருக்கும் ராஜா தன் சிறுவயது நண்பர்களான சந்தானம், சடகோபன் ரமேஷ் மற்றும் நிதின் சத்யா ஆகியோரை ஒரு திருமண நிகழ்ச்சியில் சந்திக்கிறார். தன் நண்பர்களில் சடகோபம் ரமேஷ் மற்றும் நிதின் சத்யாவுக்கு அதிகாரம் படைத்த மீடியா அதிபரான சோனு சூதால் பெரிய பிரச்சனை இருப்பதை தெரிந்து கொள்கிறார் விஷால். சோனு சூதை எதிர்த்து தன் நண்பர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்க முடிவு செய்கிறார்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

முதல் பாதியில் ஒரு சாதாரண ஆள் மற்றும் கிங்மேக்கருக்கு இடையேயான பிரச்சனையை காட்டியிருக்கிறார்கள். தூள் படம் மாதிரி ஒரு பிரச்சனை. ஆனால் தூள் மாதிரி சீரியஸாக இல்லாமல் இதில் காமெடியாக இருக்கிறது. ஆனால் தூள் ஃபீலிங் வருகிறது. பல குடும்பங்கள் வசிக்கும் ஒரு பகுதி. பாவாடை, தாவணியில் ஹீரோயின். அடல்ட் காமெடிக்காக கிளாமராக ஒரு நடிகை. ஆட வைக்கும் விஜய் ஆண்டனியின் பாடல்கள். ஃபுல் ஃபார்மில் இருக்கும் காமெடியன். ஆனால் சுந்தர் சி. எல்லாத்தையும் ஜாலியாக கையாண்டிருக்கிறார்.
சந்தானத்தின் ஒன்லைனர்கள் படத்திற்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது. அவர் தன் மாமியாரை கிண்டல் செய்வதை பார்த்து தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. யாரும் எதிர்பார்க்காத ஒருவர் கவுரவத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.
விஷால், சோனு சூத் இடையேயான மோதல் பெரிதாக கவரவில்லை. சோனு சூத் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தபோதிலும் அவர் பெரிய வில்லனாக தோன்றவில்லை. ஆங்காங்கே காமெடி வைத்து மக்களை சிரிக்க வைக்கிறார் சுந்தர் சி. மறைந்த மனோபாலா வரும் காட்சியில் தியேட்டரில் ஒரே சிரிப்பு சத்தம் தான்.
காமெடியுடன் ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்து கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. மதகஜராஜாவில் ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ரொமான்ஸ் வேணுமா ரொமான்ஸ் இருக்கு, கிளாமர் வேணுமா கிளாமர் இருக்கு, காமெடி வேணுமா காமெடி இருக்கு
Share this article :

Post a Comment