இந்தப் படத்தில் ராஜகுமார் நாகராஜ், ரச்சிதா மகாலட்சுமி, அபி நட்சத்திரா, அம்ரிதா ஹல்டர், சிவம்தேவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
DOWNLOAD HD SOON
ஒளிப்பதிவாளர் – டி.ஜே.பாலா, இசை – எம்.எஸ்.ராஜ்பிரதாப், படத் தொகுப்பாளர் -ராம் கோபி. இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா எழுதி, இயக்கியிருக்கிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இந்தப் படமும் தற்போதைய சென்சேஷனல் மேட்டரான பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையைச் சொல்லும் படம்தான்.
ஒரு புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது. விசாரணையை மேற்கொள்ளும் காவல் துறை, அது இளம் பெண்ணான அபி நட்சத்திரா என்பதை கண்டுபிடிக்கிறது.
ஆனால் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் யார் இந்தக் கொலையை செய்தது..? கொலைக்கான பின்னணி என்ன..? என்பதை கண்டறியும் வகையில் ஒரு கிரைம், திரில்லர் டைப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது சமூக வலைத்தளங்களிலும், பொதுவிடங்களிலும் நாகரீகம் என்ற பெயரிலும், தனி மனித சுதந்திரம் என்ற பெயரிலும் சில பெண்கள் அரைகுறை ஆடையில் வலம் வருவதும், பொது இடங்களில் அவர்கள் நாகரீகமற்ற முறையில் நடந்து கொள்ளும்விதமும், வாழ்க்கைச் சூழலில் திருமணத்திற்கு முன்பேயே டேட்டிங் மற்றும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது என்ற அத்துமீறல்கள் அவர்களையும் தாண்டி, மற்றைய அப்பாவி பெண்களையும் எப்படி ஆபத்தில் சிக்க வைக்கிறது என்பதை கருவாக வைத்துக் கொண்டு இந்தப் படத்தை இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா உருவாக்கியிருக்கிறார்.
இயக்குநரின் இந்த சுவாஸ்யமான திரைக்கதை கிரைம், திரில்லராக மட்டும் இன்றி பெண்களை யோசிக்க வைக்கும் படைப்பாகவும் அமைந்திருக்கிறது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, போலீஸ் உடையில் கம்பீரமாக இருக்கிறார். அழகுப் பதுமையாக இருக்கும் அவரது தோற்றம் அவர் வரும் காட்சிகளிலெல்லாம் ஸ்கிரீனைவிட்டு கண்ணை எடுக்கவிடாமல் செய்கிறது. விசாரணை காட்சிகளில் கண்டிப்பான அதிகாரியாக, குடும்பத்திற்குள் அன்பான மகளாக.. அசத்தலாக நடித்துள்ளார்.
பாதிக்கப்படும் இளம் பெண்ணாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, அந்த வயதுக்கே உரித்தான நடிப்பை காண்பித்திருக்கிறார். வெளியுலகம் தெரியாமல் வளர்ந்தவர் கடைசியில் கயவர்களிடம் பலியாவது பரிதாபம்தான்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜ்குமார் நாகராஜ், பார்ப்பதற்கு சீமான் போல் இருக்கிறார். போலீஸ் வேடம் மட்டுமல்ல… அரசியல்வாதி உள்ளிட்ட அனைத்து குணச்சித்திர வேடங்களுக்கும் சரியாக பொருந்தக் கூடிய முகம்தான் இவருடையது.
சத்தியசீலன் என்ற கதாப்பாத்திரத்தில் இறுக்கமான முகத்தோடு, பயமுறுத்தும் தோற்றத்தோடு, தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்த துயரத்தைத் தாங்கிக் கொண்டு நடித்திருக்கும் இவரது நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸ்தான் என்றாலும் ரசிக்கலாம்தான்.
மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கும் அம்ரிதா ஹல்டர், வருகின்ற காட்சிகளிலெல்லாம் கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாமல் தாராளம் காட்டியிருக்கிறார். தானே ஒரு அப்பாவி பெண்ணின் படுகொலைக்குக் காரணமானதை எண்ணி வருத்தப்படும் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சிவம் தேவ் கொஞ்சம் ரசிக்க வைத்திருக்கிறார். அபி நட்சத்திராவின் அம்மாவாக நடித்திருக்கும் சரிதாவின் கதறல் நம் மனதைப் பிசைகிறது. மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
டி.ஜே.பாலாவின் ஒளிப்பதிவு ரம்மியமானதுதான். பாடல் காட்சிகளை அளவாகப் படமாக்கியிருக்கிறார். எம்.எஸ்.ராஜ்பிரதாப்பின் இசையில் ஒரு பாடல் கேட்கும் ரகம்தான். படத் தொகுப்பாளர் ராம் கோபி கிரைம் படங்களுக்கே உரித்தான கட்டுகளை செய்து கொடுத்திருக்கிறார்.
இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்படும் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் பயணிக்க வைத்துவிடும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா, இறுதிக் காட்சி வரையிலும் கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்பதை யூகிக்க முடியாதபடி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.
நாட்டில் தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கான காரணமாக பெண்களின் ஆடை திறப்பு, துறப்பு, குடிப் பழக்கம், பப்புகளின் வருகை, டேட்டிங் கலாச்சாரம், திருமணம் தாண்டிய உறவுகள், ஆபாசப் படங்கள், கையடக்க செல்போனில் கிடைக்கும் வக்கிர வீடியோக்கள் என்று பல்வகை பிரச்சினைகள் இருந்தாலும், பெண்களின் அளவுக்கு மீறிய சுதந்திரமும், பழக்க வழக்கமும் ஒரு காரணம் என்று இயக்குநர் இந்தப் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
அதே நேரத்தில் இளைஞர்களையும் தாண்டி முதியவர்களும் இதைச் செய்தவற்கான காரணம் என்னவென்பதை இயக்குநர் மிக லேசாகச் சொல்லிவிட்டுத் தாண்டிப் போயிருக்கிறார்.
முதலில் தன் வீட்டுப் பெண்களைப் போலவே அடுத்த வீட்டுப் பெண்களிடமும் ஊரார் பெண்களிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி சிறு வயதிலிருந்தே ஆண் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தைத்தான் இயக்குநர் இதில் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் இயக்குநர் தன்னுடைய அட்வைஸையெல்லாம் பெண்களிடமே தள்ளிவிட்டுவிட்டு “ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள். பெண்கள்தான் சூதானமாக, சுதாரிப்பாக நடந்து கொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்..” என்பதாக படத்தை முடித்திருக்கிறார்.
Post a Comment