Home » , » 2K Love Story Movie Review

2K Love Story Movie Review

சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக் (ஜெகவீர்)  - மோனிகா (மீனாட்சி) பழகி வருகிறார்கள். பள்ளி பருவத்தில் துவங்கி கல்லூரி, அதற்குப்பின் தொழில் என அனைத்திலும் ஒன்றாக பயணிக்கும் இவர்களை பார்க்கும், அனைவரும் இவர்கள் காதலர்கள் என முடிவு செய்துவிடுகிறார்கள்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 
https://t.me/moviesdahdd

ஆனால், இவர்கள் எப்போதுமே நண்பர்களாகவே பழக ஒரு கட்டத்தில் பவித்ரா என்கிற பெண்ணை கார்த்திக் காதலிக்க துவங்குகிறார். பவித்ராவை காதலித்தாலும், மோனிகாவுடன் தொடர்ந்து நட்பில் கார்த்திக் நெருங்கி பழகுவது பவித்ராவுக்கு பிடிக்கவில்லை.

DOWNLOAD HD SOON

இதனால், மோனிகாவுடனான நட்பை முறித்துக் கொள்ளும் படி கார்த்திக்கிடம் கூறுகிறார் பவித்ரா. ஆனால், கார்த்திக் மோனிகாவின் நட்பை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறி, பவித்ராவுடனான காதலை பிரேக் அப் செய்கிறார். இதை அறிந்த மோனிகா, கார்த்திக் - பவித்ரா இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க, இந்த சமயத்தில் விபத்தில் சிக்கி மரணமடைகிறார் பவித்ரா.

தனது காதலியின் மரணத்தை தாங்காமல் வாடும் கார்த்திக்கை, துயரத்தில் இருந்து மீட்டெடுக்கிறார் மோனிகா. இதன்பின், கார்த்திக் - மோனிகா இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது. இதன்பின் என்ன நடந்தது? இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? அல்லது இறுதிவரை நண்பர்களாகவே இருந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை.

இந்த காலத்து இளைஞர்களை கவரும் வகையில் அழகான திரைப்படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சில இடங்களில் தொய்வு இருந்தாலும், அழகிய பயணத்தை பக்காவாக எடுத்துள்ளார்.

ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பழகி வந்தாலே அது காதல்தான் என முடிவு செய்து விடும் இந்த சமூகத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் இறுதிவரை நண்பர்களாகவே இருக்கலாம் என காட்டியுள்ளார்.

இதற்கிடையில் வரும் குழப்பங்கள், அதனால் எடுக்கப்படும் சில முடிவுகளையும், நண்பர்களாகவே இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதையும் இப்படத்தில் அழகாக காட்சி அமைத்துள்ளார். 90ஸ் கிட்ஸ் மனதை தொட்ட பிரியமான தோழி திரைப்படம் எப்படியோ, அதே போல் 2k கிட்ஸ் மனதை தொடுவது போல் அமைந்துள்ளது இந்த 2K லவ் ஸ்டோரி.

நடிகர்கள், நடிகைகளின் நடிப்பு பெரிதாக ஒன்றும் குறை சொல்லும் அளவுக்கு இல்லை. ஆனால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் மட்டும் தோன்றுகிறது.

மேலும் நகைச்சுவை காட்சிகள் சிறப்பாக இருந்தது. பாலசரவணன், சிங்கம்புலி நடிப்பு நம்மை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சிங்கம்புலி கொடுக்கும் அலப்பறை அட்டகாசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
Share this article :

Post a Comment