ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.ராஜா இந்தப் படத்தை தயாரித்து, தானே நாயகனாகவும் நடித்துள்ளார்.
DOWNLOAD
மாளவிகா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் அம்மா கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel
https://t.me/moviesdahdd
மேலும் ஆடுகளம் நரேன், செளந்தர்ராஜா, ‘கஞ்சா’ கருப்பு, ‘காதல்’ சுகுமார், விஜய் டிவி சரத், மாரிமுத்து, மதுரை சுஜாதா, வெங்கடேஷ், ரஞ்சன், யாசர், ரமேஷ், மூர்த்தி, வீரா, நிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் பாண்டி, இசை – தரண் குமார், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – வி.ஜே.சாபு ஜோசப், நடன இயக்கம் – தீனா, ராதிகா, சண்டை இயக்கம் – தளபதி தினேஷ், கலை இயக்கம் – சுரேஷ் கல்லேரி, பத்திரிகை தொடர்பு – மணவை புவன்.
‘சிலந்தி’, ‘ரணதந்த்ரா(கன்னடம்)’, இளையராஜா இசையில் உருவாகிவரும் ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் ஆதிராஜன், இந்த ‘அருவா சண்ட’ படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
சமகால தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிபலிப்புதான் இந்த படம். என்னதான் நாகரிகம் வளர்ந்து கொண்டே இருந்தாலும் ஜாதி சண்டைகளும், கௌரவக் கொலைகளும் தினசரி பத்திரிகைகளிலும், சேனல்களிலும் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டுதான் இருக்கிறது.
“சாதிகளற்ற சமத்துவ சமுதாயம் அமைப்போம்” என்று வாய் கிழியப் பேசினாலும் சாதிக்கு ஒரு சங்கம் வைத்து, வீதிக்கொரு பேனர் வைக்கும் கலாச்சாரத்தில் இருந்து தமிழகம் மீளவில்லை. அப்படியொரு சாதி வெறியில் நடக்கும் கவுரவக் கொலையை மையமாக வைத்துதான் இந்தப் படம் உருவாகியுள்ளது.
சாதிப் பூசல் மிக்க ஊர் அது. அதில் மைனாரிட்டியாக வாழும் ஒரு சாதியில் பிறந்த நாயகன் கபடி வீரர். தன்னுடன் ஊர்ப் பையன்களுடன் ஒரு தனி டீம் அமைத்து ஊர், ஊராகச் சென்று கபடி விளையாடி வருகிறார்.
இவருடைய இந்த முயற்சிக்கு இவருடைய தாயான சரண்யா மிகவும் உறுதுணையாக இருக்கிறார். ஏனெனில் நாயகனின் தந்தையும் கபடி வீரர்தான். மிக இளம் வயதிலேயே அவர் இறந்துவிட்டார். அவருடைய ஞாபகமாக பையனாச்சும் கபடியில் பெரிய ஆளாகட்டும் என்று நினைத்து வளர்த்து விடுகிறார் அம்மா சரண்யா.
அதே ஊரின் ஆதிக்க சாதிக்காரர்களின் தலைவராக இருப்பவர் ஆடுகளம் நரேன். இவரது மகள் மாளவிகா. கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர், கபடி விளையாட்டு பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்க ஊருக்கு வருகிறார்.
ஊருக்கு வந்த நாயகிக்கு, நாயகன் பழக்கமாக… கபடி டாக்குமெண்ட்ரியை உருப்படியாய் எடுத்து வைக்கிறார் நாயகி. இதனுடேயே வழக்கமான காதல் இருவருக்குள்ளும் தோன்றுகிறது.
இந்த நேரத்தில் பக்கத்து ஊரில் நடந்த கபடி போட்டியில் நாயகனின் டீமுக்கும், ஆடுகளம் நரேனின் தங்கை மகனான செளந்தர்ராஜா டீமுக்கும் இடையில் நடக்கும் போட்டியில் நாயகன் ஜெயித்து பரிசுக் கோப்பையை வெல்கிறார்.
இதை சாதிய ரீதியாக தனக்கேற்பட்ட தோல்வியாக நினைக்கும் செளந்தர்ராஜா நாயகன் மீது கோபம் கொள்கிறார். இந்த இடைவெளியில் நாயகனும், நாயகியும் காதலிக்கும் விஷயம் ஆடுகளம் நரேனுக்குத் தெரிய வர.. அவசரமாக நாயகிக்கு, செளந்தர்ராஜனுடன் திருமண நிச்சயத்தார்த்தம் செய்து வைக்கிறார்கள்.
ஆனாலும் நாயகியும், நாயகனும் தங்களது காதலில் உறுதியுடன் இருப்பதாக இரு தரப்புமே நம்புகிறது. இதனால் செளந்தர்ராஜன் நாயகனைத் தீர்த்துக் கட்ட நினைக்க.. நாயகனைக் காப்பாற்ற நாயகி நினைக்க.. இருவரில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள்.. ? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
நாயகனான ராஜாவுக்கு இது முதல் படம். கிராமத்து இளைஞனுக்கேற்ற தோற்றம் என்பதால் நம்மால் ஏற்க முடிகிறது. முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் தப்பித்தார் என்றே சொல்லலாம்.
நாயகியான மாளவிகாவும் அப்படியே.. நாயகனிடமிருந்து காதல் அழைப்பினை ஏற்கும் தருணத்திலும், பாடல் காட்சிகளிலும் காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆடுகளம் நரேன் வழக்கம்போல ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சாதி வெறியில் காதலனின் கையை வெட்டும்போதும், சாதிப் பித்து தலைக்கேறி கோபத்தில் அவர் கத்தும் ஆக்ரோஷ நடிப்புதான் அவர்கள் செய்வதெல்லாம் தவறு என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதே நரேன்தான் மகளை இழந்த பின்பு கதறும் காட்சியில் ஒரு தந்தையின் உணர்வை வெளிக்காட்டியிருக்கிறார்.
சரண்யாவை கிராமத்து அம்மா கதாப்பாத்திரத்தில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்பார்களே..!? அந்தக் கூற்றை இந்தப் படத்திலும் நிரூபித்திருக்கிறார் சரண்யா.
தன் மகனை கண்டிக்கச் சொல்லி வரும் பெண்களிடம் கெத்தாக பேசி திருப்பியனுப்பும்போதும், கபடி விளையாடும் மகனை கிண்டல் செய்துவிட்டு போன அண்ணன், மகன் ஜெயித்துக் காட்டியவுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ளக் கேட்டு வரும்போது நைச்சியமாக அண்ணனையும், அண்ணியையும் குத்திக் காட்டிப் பேசுவதிலும் தாய்க்கான கேரக்டரை வைச்சு செய்திருக்கிறார் சரண்யா.
அதேபோல் மகனை மாட்டு வண்டியில் வைத்து “யாராச்சும் காப்பாத்த வாங்களேன்” என்ற கதறலுடன் இழுத்து வரும் காட்சியில் ஒட்டு மொத்த அனுதாபத்தையும் பெற்றுவிட்டார் சரண்யா. கிளைமாக்ஸில் “உன் மகன் எலும்பையும், சாம்பலையும் தனியா பிரிச்சு எடுத்திட்டு போ” என்று ஆடுகளம் நரேனிடம் குமுறும் காட்சியிலும் இந்தப் படத்தின் ஜீவனை கொடுத்திருக்கிறார் சரண்யா. பாராட்டுக்கள். அதேபோல் இந்த அளவுக்கு இவரை நடிக்க வைத்திருக்கும் இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
செளந்தர்ராஜா வில்லன் கதாப்பாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். மேலும் ‘ஆடுகளம்’ நரேனால் பாதிக்கப்பட்ட காதலனாக நடித்தவரும் தனது ஆக்ரோஷ நடிப்பை சிறப்பாகக் காண்பித்து கதைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.
‘கஞ்சா’ கருப்பு, ‘காதல்’ சுகுமார் மற்றும் சக நண்பர்கள் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர். இருந்தாலும் ‘கஞ்சா’ கருப்புவின் கதாப்பாத்திரம் திணிக்கப்பட்டது போலவேதான் தெரிகிறது.
கிராமத்து அழகை படம் நெடுகிலும் பல காட்சிகளிலும் அழகாகப் படமாக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர். பாடல் காட்சிகளில் அழகான மாண்டேஜ் ஷாட்களில் நாயகன், நாயகியைவிடவும் கிராமத்து சுற்றுப்புறம்தான் அழகாகத் தெரிகிறது.
“வீரத்தமிழன் விளையாட்டுடா…” என்ற கபடிக்கான பாடலும், “சிட்டு சிட்டு குருவி” பாடலும் கேட்கும் ரகம். பாடல்களைவிடவும் பாடல் காட்சிகள் சிறப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
படத்தில் கபடி விளையாட்டை மிகத் தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார்கள். கிளைமாக்ஸ் காட்சி இதுவரையிலும் சாதி சம்பந்தமான படங்களில் காண்பிக்கப்படாதது. இருந்தும் அந்தக் காட்சியை இன்னும் அழுத்தமாகப் படமாக்கியிருக்க வேண்டும். ஜஸ்ட் ஏதோ மிஸ்ஸிங்.
அருவா சண்ட – சாதிக்கு எதிரான சண்டைதான்..!
Post a Comment