எல்.ஐ.சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன், தாய் தந்தை இல்லாத பெண் லிஜோமால் ஜோசை திருமணம் செய்கிறார். இவர்கள் இரண்டு பேரும் சென்னையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வருகிறார்கள். காதல் அன்பு பாசம் என்று இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் போது கதாநாயகியின் சகோதரி ஒரு வேலை விஷயமாக சென்னைக்கு வந்து இவர்கள் வீட்டில் தங்குகிறார். அப்போது கதாநாயகனின் உண்மையான முகத்திரை வெளிகாட்டப்படுகிறது. அந்த பெண்ணிடம் கதாநாயகன் தப்பாக நடக்க முயலும் போது நடந்த சம்பவத்தில் கீழே விழுந்து மயக்கம் அடைந்து விடுகிறார்.
DOWNLOAD HD SOON
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பும் மனைவி கணவரை இந்த நிலையில் பார்த்து அதிர்ச்சியாக, அப்போது கணவரின் மொபைல் போனிலிருந்து அவரின் கள்ளக்காதலை பற்றி தெரிந்து கொள்கிறார். கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்த மனைவிக்கு கணவரின் கள்ளக்காதல் விஷயம் தெரிந்து, அருகில் இருந்த அருவாளை எடுத்து கணவர் கழுத்தில் ஒரே வெட்டாக வெட்டி கொலை செய்து விடுகிறார். இதற்குப் பிறகு ஹீரோவை தேடி வீட்டிற்கு அவர் முன்னாள் காதலி வருகிறார். கணவனின் சடலத்தை வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்த லிஜோமோல் அடுத்து என்ன செய்தார் என்பது தான் மீதி கதை.
Enjoy HD Movies
Join Telegram Channel
https://t.me/moviesdahdd
இந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் முன்னாள் காதலியாக பிக் பாஸ் லாஸ்லியா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் லாஸ்லியாவின் நடிப்பு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. பூரணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த லிஜோமோல் பொதுவாகவே நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். அதேபோல அவருக்கு இணையாக இந்த திரைப்படத்தில் லாஸ்லியாவும் சிறப்பாக நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கோவிந்த் வசந்தாவின் இசை மற்றும் மென்மையான பின்னணி இசையும் இந்த திரைப்படத்திற்கு புதிய கோணங்களை கொடுத்துள்ளது.
அதேபோல கார் வீடு அடுக்குமாடி குடியிருப்பு சுற்றி நடைபெறும் காட்சிகளை ஒளிப்பதிவாளர் காத்தவராயன் ஒரு கிரைம் கதைக்கு தேவையான காட்சி கோணங்களில் பார்வையாளர்களுக்கு பதட்டமாக படம் பார்க்கும் ஒரு அனுபவத்தை கொடுத்துள்ளார். முக்கியமாக இந்த திரைப்படத்தில் எங்கேயும் போர் அடிக்காமல் ஒரு க்ரைம் திரில்லராக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் ஜென்டில்வுமன் திரைப்படம் அமைந்துள்ளது.
திருமணமான ஒரு ஆண் திருமண உறவை தாண்டி வைத்திருக்கும் உறவு, அதனால் பெண்கள் எப்படி பாதிப்பு அடைகிறார்கள் என்றும் நம் வாழ்வில் பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அழகாக ஒரு கிரைம் திரில்லர் திரைக்கதையில் அமைத்து திரைப்படமாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ஜோஸ்வா சேதுராமன். மொத்தத்தில் ஜென்டில் வுமன் திரைப்படம் ரசிகர்களை தியேட்டர் சீட்டின் நுனியில் அமர வைத்துள்ள ஒரு பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படம் ஆகும்.
Post a Comment