Home » , » Perusu Movie Review

Perusu Movie Review

அப்பா இறந்த பின்னரும் அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பெருசாக முளைத்து நிற்கும் பிரச்சனையை இரு மகன்கள் எப்படி சமாளித்தார்கள். இந்த அடல்ட் காமெடி படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? அல்லது ஏமாற்றியதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க.. பெருசு கதை: ஆலஸ்யாம் என்கிற பெருசு ஊரில் தனது நண்பர்களுடன் வயதான காலத்திலும் கெத்தாக வலம் வருகிறார். 

DOWNLOAD

ஆற்றில் பெண்கள் குளிக்கும் இடத்தில் இளைஞன் ஒருவனை ஆரம்ப காட்சியில் போட்டு அடிக்கிறார் அந்த பெருசு. அதற்காக அவரை பழிவாங்க அவன் துடிக்கிறான். வீட்டில் வந்து டிவி பார்த்துக் கொண்டே இருக்கும் அப்பாவை அந்த ஆற்றங்கரை பஞ்சாயத்துக்காக திட்டிக் கொண்டே வரும் ஸ்கூல் ஹெட்மாஸ்டர் சாமிக்கண்ணு (சுனில்) அப்பா இறந்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாவதை விட அப்பாவின் இடுப்புக்கு கீழ் ஏற்பட்ட வினோதத்தை பார்த்து ஷாக் ஆகிறான்.

Enjoy HD Movies
Join Telegram Channel 
https://t.me/moviesdahdd

குடிகார தம்பியாக ஒயின்ஷாப்பில் அறிமுகமாகும் துரை (வைபவ்) அண்ணன் அழைத்ததும் வீட்டுக்கு வந்து அப்பாவை அந்தக் கோலத்தில் பார்க்க எப்படி இப்படி? என கேட்க படமும் ஆரம்பிக்கிறது. அம்மா, சித்தி, மனைவிமார்கள் என குடும்பத்தினர் அனைவரும் வந்து பார்த்து ஷாக் ஆகின்றனர். அப்பாவின் மானம் இறப்புக்குப் பிறகும் போகக் கூடாது என்கிற நிலைப்பாட்டுடன் குடும்பம் அந்த பெருசாக நிற்கும் பிரச்னையை எப்படி சமாளித்து இறுதிச்சடங்கு நடத்தினர் என்பதுதான் இந்த பெருசு படத்தின் கதை. 
படம் எப்படி இருக்கு?: இறந்து போன அப்பாவை நினைத்து இழவு வீட்டில் அழுவதற்கு பதிலாக குடும்ப மானம் காற்றில் பறந்துவிடக் கூடாது என்பதற்காக தலைமை ஆசிரியரான சுனில் தனது குடிகார தம்பியை சமாளித்துக் கொண்டு இந்த பிரச்னையையும் சமாளிக்கும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சீரியஸாக இருந்து அவர் மட்டுமே ரசிகர்களை சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். குடிகாரர் போல நடிக்க முயற்சித்திருக்கும் வைபவின் நடிப்பு பெரிதாக எடுபடவில்லை. 
அம்மாவாக நடித்துள்ள தனம் மருமகள்களாக வரும் சாந்தினி தமிழரசன், அறிமுக நடிகை நிஹாரிகா அவர்களது சொத்துக்காக ஆசைப்படும் அம்மாக்கள், பக்கத்து வீட்டு டிஸ்டர்ப் ஆன்ட்டி என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் கஜ கஜவென வந்து கொடுத்துள்ள வசனங்களை மட்டுமே பேசி செல்கின்றனர். மாமனாரை மருமகள்கள் அப்படி பார்ப்பதும் தங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை என பேசுவதெல்லாம் நல்ல நடிப்புடன் படமாக்கப்பட்டிருந்தால் ரசித்திருக்கலாம். கிரேஸி மோகன் காமெடி வசனங்கள் போல படம் முழுவதும் ஏகப்பட்ட காமெடி வசனங்கள் வருகின்றன. ஆனால், அதை சரியான டைமிங்குடன் நடிகர்களை பேச வைக்க இயக்குநர் இளங்கோ ராம் திணறியதுதான் படத்திற்கு பெரிய பிரச்னையாக அமைந்துள்ளது.
விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், முனீஷ்காந்த், பால சரவணன் என ஏகப்பட்ட காமெடி நடிகர்களை அடிக்கடி படத்துக்குள் கொண்டு வந்தால் ரசிகர்களை சிரிக்க வைத்து விடலாம் என இயக்குநர் நினைத்துள்ளார். ஆனால், பால சரவணன் மட்டுமே தனது நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். எப்படி இந்த பிரச்னையை ஊராருக்கு தெரியாமல் செய்யப் போகின்றனர் என்கிற பதைபதைப்பை கொண்டு போகாமல் அப்படி தெரிந்தால் தான் என்ன? என்கிற அளவுக்கு பெருசுக்கு இருக்கும் சின்ன வீடு அம்பலமாகும் விஷயத்தை எல்லாம் வைத்து இயக்குநர் சொதப்பி விட்டார். 
அட்லீஸ்ட் தலைமையாசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனிலின் பள்ளியில் இருந்து யாராவது வந்து பார்த்தால் அசிங்கமாகிவிடும் என்பது போல் ஒரு கதாபாத்திரத்தை வைத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். அவரது நண்பனாக ஆட்டோ ஓட்டும் ரெடின் கிங்ஸ்லி கூட சுனிலை மாகாளி சுனில் போலவே ட்ரீட் செய்யும் விதமெல்லாம் ஒட்டவே இல்லை. குடும்பஸ்தன் படத்தை போல குறைவான பட்ஜெட்டில் எடுத்து ரசிகர்களை நிறைவாக இந்த பெருசு படம் அவர்களின் புரமோஷன் போல பெருசாக சிரிக்க வைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே முக்கிய பிரச்னையை வெளிச்சம் போட்டுக் காட்டி அந்த இடத்திலும் இயக்குநர் முக்கிய பாயின்ட்டை விட்டுவிட்டார். 
கடைசி வரை பில்டப்பாவது பண்ணி ரசிகர்களின் ஆர்வத்தை டிரெய்லரில் தூண்டியதை போல தூண்டியிருக்கலாம். பிளஸ்: பெருசு படத்துக்கு பெரிய பலமே சுனில் ரெட்டியின் நடிப்பு மட்டும் தான். ஒரே வீட்டுக்குள் அதிலும் இழவு வீட்டில் நடக்கும் விஷயங்களை காமெடி படமாகவும் அடல்ட் காமெடி படமாகவும் யோசித்த விதத்தில் இயக்குநர் இளங்கோ ராம் பாஸ் செய்திருக்கிறார். சீரியல் போல தெரிந்துவிடாத அளவுக்கு ஒளிப்பதிவாளர் சத்ய திலகம் ஒரே வீட்டுக்குள் அத்தனை பேரையும் வைத்துக் கொண்டு அழகாக மேனேஜ் செய்திருப்பது சிறப்பது. படம் முழுவதும் ஸ்க்ரிப்டில் காமெடி வசனங்கள் இடம்பெற்றிருந்தாலும் சில இடங்களில் தியேட்டரில் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார் இயக்குநர். 
ஆனால், கதை மற்றும் திரைக்கதை உருவாக்கத்திலும் நடிகர்களிடம் வேலை வாங்கும் இடத்திலும் அவருக்கு இன்னமும் பயிற்சி வேண்டும் என்பதுதான் படத்தின் மேக்கிங்கை பார்த்தால் தெரிகிறது. ஆட்டோவில் இறந்த அப்பாவை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் காட்சியும் பெண் டாக்டரிடம் மை ஃபாதர் பென் இஸ் ஸ்ட்ரெய்ட் என எழுதிக்கொடுப்பது எல்லாம் வொர்க்கவுட்டே ஆகவில்லை. பெருசு படத்துக்கு சுனில் மெனக்கெட்ட அளவுக்கு கூட வைபவ் பெரிதாக மெனக்கெடல் போடாதது பெரிய மைனஸாகவே மாறியுள்ளது. 
பிரபல இன்ஃப்ளூயன்சரான நிஹாரிகா இந்த படத்தின் மூலம் நடிகையாக மாறியுள்ளார். படம் முழுவதுமே அவர் மட்டும் தனியாக ஜாலியான ஜோனில் இருப்பது போலவே நடித்திருக்கிறார். கடைசியாக எதற்காக பெருசுக்கு அப்படியொரு பிரச்னை ஏற்பட்டது என்பதை சொன்னவிதம் சிறப்பு. முதல் பாதியில் ரசிகர்களை சில இடங்களில் சிரிக்க வைத்தது போல இரண்டாம் பாதி முழுவதுமே ஒரு ரோலர் கோஸ்டர் ஃபன் ஃபியூனரல் ரைடு போயிருந்தால் இந்த படம் பெருசாக மாறியிருக்கும்.
Share this article :

Post a Comment