அசல் (Aasal) சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், சரணின் இயக்கத்தில் பெப்ரவரி 5,2010 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். அஜித் குமார், சமீரா ரெட்டி, பாவனா மற்றும் பிரபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் ஆகிய அஜித்தின் வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது, இதனால் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படத்தின் கதையை யூகி சேது எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் குமார் நடித்த வில்லன் திரைப்படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியில் டான் கா முகாப்லா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
Post a Comment