பத்திரிகையாளராக யமுனா (நயன்தாரா) யூடியூபில் பேய் காணொளிகளை உருவாக்கி வெளியிடுவதில் ஆர்வமுடையவர். யமுனாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைப்பெறுகின்றது. திருமணத்தில் விருப்பமில்லாமல் கிராமத்தில் இருக்கும் பார்வதி பாட்டி (குலப்புள்ளி லீலா) வீட்டிற்கு செல்கிறார். மற்றுமொரு காட்சியில் அமுதன் (கலையரசன்) நிகழும் தொடர் திடீர் மரணங்களை பற்றி விசாரித்து வருகிறார். அவர் தேடிச் செல்லும் இரு நபர்கள் மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து போகிறார்கள். திடீர் மரணங்களுக்கு காரணம் பவானி என்று கருதும் அதிர்ச்சியடைகிறார்.
DOWNLOAD
இரவில் வீட்டுக்கூரையில் ஏறி பவானி என்று கத்துகிறார். யமுனா, பார்வதி, மணி (யோகி பாபு), மணியின் மருமகன் பாப்லூ (அஸ்வந்த் அசோக்குமார்) ஆகியோர் தொடர்ந்து யூடியூபில் பேய் காணொளிகளை வெளியிடுகின்றனர். ஒரு நாள் யமுனாவும் அவரது பாட்டியும் பேயினால் தாக்கப்படுகிறார்கள். மறுநாள் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பார்வதி பாட்டி மரணமடைகிறார். பார்வதி பாட்டியின் மரணத்தின் பிறகு பப்லூ யமுனாவிடம் "பவானியக்கா நல்லவங்க" எனக் கூறி பேயுருவம் கொண்டு மறைந்து போகிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அவ்வளவு காலமும் மணியின் மருமகன் என்று எண்ணியிருந்த சிறுவன் பேய் என்பதை அறிகிறார். அமுதன் பவானியின் ஆவியோடு பேசுகிறார். பழிவாங்குவதை நிறுத்தும்படி வேண்டுகிறார். பவானியின் ஆவி யமுனாவை கொல்ல வேண்டும் என்கிறது. அமுதனும்ம யமுனாவும்ற்று சந்திக்கின்றனர். பவானியை பற்றி முழு விபரமும் அறிந்த அமுதனிடம் பவானி யார்? என்று வினவுகிறார். அமுதன் பவானியின் கதையை யமுனாவிடம் கூறுகிறார். பவானி யமுனாவை பழிவாங்கும் படலத்தில் இருந்து யமுனா எவ்வாறு மீளுவார் என்பதும், பவானியின் மரணத்தில் யமுனாவின் பங்கு என்ன என்பதுமே இந்த திரைப்படத்தின் மீதிக்கதை.
Post a Comment