சென்னை: தந்தையின் இடத்தை பிடிக்க மகன்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை இரத்தமும் சதையுமாக சொல்கிறது செக்கச் சிவந்த வானம். இந்த படத்தின் கதையை தெரிந்து கொள்வதற்கு முன், கதாபாத்திரங்களின் அறிமுகத்தை முடித்துவிடலாம்.
DOWNLOAD
சிறுவர்களை கவர்ந்த ராமாயணா அனிமேஷன் படம் எப்படி இருக்கு?" ரவுடியாக வாழ்க்கையை ஆரம்பித்து, மிகப்பெரிய தொழிலதிபராக வளர்ந்து நிற்பவர் சேனாபதி (பிரகாஷ்ராஜ்). சேனாபதி - ஜெயசுதா தம்பதிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் வரதன் (அரவிந்த்சாமி). அவருடைய மனைவி சித்ரா (ஜோதிகா), துணைவி பார்வதி (அதிதி ராவ் ஹிதாரி). சென்னையில் அப்பாவுக்கு துணையாக அடிதடி வேலைகளை செய்து வருகிறார். இரண்டாவது மகன் தியாகு (அருண் விஜய்). மனைவி ரேணு (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் குழந்தைகளுடன் துபாயில் ஷேக்குகளுடன் சேர்ந்து தொழில் செய்து வருகிறார்.
Download Diskwala app
Enjoy HD Movies
மூன்றாவது மகன் எத்தி (சிம்பு). செர்பியாவில் காதலி சாயாவுடன் (டயானா எர்ரப்பா) இணைந்து ஆயுதம் கடத்தும் தொழில் செய்து வருகிறார். மூத்த மகன் வரதனின் பள்ளி தோஸ்த் இன்ஸ்பெக்டர் ரசூல் (விஜய் சேதுபதி). மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆகி சரக்கும் கையுமாக வரதன் அண்ட் பிரதர்ஸ் உடன் சுற்றி திரிகிறார்.
இவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். இப்போது கதைக்கு போகலாம். தந்தை சேனாபதியின் இடத்தை பிடிக்க மூன்று மகன்களுக்கும் ஆசை. இந்நிலையில் சேனாபதி மற்றும் அவரது மனைவி மீது திடீர் தாக்குதல் நடக்கிறது. இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சேனாபதியை கொல்ல முயன்றது எதிரணியைச் சேர்ந்த சின்னப்பதாஸ் (தியாகராஜன்) என சந்தேகப்படுகிறார் வரதன். உண்மையில் சேனாபதியை கொல்ல முயன்றது யார் என்பதே படத்தின் கதை.
ஒரு பாராவுக்குள் அடங்கிவிடும் இந்த கதையை தான், முழு நீள படமாக டெவலப் செய்திருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். 35 ஆண்டுகளில் அவருக்கு இது 26வது படம். இத்தனை ஆண்டுகளாக சினிமா எடுத்துக்கொண்டிருப்பதற்கு, மணிரத்னத்தின் இந்த நிதானம் தான் காரணம். திரைக்கதை, வசனம், பாடல்கள், ரொமான்ஸ் என இது ஒரு அக்மார்க் மணிரத்னம் படம். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவருமே மனதில் நிற்கிறார்கள். அந்த அளவுக்கு பாத்திர படைப்புகள் கச்சிதம். தனது வழக்கமான ஸ்டைலிஷ் காட்சி அமைப்புகளால் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். ஆனால் ஆக்ஷன் படம் என்பதற்காக இவ்வளவு வன்முறையும், கொலைகளும் தேவைதானா மணி சார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் எல்லாமே சூப்பர். சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி மென்சாரலாக கடந்து போகிறது மழை குருவி பாடல். செவந்து போச்சு நெஞ்சே பாட்டு தியேட்டரைவிட்டு வெளியே வந்தாலும் கூட முணுமுணுக்க வைக்கிறது. ஆனால் பாடல்கள் அனைத்தும் காட்சிகளின் வழியே கடந்து செல்கின்றன. மணிரத்னம் படத்தில் தனியாக பாடல்கள் இல்லாதது ஏமாற்றம் தான். பாடல்களைவிட பின்னணி இசை தான் படத்தின் மிகப்பெரிய பலம். ரஹ்மானின் பின்னணி இசை, படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது.
Post a Comment