சுரேஷ் கோபியின் உடன்பிறவா சகோதரன் அஜீத். கோபி ஆர்டர் போட்டால் பார்ட்டிகளைத் தேடிப்பிடித்து 'விஷ்க்' என்று சீவிவிடுவது அஜீத்தின் வேலை. உப வேலையாக லைலாவைக் காதலிக்கிறார்.
அதே சமயத்தில் சுரேஷ்கோபியின் தங்கை திவ்யாஶ்ரீயை லைலாவின் அண்ணன் ஷ்யாம் காதலிக்க, அஜீத் அதற்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். ஷ்யாம் கணேஷும் திவ்யாஶ்ரீயும் காரில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது. திவ்யாஶ்ரீ இறந்துவிடுகிறார். தங்கை சாவுக்கு ஸ்யாம்கணேஷ்தான் காரணம் என்று நினைத்து அவரைப் பழிவாங்கத் துடிக்கும் சுரேஷ்கோபி ஒரு பக்கமும் ஷ்யாம் கணேஷை காப்பாற்றத் துடிக்கும் அஜீத் ஒரு பக்கமுமாக எதிரும் புதிருமாகத் திரும்ப கதை சூடு பிடிக்கிறது. சுரேஷ்கோபி மனம் மாறுவதும் அஜீத்தின் காதல் நிறைவேறுவதும் மீதி கதை.
Post a Comment