எனை நோக்கி பாயும் தோட்டா என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தமிழ் காதல் திகில் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை கௌதம் மேனன் எழுதி, இயக்கி, தயாரித்தார். படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ம.சசிகுமார் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தனர். படத்தயாரிப்பு 2016 மார்ச்சில் தொடங்கியது, ஆனால் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வரும் இன்னொரு படமான துருவ நட்சத்திரம் பட வேலைகளால் 2017 சனவரியில் தாமதம் ஏற்பட்டது.
DOWNLOAD
2017 சனவரியில், முன்னர் மிஸ்டர். எக்ஸ் என அழைக்கப்பட்ட இசையமைப்பாளர், உண்மையில் தர்புகா சிவா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2017 அக்டோபரில் கௌதம் மேனன் சிவா ஈடுபடுவதை உறுதி செய்தார்.
Post a Comment