டாப்ஸி பழைய வீடியோ கேம்களின் புது வடிவங்களை தயாரிப்பவர். தனிமையில் தன் வேலைக்காரியுடன் வசிக்கிறார். இருட்டைக் கண்டாலே அவருக்கு பயம். ஒரு வருடத்திற்கு முன் ஒரு புத்தாண்டு தினத்தில் வன்புணர்வுக்கு ஆளாகி தப்பித்துள்ளார். அது அவரை சைக்கலாஜிகலாக பாதிக்கிறது. அதே நேரம் அவர் ஒரு வருடம் முன் போட்டுக் கொண்ட டாட்டூ வலிக்க ஆரம்பிக்கிறது. அந்த் டாட்டூ ஒரு வருடம் முன் சைக்கோ கொலைகாரனால் கொல்லப்பட்ட ஒரு பெண்ணின் ரத்தத்தில் போடப்பட்டது என தெரிய வர கேம் ஆரம்பிக்கிறது. இருள் சூழ்ந்த இரவில் இருட்டுக்கு பயந்து சாகும் டாப்ஸி, நகர முடியாமல் வீல்சேரில் இருந்து கொண்டு சைக்கோ கொலைகாரனிடம், இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை.
DOWNLOAD
படம் முழுதும் ஒரு வீட்டுக்குள் நடக்கும் ஒரு துரத்தல் தான். ஆனால் முதல் பாதியில் அதற்கான எமோஷனை மிகச் சரியாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார்கள். டாப்ஸியின் பிரச்சனையை நமக்கு அறிமுகப்படுத்தும் விதத்தில் நம் சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் வன்புணர்வின் பிரச்சனைகளையும் நமக்குள் அழுத்தமாக பதித்துள்ளார்கள். டாப்ஸியின் பிரச்சனை நமக்கு நெருக்கமாகி நாம் டாப்ஸிக்கு அனுதாபப்படுவதால் பின்பாதியில் நடக்கும் துரத்தல்களில் மனதின் படபடப்பு கூடுகிறது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
பின்பாதியில் கொலை செய்ய துரத்தும் கேம் முழு கேமாக மாறும் அந்த டிவிஸ்ட் ஒரு சர்ப்ரைஸ். ஆனால் இன்றைய ரசிகர்கள் இந்த கதை சொல்லலைபுரிந்து கொள்வார்களா? என்பது சந்தேகம் தான். சினிமா விஷுவல் மீடியம் என்பதை உணர்ந்து செய்திருக்கும் படம். முழுக்க வசனங்கள் குறைவாக நகரும் காட்சிகள் நம் படபடப்பை மெயிண்டைன் செய்வதிலும் ஜெயித்துள்ளது. இறந்து போன பெண்ணின் அம்மாவிற்கும் டாப்ஸிக்கும் நடக்கும் உரையாடலை காட்சிப்படுத்திய விதம் அற்புதம்.
டாப்ஸி, வேலைக்காரியாக வரும் வினோதினி டாக்டர் என பாத்திரங்கள் மிகக்குறைவு. மொத்தப்படமும் டாப்ஸியின் தோளில். அதை உணர்ந்து ரசித்து செய்துள்ளார். வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இடத்திலும் பின்பாதியில் உயிருக்கு போராடும் பெண்ணாகவும் வெகு அற்புதமாகவே செய்துள்ளார். டாப்ஸி தான் பயப்படும் இடங்களில் நம்மையும் சேர்த்து பயப்பட வைக்கிறார்.
ஒரு வகையில் இது ஒரு சோதனை முயற்சி என்பதை உணர்ந்தே செயல்பட்டுள்ளார்கள் தயாரிப்பாளர். முதல் மொத்த குழுவினரும். கதை எழுதப்பட்டிருக்கும் விதம், அத்தனை ஆச்சர்யம். அந்த ஆச்சர்யங்களை நிஜப்படுத்தி இருக்கிறது ஒளிப்பதிவு.
முன்பாதி டாப்ஸி பதட்டம் கொள்ளும் காட்சியில் வரும் ஸ்லோமோஷன்,பிற்பாதியில் துரத்தலில் வரும் காட்சிகோணங்கள் லைட்டிங் என ஒளிப்பதிவு அபாரம். வசந்த் பெரிதாய் கவனிக்கப்படுவார். எடிட்டிங்க் கனகசச்சிதம். ரிச்சர்ட் கலக்கியிருக்கிறார், பின்பாதி காட்சிகள் ஒரு கேம் போலவே வடிவமைக்கப்பட்டிருப்பது அழகு. இசை ரான் ஈதன், யோஹான். பாடல்கள் இல்லாத பின்னனி இசை மட்டுமே!.திரில் அனுபவத்தை ரசிகனுக்கு கடத்தும் அதே நேரத்தில் படத்தின் கதையை எந்தப்புள்ளியிலும் கெடுக்காமல் ஒரு அனுபவமாக மாற்றுகிறது. பழைய கேம்களில் பின்னனியை மிகச்சரியான திரில் அனுபவமாக்கியுள்ளது, அட்டகாசம்.
இயக்கம் அஸ்வின் சரவணன். மாயா எனும் முதல்படமே ஒரு சோதனை முயற்சி தான். கருப்பு வெள்ளை கலர் காட்சிகளை பிய்த்து போட்டு கதை சொல்லி ஜெயித்தவர். இதில் மீண்டும் மற்றொரு முயற்சியில் இறங்கியுள்ளார். ரசிகர்களுக்கு புரிய வேண்டுமென மெனக்கெடாமல் சினிமாவில் அடுத்த பயணம் செய்துள்ளார். காட்சி ஊடகம் என்பதன் அர்த்தத்தை காட்டியதில் ஜெயித்துள்ளார். பெண்கள் மீதான வன்கொடுமமைகளை அழகாய் ஒரு கமர்ஷியல் படத்திற்குள் அழுத்தமாய் பேசியதற்கு வாழ்த்துக்கள்
Post a Comment