தேனி மாவட்டம் கோம்பை கிராமத்தில் தன் மனைவி (ஷிவதா) மற்றும் பிள்ளைகளுடன் லாரி டிரான்ஸ்போர்ட் நடத்திவருகிறார் ஆதி (சசிகுமார்). அவரும் அதே கிராமத்தில் செங்கல் சூளை நடத்திவரும் கர்ணாவும் (உன்னி முகுந்தன்) உயிர் தோழர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு, உறவுகள் இல்லாமல் கோயிலில் கிடந்த சிறுவன் சொக்கனை (சூரி), தன் வீட்டிற்கு அழைத்து வந்து, தன்னுடனே வைத்துக்கொள்கிறார் சிறுவனான கர்ணா. சொக்கன் வளர்ந்து, கர்ணாவிற்காக எதையும் செய்யும் விசுவாசி ஆகிறான். ஆதியும் அவரது குடும்பமும் சொக்கனை தன் குடும்பத்தில் ஒருவனாகவே பார்க்கிறது.
DOWNLOAD
இந்நிலையில், அக்கிராமத்திலுள்ள கோம்பை அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலம் சென்னையில் இருக்கிறது என்பதையும், அது பல கோடி ரூபாய் மதிப்புக்குப் போகும் என்பதையும் அறியும் அமைச்சர் (ஆர்.வி.உதயகுமார்), அந்நிலத்தைச் சட்டத்திற்குப் புறம்பாக அபகரிக்க நினைக்கிறார். அமைச்சரின் இந்த பேராசை, ஒற்றுமையாக இருக்கும் ஆதி, கர்ணா, சொக்கன் ஆகியோரின் வாழ்க்கையிலும், அவர்களின் குடும்பங்களிலும் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பேசுகிறது ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரின் 'கருடன்'
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
தன் முதிர்ச்சியான நடிப்பால், அவர் இல்லாத காட்சிகளிலும் அவரின் தாக்கத்தை உணர வைக்கும் அளவு திரையை ஆக்கிரமித்திருக்கிறார் சசிகுமார். நாயக பிம்பம் தவிர்த்து கதையின் வலிமையான ஓர் அங்கமாக வருவதற்கு முன்னெடுத்த அவரின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது. நட்பு, வன்மம் என இரண்டுக்கும் நடுவே தள்ளாடும் கதாபாத்திரத்தைப் பெரிய குறைகளின்றி கரைசேர்த்திருக்கிறார் உன்னி முகுந்தன். ஆனாலும், தேனி வட்டார வழக்கை மலையாள மணத்தில் அவர் பேசியிருப்பது துருத்தலாகத் தெரிகிறது.
இரண்டாம் பாதியில் அழுத்தமான பங்களிப்பைத் தந்திருக்கிறார் ஷிவதா. இன்னும் இத்தகைய ஆழமான பாத்திரங்கள் அம்மணிக்கு வந்து சேரட்டும்! மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் தேவையான, அதேநேரம் டெம்ப்ளட்டான மிரட்டலைத் தந்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ரேவதி சர்மா ஆகியோர் நடிப்பில் குறையேதுமில்லை.
திரையாக்க ரீதியாக ஒரு வழக்கமான ஆக்ஷன் சினிமாவாக மாறியிருக்க வேண்டிய படத்தை, தங்களின் கச்சிதமான ட்ரோன் ஷாட்கள், ஸ்லோமோஷன் காட்சிகள், அழுத்தமான ப்ரேம்கள், நேர்த்தியான கட்கள், வன்முறையின் வீரியத்தைக் கடத்தும் பகல் நேர ஒளியமைப்பு என ரசிக்க வைத்திருக்கிறது ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஆ.வில்சன் - படத்தொகுப்பாளர் பிரதீப்.இ.ராகவ் கூட்டணி. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 'ஒத்தப்பட' பாடல் மட்டும் கதையோடு வந்து வீரியமிக்கதாக மாறியிருக்கிறது. அவரின் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளையும், ஆக்ஷன் காட்சிகளையும் சிறப்பாக மெருகேற்றியிருக்கிறது. கோயில் திருவிழா, பழைய அரண்மனை, செங்கல் சூளை எனத் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார் கலை இயக்குநர் ஜி.துரைராஜ். மகேஷ் மாத்யூவின் சண்டை இயக்கமும் கவனிக்க வைக்கிறது.
நட்பு, விஸ்வாசம், பகை, வஞ்சம் என்று விரியும் இயக்குநர் வெற்றிமாறனின் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பிரதான கதாபாத்திரங்களை அழுத்தமாகவும் ஆழமாகவும் அணுகி, தன் நேர்த்தியான ஆக்கத்தால் இப்படத்தைத் தனித்து நிற்க வைக்கிறார் இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார். கதாபாத்திரங்களின் அறிமுகங்கள், காதல், காமெடி என்பதாக பேங்க் லாக்கர் - ஊர்த் திருவிழா எபிசோடு வரை நிதானமாகவே நகரும் திரைக்கதை, அதற்குப் பின் வேகமெடுக்கிறது. சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரின் பாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும் அதை அவர்கள் கையாண்ட விதமும் படத்துக்குப் பக்கபலமாக மாறியிருக்கின்றன. முக்கியமாக, ஆக்ஷன் ப்ளாக்காக உச்சம் பெறும் இடைவேளை காட்சியில் சூரியின் நடிப்பில் அனல்!
முதல் பாதியில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருந்த காமெடி, காதல் எபிசோடுகளைக் களைந்துவிட்டு, சீரியஸான டிராக்கில் படத்தைக் கொண்டு செல்லும் துரோக விளையாட்டுகளில் செங்கல் சூளை கணக்கான வெப்பம்! ஆனாலும், எக்கச்சக்க சண்டைக் காட்சிகள் திரைக்கதையின் உணர்வுபூர்வமான உரையாடல்களுக்குத் தொந்தரவாக இருக்கின்றன. சிறுவர்கள் வன்முறையில் இறங்குவதை வீரம் என்பதும், அதீத வன்முறையைப் பாசம் என்கிற பெயரில் நியாயப்படுத்துவதும் அபத்தமான பார்வை. கர்ணாவின் மன மாற்றத்தை போதுமான காட்சிகளுடன் விளக்காமல் போனதும் பெரும் மைனஸ்! ஒரு காட்சியை வைத்துவிட்டு, அதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதாக பிளாஷ்பேக் சென்று விளக்குவது தொடக்கத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் படம் நெடுக அதே ஐடியாவை நிறைய முறை பயன்படுத்தியிருப்பது அயர்ச்சி!
Post a Comment