SATS (Special Anti-Terrorist Squad) எனப்படும் ரகசிய படையின் தலைவராக காந்தி (விஜய்) இருந்து வந்த போது வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத சூழ்ச்சிகளை விஜய் மற்றும் அவரது டீமில் உள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முறியடித்து வருகின்றனர். தனது குடும்பத்துடன் பாங்காங்கிற்கு சுற்றுலா செல்லும் காந்திக்கு மிகப்பெரிய சிக்கல் உருவாகிறது. அதில், தனது மகனையே இழக்கிறார். அந்த அமைப்பே வேண்டாம் என இமிகிரேஷன் அதிகாரியாக வயதான காலத்தில் வாழ்க்கையை நடத்தி வரும் காந்திக்கு மீண்டும் SATS அமைப்பிடம் இருந்து அழைப்பு வர மாஸ்கோவுக்கு செல்லும் காந்திக்கு பேரதிர்ச்சி அவருடைய ரூபத்திலேயே காத்திருக்கிறது. அதன் பின்னர் நடக்கும் மோதல்களும், பாச போராட்டமும் தான் இந்த கோட் படத்தின் கதை.
Post a Comment