DOWNLOAD
காலையில் அரசு பேருந்தில் திருட்டு, அடுத்தது ஒரு மருந்துக்கடையில் ஏமாற்று வேலை, மாலை போலி டாக்டர் என ஊரை ஏமாற்றி சம்பாதிப்பதே ஜீவாவின் தொழில். சதீஷும், விவேக் பிரசன்னாவும் ஜீவாவின் நண்பர்கள். பொருளாதார மந்தநிலையால் சதீஷுக்கு வேலை பறிபோகிறது. சினிமாவில் ஹீரோவாகும் கனவில் இருக்கும் விவேக் பிரசன்னாவுக்கு பணம் தான் பிரச்சினை.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
மூன்று பேரும் ரூம் மேட்ஸ். இவர்களுடன் சிம்பான்சி குரங்கு ஒன்றும் தங்கியிருக்கிறது. அது எப்படி இவர்களுடன் வந்து சேர்ந்தது என்பது தனிக்கதை. அதற்காக டைட்டில் கார்டிலேயே பெரிய கதை சொல்கிறார்கள். இதற்கிடையே விவசாயியான அருவி 'மதன்', குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார். நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி சென்னைக்கு வந்து வங்கிகளில் லோன் பெற முயற்சித்துக்கொண்டிருக்கிறார்.
ஒரு கமர்சியல் பேன்டசி படத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்தையும் திணித்து, கலகலப்பான திரைக்கதை மூலம் வெற்றி பெற முயன்றிருக்கிறார் இயக்குனர் டான் சாண்டி. முதல்பாதி படத்தில் நண்பர்களின் அலப்பறைகள் கலகலப்பூட்டுகின்றன. இரண்டாம் பாதியில் யோகி பாபுவும் வந்து சேர்ந்து கொள்வதால், படம் காமெடி சரவெடியாக மாறுகிறது. சிகப்பு பொத்தானை கண்டதும் அழும் சிம்பான்சி காங், குழந்தைகளுக்கு வான வேடிக்கை காட்டுகிறது. ஜீவா, சதீஷ், யோகி பாபு, விவேக் பிரசன்னா என அனைவரையும் அடித்து அட்ராசிட்டி செய்கிறது காங். வங்கி கொள்ளையை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், காமெடி ட்ரீட்மெண்டால் வித்தியாசப்படுகிறது கொரில்லா.
அதில் விவசாயப் பிரச்சினையையும் புகுத்தி இருப்பது அருமையான கற்பனை. தனது வழக்கமான துறுதுறு நடிப்பால் கவர்கிறார் ஜீவா. 'காங்'கிடம் பாச மழை பொழிந்து, ஷாலினியிடம் ரொமான்ஸ் செய்து, நண்பர்களிடம் அக்கறை காட்டி, அப்பாவி மக்களை ஏமாற்றி என வெரைட்டியாக பெர்பார்ம் செய்திருக்கிறார். ஷாலினி பாண்டேவுக்கு இது தான் முதல் தமிழ் படம். அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இருந்த கெமிஸ்ட்ரி, ஜீவாவுடன் ஒர்க்கவுட் ஆகவில்லை. ஜீவியுடன் நடிக்கும் படத்திலாவது ஒர்க்கவுட் ஆகிறதா எனப் பார்ப்போம்.
முதல்பாதி படத்தின் கலகலப்புக்கு சதீஷும், இரண்டாம் பாதி படத்துக்கு யோகி பாபுவும் கேரண்டி தருகிறார்கள். இவர்களுடன் விவேக் பிரசன்னாவும், காங்கும் சேர்ந்து கொண்டு, கலக்கி இருக்கிறார்கள். அளவாக நடித்து ஸ்கோர் செய்கிறார் அருவி மதன். சீனியர் ராதாரவி, கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு போகிறார். இரண்டு சீன்களில் மட்டுமே வந்து படத்தின் புரோமோஷனுக்கு உதவியிருக்கிறார் மொட்ட ராஜேந்திரன். சாம் சிஎஸ் இசையில் 'யாரடியோ' பாடல் காதலின் கொண்டாட்டம். பின்னணி இசையில் எப்போதும் வித்தியாசத்தை புகுத்தும் சாம், இந்த படத்திலும் அதை முயன்றிருக்கிறார்.
ஆனால் ஒரு சில இடங்களில் 'ஏன் இங்க இப்ப மியூசிக்', 'இது மங்காத்த தீம்மில்ல' என்பது போன்ற மைண்ட் வாய்ஸ் வந்துபோகிறது. மற்றபடி ஆல் இஸ் வெல். வெவ்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருந்தாலும், அதை எல்லாம் மறைத்து ஒரே ஊரில் தான் படம் நடக்கிறது எனும் உணர்வை ஏற்படுத்துகிறது குருதேவின் ஒளிப்பதிவு. படத்தை கலர்புல்லாக எடுத்து, கண்ணுக்கு குளிர்ச்சியூட்டுகிறார். தனது எக்ஸ்பர்ட் எடிட்டிங்கால் படத்தை போராடிக்காமல் நகர்த்தியிருக்கிறார் ரூபன். படத்தில் வரும் பல விஷயங்கள் நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை. விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை, புகைப்பிடிக்காதீர்கள் என்பது போல, இது முழுக்க முழுக்க கற்பனை என ஒரு கார்டும் சேர்த்து போட்டிருக்கலாம்.
வங்கியை சுற்றி அத்தனை போலீஸ் நிற்கும் போது, யோகி பாபு அசால்டாக வெளியே வந்து பிரியாணி வாங்கி செல்வதெல்லாம், சினிமாத்தனத்தையும் தாண்டிய உட்டாலக்கடி. லாஜிக் பற்றியும் கொஞ்சம் கவலைப்பட்டிருக்கலாம் ப்ரோ. மொத்தத்தில் ஜாலியா, ஹேப்பியா நேரத்தை செலவழிக்க கேரண்டி தருகிறது கொரில்லா.
Post a Comment