கூர்கா பரம்பரையில் வந்த யோகிபாபு காவல் துறையில் சேர முயற்சிக்கிறார். உடல்தகுதித் தேர்வில் தோல்வி அடைவதால், பெரிய ‘ஷாப்பிங் மால்’ ஒன்றில் பாதுகாவலராக பணியில் சேர்கிறார். ஒருநாள் தீவிரவாதிகள் அந்த மாலுக்குள் நுழைந்து பலரையும் பிணைக் கைதிகளாக பிடிக்கின்ற னர். கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டு கின்றனர். போலீஸாரால் உள்ளே நுழைந்து மீட்க முடியாத சூழலில், சக காவலாளி சார்லியின் உதவியுடன் பிணைக் கைதிகளை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார் யோகிபாபு. மீட்டாரா, இல்லையா? இதுவே ‘கூர்கா’.
DOWNLOAD
யோகிபாபுவுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பை வைத்து, அவரை நாயகனாக்கி முழு காமெடி படம் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் சாம் ஆண்டன். ஒன்லைனாக நல்ல கதையை யோசித்த இயக்குநர், அதற்கேற்ற நகைச்சுவை, தெளிவான கதை நகர்வு, காட்சியமைப்பு என எதையும் தராமல் தட்டுத் தடுமாறி நிற்க வைத்துவிட்டார் ‘கூர்கா’வை. வளவள வசனங்கள், மேம்போக்கான காமெடி, அதற்கு மத்தியில் வரும் சின்னச் சின்ன அரசியல் நையாண்டிகள் என எதுவுமே ஒட்டாமல், படம் முழுக்க ஒரு செயற்கைத்தனம் படர்ந்து பரவி நிற்கிறது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
எவ்வித மாற்றமும் இல்லாத உடல்மொழி யோடு, வசனங்கள் மூலமாக மட்டுமே தன் இருப்பை தக்கவைக்கிறார் யோகிபாபு. வழக்க மான தோரணை, நடை உடை பாவனை என அதே தோற்றத்தில் அறிமுகமாகும் யோகிபாபு காவல் துறையில் நுழைய முயல்வதே வேடிக்கை ஆகிவிடுகிறது. அவர் உடல்தகுதித் தேர்வில் மேற்கொள்ளும் முயற்சிகள் சிரிப்புக்கு பதிலாக எரிச்சலை ஏற்படுத்துகின்றன. ஆனால், இறுதிக் காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். அமெரிக்க தூதர் எலிசாவை காத லிக்கும் யோகிபாபு, அவரை நெருங்குவதற்கு போடும் திட்டங்கள் சுவாரஸ்யத்தை கொடுக்க வில்லை. ஆங்காங்கே சமகால சம்பவங்களை பகடி செய்திருப்பது ரசிக்க முடிகிறது.
ரவி மரியா, மனோ பாலாவின் நடிப்பு பெரி தாக எடுபடாத நிலையில் சார்லி, ஆனந்த்ராஜ் நடிப்பு ஆறுதல். சார்லி - மயில்சாமி இணையும் காட்சிகளில் நகைச்சுவை எடுபடுகிறது. காவல் துறை அதிகாரியாக வரும் ரவி மரியா இன்னும் எத்தனை படங்களில்தான் கத்திக்கொண்டே இருப்பார் என்று தெரியவில்லை.
முன்னாள் ராணுவ வீரர் களை ஏமாற்றுவது, தீவிர வாதிகளின் சதி, ஷாப்பிங் மாலில் நுழைவது, அமெ ரிக்க தூதரை பிணைக் கைதியாக பிடிப்பது, போலீ ஸார் உள்ளே நுழைய முடி யாமல் தவிப்பது என படம் நெடுக திரைக்கதை தாறுமாறாக பயணிக் கிறது.
கூர்காவின் வரலாற்றை காட்டியபடி வரும் படத்தின் அழகான தொடக்கம், அவ்வப்போது வந்துபோகும் யோகிபாபுவின் தாத்தா சென்டி மென்ட், சார்லியின் நடிப்பு இதுபோல ஆங் காங்கே சிற்சில பகுதிகளை தேடிப் பிடித்து பாராட்டவேண்டி இருக்கிறது. படத்தின் மற் றொரு ஆறுதல் கிருஷ்ணன் வசந்த் ஒளிப் பதிவு. படம் தட்டுத் தடுமாறி நிற்கும்போதெல்லாம் தன் பின்னணி இசையால் தாங்கிப் பிடிக்கிறார் ராஜ் ஆர்யன்.
திரைக்கதையில் இன்னும் கவ னம் செலுத்தி, நகைச்சுவையை கொஞ்சம் மெருகேற்றி, காவலர் களின் சேவையை தூக்கிப் பிடித் திருந்தால் மனதில் கம்பீரமாக நின்றிருப்பார் ‘கூர்கா’.
Post a Comment