நானி மற்றும் மிருணாள் தாகூரின் ஹாய் நான்னா திரைப்படம் டாடா படத்தின் ரீமேக் இல்லை என்றாலும் அந்த படத்திற்கும் இந்த படத்திற்கும் சில ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. முழு விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.. ஹாய் நான்னா கதை: பெரிய போட்டோகிராஃபராக வர வேண்டும் என விராஜ் (நானி) முயற்சித்து வருகிறார். அவருக்கும் வர்ஷாவுக்கும் (மிருணாள் தாகூர்) காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தில் முடிகிறது.
DOWNLOAD
அந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறக்கிறது. அப்படியே சில காலங்கள் முன் நகர்ந்து செல்கிறது. பிரபல புகைப்படக் கலைஞராக நானி உள்ளார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்படும் தனது மகள் மகீயை சிங்கிள் பேரன்ட்டாக வளர்த்து வருகிறார். அப்போது, யாஷ்னா (மிருணாள் தாகூர்) அந்த குழந்தையை பார்த்துக் கொள்ள வருகிறார். வர்ஷாவுக்கு என்ன ஆனது? யாஷ்னா யார்? என்கிற ட்விஸ்ட் உடன் ஹாய் நான்னா படத்தின் கதை கச்சிதமாக அமைந்துள்ளது.
Post a Comment