சௌந்தர்யா எனும் சுவீட்டி (அனுஷ்கா செட்டி) அதிக எடையுடைய, புத்திசாலியான, சுதந்திரமான பெண். அவளுக்கு அவளுடைய உடல் எடை பற்றி அதிக கவலை. இவ்வாறு இருக்க அவள் அபிஷேக் (ஆர்யா) மீது காதல் கொள்கின்றாள். முதலில் அபிஷேக் சுவீட்டியைப் பெண் பார்க்க வர அவனை அவள் நிராகரிக்கிறாள். பின்பு இருவரும் நட்பு கொள்கின்றனர்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இதன்போதே அபிஷேக் சிம்ரன் எனும் பெண்ணை காதலிப்பது சுவீட்டிக்குத் தெரியவருகிறது. இவ்வாறு இருக்கையில் சைஸ் ஜீரோ எனும் நிறுவனத்தில் தனது எடையை குறைக்க இணைகிறாள் சுவிற்றி. இணைந்த பின் தனது தோழி உடல் எடை குறைப்பு மாத்திரைகளின் பயன்பாட்டால் சிறுநீரக செயலிழப்புக்குள்ளானது அவளுக்கு தெரியவருகிறது. அதன் பின்னர் சுவிற்றி சைஸ் ஜீரொ நிறுவனத்திற்கு எதிராக தனது போராட்டத்தைத் தொடர்கிறாள். அவளுடன் அபிஷேக் மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்து கொள்கின்றனர். இப்போராட்டத்தில் அவள் எவ்வாறு வெல்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.
Post a Comment