தன் வங்கி பணத்தை களவாடியவர்களை களைய முற்படும் ஹீரோ ., சந்திக்கும்அதிர்ச சம்பவங்கள் தான் ஒட்டு மொத்த படமும். கதை : இந்திய இராணுவத்தில்அநீதியை கண்டால் பொங்கி எழும் நேர்மையான இனம் அதிகாரி விஷால். கடன் வாங்க கூச்சப்படாத அப்பா டெல்லி கணேசால் சிறு வயதிலேயே அம்மாவை இழுந்து ஊரும் வேண்டாம் , உறவும் வேண்டாம் என தங்கைக்கும் , தந்தைக்கும் மாத செலவுக்கு பணம் மட்டும் அனுப்பி விட்டு , சிட்டியில் வாழும் விஷால் ., ஒரு முறை தன்முன் கோபத்தால் தான் குடியிருக்கும் பகுதியில் ., தற்கொலை செய்து கொண்ட பக்கத்து வீட்டுக்காரன் பட்ட கடனுக்கு அவனது மனைவியிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளும் வங்கி கடன் வசூலிப்பாளரை அடித்து , உதைத்துஅதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அதற்காக அவரை மனோதத்துவ நிபுணர் சமந்தாவிடம் நல்ல மனநிலையில் விஷால் இருக்கிறார் ...என சர்டிபிகேட் வாங்கி வரச் சொல்லி விரட்டுகிறார் உயர் அதிகாரி. அதன்படி ,சமந்தாவிடம் செல்லும் விஷாலை டாக்டர் சமந்தா , அவரது சொந்த ஊரில் ஒரு மாதம் தங்கியிருந்து ஊரிடமும், உறவிடமும் தன் முன் கோப குணத்தை காண்பிக்காது திரும்பி வர சொல்கிறார் .அப்படி வந்தாரென்றால் அவருக்கு "வெரி குட்" சர்டிபிகேட் தருவதாகவும்சொல்கிறார். இதற்கு முதலில் முரண்டு பிடிக்கும் விஷால் ., வேறு வழி இல்லாமல் , ஒரு வழியாக ஊருக்கு போகிறார்.
DOWNLOAD
அங்கு தன் ஒரே தங்கையின் உயிருக்கு உயிரானகாதல் போதிய பணம் இல்லாததால் கல்யாணத்தில் முடியாதது கண்டு கேட்பார் பேச்சைக் கேட்டு தனக்கு பிடிக்காத கடனை, டூப்ளிகேட் ஆவணங்களை கொடுத்து பிரைவேட் வங்கியில்வாங்கி தங்கையின் திருமணத்தை நடத்த முயற்சிக்கிறார். அதில் பெரிய அளவில் சிக்கலில் சிக்கும் விஷால் ., பட்ட கடன் தொகையும் கைக்கு வராது , கையிலிருந்த பணமும் கூடவே வங்கி கணக்கில் இருந்து களவு போக ., இதை வெளியில் சொன்னால் வேலையும் போய் தங்கையின் மானமும் போய் விடும் எனும் சூழலில் அதிலிருந்து எப்படி ?மீண்டு ..? தங்கையின் திருமணத்தை நடத்தி வைத்து ., தன் குடும்பமானமும் போகாமல் தன் வேலையும் போகாமல் தானும் சமந்தாவை கரம்பிடிக்கிறார் ..? என்பது தான் "இரும்புத்திரை" படத்தின்கதை யும் ,கள மும் .
விஷால் பிலிம்பேக்டரி தயாரிப்பில்., "லைக்கா புரொடக்ஷன்ஸ்" வழங்கவிஷால் - சமந்தா ஜோடி நாயகர், நாயகியாக நடிக்க இவர்களுக்கு எதிராக ,ஆக்ஷன்கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்க ,மித்ரன் ஜவஹர் இயக்கத்தில்., டிஜிட்டல் மய பரிவர்த்தனைகளால் நடக்கும் நடக்கப் போகும் வில்லங்கங்களை அழகாக , அதிரடியாககாட்சிப்படுத்திக் காட்டி ., வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் "இரும்புத் திரை".
முன் கோபக்கார இளம் இராணுவ அதிகாரியாக விஷால் ,செம ஷார்ப் .காட்சிக்கு காட்சி மனிதர் மிரட்டி இருக்கிறார் மிரட்டி.. "ஊரு புல்லா கடன் வாங்குனா எவனும் மரியாதை கொடுக்க மாட்டான்..." என அப்பா டெல்லியை அதட்டுவதில் தொடங்கி ., . ஐந்தாறு பேங்க்ல பல லட்சம் கோடி கடன் வாங்கி வெளிநாட்டுக்கு ஒடின விஜய்....வை" எல்லாம் விட்டுடுங்க ..... ஐந்தாயிரம் , பத்தாயிரம் கடன் வாங்கின அப்பாவிகளை அசிங்கப்படுத்தறதை முதலில் நிறுத்துங்க" ., "அநியாயத்தை கண்டால்கோபபடுறவன் தான் மனுஷன் "சுத்தி நின்னு வேடிக்கை பார்க்குறவன் கோமா பேஷண்ட் ...", "அப்பா உங்களை அடிக்கடுவேன்னு தோணுது ...." என்பது உள்ளிட்ட அனல் தெறிக்கும் வசனங்களில் அதிரடி செய்கிறார் மனிதர். வாவ்!
சமந்தா சைக்ரியாடிஸ்ட்டாக சாப்ட்டாக , கியூட்டாக விஷாலை மட்டுமின்றி நம்மையும்நீட் செய்கிறார். காமெடியன்ஸ் : ரோபோ சங்கர் - காளி வெங்கட் இருவரும்வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக நன்றாகவே காமெடி செய்திருக்கிறார்கள். அதிலும் , ஐ யம் ஞானவேல் எனும்காளி வெங்கட் "ஏண்டா என் பேரைக் கேட்டாலே எல்வோரும் ஓடறீங்க ... " எனும் ஆரம்ப. காமெடியில். தியேட்டர் அதிர்கிறது . பிற நட்சத்திரங்கள் : அப்பா டெல்லி கணேஷ், தங்கையாக வரும் புதுமுகம் உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.
கலை இயக்கம் , படத்தொகுப்பு , ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளில் ஒரு குறையும் இல்லாதது படத்திற்கு கூடுதல் நிறை செய்திருக்கிறது! யுவன் சங்கர் ராஜாவின் இசையில் , "வெடி , ரெடி , அதிரடி ... " , "முதல் முறை மழை பார்க்கும் பிள்ளை போல் ஆனேனே ... " உள்ளிட்ட பாடல்கள் மிரட்டல் . பலம் i விஷால்-சமந்தா ஜோடி யும் , அவர்கள் லவ் எபிசோடும் புதுசாக தெரிவது பலம் பலவீனம் : படத்தின் ஒப்பனிங் சற்றே சமீபத்தில் வெளிவந்த " என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" பட சாயலில் இருப்பது பலவீனம்.
மித்ரன் ஜவஹர் எழுத்து , இயக்கத்தில் ., இந்திய மிலிட்டரி வீரருக்குபாஸ்போர்ட்டே கிடையாது எனும் நிலையில் விஷால் , வெளிநாட்டு பெண்ணை கரம் பிடிக்கத் துடியாய் துடிப்பது ம் ., படத்தின் ஒப்பனிங் சற்றே சமீபத்தில் வெளிவந்த " என் பெயர் சூர்யா என் வீடு கிந்தியா" பட சாயலில் இருப்பதும் சற்றே குறையாக தெரிந்தாலும் .,படம் முழுக்க பரவி விரவிக் கிடக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு எதிரான முழக்கங்கள் , அதிரடி காட்சிகள் ..., வசதி இல்லாதவர்களுக்கு வங்கிகள் காட்டும் ஒர வஞ்சனை, மேலும் ., சமந்தா -விஷால் இடையேயான லவ், சஸ்பென்ஸ் ..உள்ளிட்ட எல்லாமும் படத்தை பக்காவாக தூக்கி நிறுத்தியிருக்கின்றன.
Post a Comment