திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்). இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றார். தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார். இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும்,
DOWNLOAD
ஆனந்தும் பகைவர்களாகின்றனர். இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார்.
மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார். இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார். இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார்.
Post a Comment