சட்டக் கல்லூரி சிக்கலில் படம் ஆரம்பிக்கிறது. இந்த சிக்கலுக்குக் காரணமானவர் சட்ட அமைச்சர். சிறையில் இருக்கும் சட்ட அமைச்சரின் தம்பியான வம்சி ஒரு அரசியல் கொலை செய்ய நன்னடத்தையின் காரணமாக 15 நாட்கள் வெளியில் வருகிறார். அவரை விக்ரம் பிரபு கடத்தி யாரும் இல்லாத இடத்தில் அடைத்துவிடுகிறார். சிறைக்கு செல்ல வேண்டிய கெடு முடிகிறது. சிக்கல் பெரிதாக உருவெடுக்க, சட்ட அமைச்சர் பதவி விலக வேண்டியதாகிறது. கடத்தி வைத்திருக்கும் தம்பியை விக்ரம் பிரபு விடுவிக்க, விக்ரம் பிரபுவை வம்சி பழிதீர்த்தாரா என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.
Post a Comment