Kaatrin Mozhi Movie Review

சக மனிதர்களின் சீரியஸான பிரச்னைகளுக்கு சிம்பிளான தீர்வு தரும் பணி செய்யும் பெண்ணுக்கு அந்தப் பணியின் காரணமாகவே பிரச்னைகள் எழுந்தால்?! - ஜோதிகா நடிப்பில் வெளியாகியிருக்கும் 'காற்றின் மொழி' படத்தின் கரு இதுதான்.

DOWNLOAD

திட்டமிட்ட குடும்பம், திகட்டாத இன்பமென நல்லபடியாய் வாழும் நடுத்தர வர்க்கம் பாலு - விஜி குடும்பம். 12-ஆம் வகுப்பில் மூன்று முறை ஃபெயிலாகி தன் அப்பாவின் ஆசைக்குப் பங்கம் செய்தாலும், ஒரு குடும்பத் தலைவியாக டாப் மார்க் வாங்கி பாலுவின் அளவுகடந்த அன்பைப் பெறுகிறாள், விஜி. பாலுவுடன் 50 - 50 பார்ட்னர்ஷிப் அமைத்து வாழ்க்கையில் ஏதேனும் சாதித்துவிட வேண்டுமென முயலும் விஜியை, 'முடியாது' எனும் வார்த்தையால் மட்டம் தட்டுவதையே வேலையாக வைத்திருக்கிறார்கள், விஜியின் அப்பாவும் ட்வின்ஸ் அக்காக்களும்! கணவனின் காதல், மகனின் அன்பு, அப்பா, அக்காக்களின் அவநம்பிக்கை, சமையற்கட்டு, படுக்கையறை, பால்கனி, டைனிங் டேபிள்... எனத் தினமும் ஒரேமாதிரி சுழலும் வாழ்க்கையின் சுழற்சி 'ஹலோ' எனும் ஒற்றை வார்த்தையால் மாறத் தொடங்குகிறது. 

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

ரேடியோ நிகழ்ச்சி ஒன்றுக்குப் போன் செய்து 'ஹலோ' சொல்லும் விஜியை, அந்த 'ஹலோ' அவள் கையைப் பிடித்து கூட்டிச்சென்று ஆர்ஜே ஆக்குகிறது. 'மதுவோடு பேசுங்கள்' என்ற மிட்நைட் நிகழ்ச்சியின் மூலம் பல மனிதர்களுக்கு 'ஹலோ' சொல்லத் தொடங்குகிறாள். இந்த 'ஹலோ'க்கள் அவளை எங்கெல்லாம் அழைத்துச் செல்கிறது, என்னென்ன இன்ப, துன்பங்களைப் பதிலுக்குத் தருகிறதென நகர்கிறது திரைக்கதை. 
விஜயலெட்சுமி (எ) ஆர்ஜே மதுவாக ஜோதிகா. 'கோப்பால்ல்ல்...' என சரோஜா தேவி குரலில் குறும்பு செய்வது, 'நேத்து ராத்திரி யெம்மா...' என சிரிப்பு மூட்டுவது, 'ஹல்ல்லோ...' என ஹஸ்கி வாய்ஸில் பேசி பதறடிப்பது என 'இரண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றும்' அதே துறுதுறு' ஜோதிகா இஸ் பேக்! அழுகை, சிரிப்பு, கோபம், இயலாமை என எல்லா உணர்வுகளையும் அவ்வளவு அழகாய் கடத்துகிறது அவரது முகம். அந்த முகத்துக்கு ஏன் இவ்வளவு மேக்அப் என்பதுதான், குறை. கதாநாயகியை மையப்படுத்திய கதைதான் என்றாலும், அதிலும் தனித்துத் தெரிகிறார் விதார்த். நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். இவர் ஆங்காங்கே கொடுக்கும் `ஒன்-லைனர்' காமெடிகளிலும் `டைமிங்' கச்சிதம்.
கும்பகோணம் கிருஷ்ணன் (எ) கும்கியாக இளங்கோ குமரவேல், அதகளம். குறிப்பாக, 'ஆலுமா டோலுமா' டியூனில் அப்பளத்துக்குப் பாடல் எழுதும் காட்சி செம ரகளை. ஒரு காட்சியில், நம் கண்களைக் கலங்கடித்து விடுகிறார், எம்.எஸ்.பாஸ்கர். மனோபாலா, சாண்ட்ரா, லக்‌ஷ்மி மஞ்சு, மயில்சாமி, திண்டுக்கல் சரவணன் என எல்லா கதாபாத்திரங்களும் நம் மனதில் பதிகின்றன. 'மூட்டுவலி' மயில்சாமி, முந்திரிப் பருப்பின் துணையோடு ஐந்தாம் மாடிக்கு செல்லும் காட்சிக்கு சிரித்து வயிறுவலியே வந்துவிடுகிறது. சிறப்புத் தோற்றத்தில் வரும் சிம்புவுக்கு அரங்கில் விசில் பறக்கிறது!
பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்து வெற்றி பெற்ற 'தும்ஹாரி சுலு' படத்தின் ரீமேக்தான், இந்த 'காற்றின் மொழி'. திரைமொழியிலும் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. பெரும்பாலான காட்சிகளை அப்படியே தமிழுக்கு மாற்றியிருக்கிறார்கள். 'காற்றின் மொழி'யின் மூச்சுக்காற்று அதன் வசனங்கள். ரைமிங்கும் டைமிங்கும் நிரம்பி வழியும் நகைச்சுவையான ஒன்-லைனர்கள், பல இடங்களில் குபீர் சிரிப்பு மூட்டுகின்றன. வாழ்த்துகள் பொன்.பார்த்திபன், நீங்கள் சுட்ட பூரியெல்லாம் 'புஷ்'ஷென வந்திருக்கிறது. அதுவே கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகியிருப்பதையும் சில இடங்களில் உணரமுடிகிறது. 
ஜோதிகாவுக்கு நைட் ஷிஃப்ட் வேலை. அதனாலேயே அவர் வீட்டில் அவ்வளவு பிரச்னை ஏற்படுகிறது. இந்த ஸ்டேஷன் ஹெட் மட்டும் எப்படி எல்லா ஷிஃப்டிலும் அலுவலகத்திலேயே இருக்கிறார்?! அதுவும் அவ்வளவும் ஃப்ரெஷ்ஷாக... என்ற பயங்கரமான கேள்வி மனதில் எழுகிறது. பரபரவென நகரும் திரைக்கதையில் ராதாமோகனின் வழக்கமான 'டிராமா' ட்ரீட்மென்ட் ஆங்காங்கே தொய்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
ஐந்து நிமிடத்தில் பேசி முடிக்கக்கூடிய சில காட்சிகளை எல்லாம், பேசிப் பேசியே பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு இழுத்திருக்கிறார்கள். நகைச்சுவைதான் என்றாலும், அந்தக் கும்கி எனும் கவிஞர் பாத்திரத்தை மான, ரோசமே இல்லாத மலிவான கதாபாத்திரமாகக் காட்சிப்படுத்தியிருக்க வேண்டாமே?! அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் நோக்கம் என்றால், அதை இன்னும் ஆழமாக, நியாயமாக காட்சிப்படுத்தியிருக்கலாம். விதார்த் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளருக்கு, விதார்த் மேல் அப்படியொரு கோபம் இருக்க என்ன காரணம் என்பதையும் தெளிவாய் சொல்லியிருக்கலாம். 
மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு பளீச். மனதுக்கும் கண்களுக்கும் மகிழ்ச்சியான உணர்வைத் தந்திருக்கிறது. ஏ.ஹெச்.காஷிஃபின் இசை காதுகளுக்கு இனிமை. அந்த 'கிளம்பிட்டாளே விஜயலெட்சுமி' பாடலை மட்டும் ஒரேயொரு முறை முழுவதுமாய் போட்டு முடித்திருக்கலாம், இப்படி ஆங்காங்கே பாதிப் பாதியாய் போட்டு பெருமூச்சு விடவைத்திருக்க வேண்டாம். 
மொத்தத்தில், 'காற்றின் மொழி' மூலம் குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்லதொரு ஃபீல்குட் சினிமாவைத் தந்து மீண்டும் தன்னுடைய டிராக்கிற்கு வெற்றிகரமாகத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ராதாமோகன்.

Post a Comment