குருசேத்திரப் போர், பாண்டவர்களின் குலத்தையே அழிக்கத் துடிக்கும் அஸ்வத்தாமன், கிருஷ்ணரின் கட்டளை போன்ற மகாபாரத பின்கதைகளோடு தொடங்கி, காசி நகரம், அந்நகரைச் சுற்றியுள்ள வறட்சி, காம்ப்ளக்ஸ், அடிமை மக்கள் எனச் சுவாரஸ்யமாகவே தொடங்குகிறது படம். அதற்கடுத்து புதிய புதிய கதாபாத்திரங்கள், 'வாமா மின்னல்' என மறையும் கெஸ்ட் ரோல் நடிகர்கள், பிரபாஸின் நீண்ட இன்ட்ரோ, அடுத்தடுத்து வரும் சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் எனச் சுவாரஸ்யமற்று நீண்டுகொண்டே போகும் முதற்பாதி, கதை எனும் வஸ்துவைக் கண்டடையாமல் கண்மூடித்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை கதையைக் கண்டுபிடிப்பதுதான் கதையோ என எண்ண வைக்கிறது படம்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
காம்ப்ளக்ஸுக்குள் உள்ள தனியுலகம், கமல்ஹாசனின் அறிமுகம், கீர்த்தி சுரேஷின் குரலில் வரும் புஜ்ஜி என்கிற அதிநவீன ஏ.ஐ கார் போன்ற சில ரசிக்க வைக்கும் ஐடியாக்களும் இருக்கின்றன. ஆனால், அந்த ஏரியாவில் டேரா போடாமல் ஒரு சண்டைக்காட்சி, ஒரு கெஸ்ட் ரோல் காட்சி என வண்டியை ஓட்டியிருக்கிறது திரைக்கதை. அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமன் கதாபாத்திரம் மட்டுமே கதையை நோக்கி திரைக்கதையை நகர்த்துகிறது.
DOWNLOAD
ஒருவழியாகக் கதையை அடையும் இரண்டாம் பாதிதான் படத்தையே காப்பாற்றுகிறது. விறுவிறுப்பாக நகரும் சேசிங் காட்சிகள் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. இயக்குநர் ராஜமௌலியின் கௌரவத் தோற்றம் கலகலப்பைத் தருகிறது. ஆனாலும், தேவையே இல்லாமல் திணிக்கப்படும் மாஸ் வசனங்களும் சண்டைக்காட்சிகளும் சோதனையிலும் சோதனைகளே! அதில் தேவையான நேர்த்தியும் இல்லை என்பது மைனஸ்.
இந்த இடர்பாடுகளுக்கு இடையே எமோஷனலான காட்சிகளும் எவ்வித தாக்கத்தையும் தராமல் ஓடிவிடுகின்றன. காண்டீபம் என்கிற தபசு, பாண்டவர்களின் வாரிசு, கர்ணன் பயன்படுத்திய ஆயுதம், அஸ்வத்தாமனுக்குக் கொடுக்கப்பட்ட பணி என மகாபாரத புராணக்கதையின் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் படத்துக்கு வலுசேர்த்திருக்கின்றன. அவை ஆழமாகவும் கையாளப்பட்டுள்ளன. ஆனால், எதிர்கால உலகில் நடக்கும் சம்பவங்கள் அழுத்தமாக எழுதப்படாதது பின்னடைவையே தந்திருக்கிறது.
ரோபோ, ஏ.ஐ, மாயாஜாலம், புராணம், அறிவியல் என எந்த வரைமுறையும் இல்லாமல் சுவாரஸ்யத்திற்காகக் காட்சிகளை மூட்டை மூட்டையாகச் சேர்த்தது திரையெழுத்தின் போதாமையையே காட்டுகிறது. 'டியூன்', 'ஸ்டார் வார்ஸ்', ஹாரிபாட்டரின் வால்டர்மோர்ட் கதை, 'மேட் மேக்ஸ்' படங்கள், பிளாக்பேந்தரின் வக்காண்டா உலகம் என நேரடியாகவே ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களின் தாக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. மேலும், திரையில் கட்டமைக்கப்பட்ட உலகத்திற்குள்ளேயே ஆயிரம் லாஜிக் ஓட்டைகள் பூத்துக்குலுங்குகின்றன. உதாரணமாக, அஸ்வத்தாமன் பாத்திரத்தின் சக்தி என்ன, அவரால் என்ன முடியும், என்ன முடியாது என்பதற்கெல்லாம் எங்குமே பதில் இல்லை.
Post a Comment