Lucifer Movie Review

ஒரு அரசியல் தலைவரின் மறைவிற்கு பிறகு, அவரது குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை பதவிப் போட்டியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் லூசிபர்.

DOWNLOAD

படத்தின் முதல் காட்சியில், பிரான்ஸ் நாட்டு இன்டர்போல் போலீஸ் அதிகாரி தனது கணினியில் ஒரு வழக்கை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அப்போது குரேஷி ஆபிரகாம் எனும் பெயரை உச்சரித்து அதிர்ச்சி ஆகிறார்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

கட் செய்தால், அடுத்தக் காட்சியில் தமிழ்நாட்டில், முதலமைச்சர் பி.கே.ஆர் (பி.கே.ராமதாஸ்) மரணமடைகிறார். அவரது இறப்புக்கு பிறகு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றும் போட்டி உருவாகிறது. இந்த ரேஸில் முதலில் இருப்பது பி.கே.ஆர் ஆட்சியின் மூத்த அமைச்சர் சாய்குமார். ஆனால் அவரை ஓரங்கட்டிவிட்டு, கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் பி.கே.ஆரின் மருமகன் பாபி (விவேக் ஓப்ராய்). வெளிநாட்டில் வசித்து வரும் பி.கே.ஆரின் இளையமகன் ஜத்தினை (டொவினோ தாமஸ்) முதலமைச்சர் வேட்பாளராக்குகிறார் பாபி.
சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலுடன் டீலிங் வைத்திருக்கும் பாபி, கட்சி பண்டிங் என்ற பெயரில் அவர்களிடம் பணம் வாங்குகிறார். இதன் மூலம் மாநிலத்தில் போதை மருந்து விற்பனை சுமூகமாக நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்தித்தர சம்மதிக்கிறார். இதற்கு தடையாக வருகிறார் ஸ்டீபன் (மோகன் லால்). பி.கே.ஆரின் வளர்ப்பு மகனாக அறியப்படும் இவருக்கும், பாபிக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. மீடியாவை பயன்படுத்தி, ஸ்டீபனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, அவரை சிறையில் அடைக்கிறார் பாபி. ஸ்டீபன் சிறையில் இருந்து வெளியே வருகிறாரா? மாநிலத்தின் ஆட்சி யார் பொறுப்புக்கு செல்கிறது என்பது தான் மீதிப்படம்.
இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்திலேயே ஏராளமான ஆச்சரியங்களை கொடுத்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ். திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார். உண்மையில் கேரளாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாளப் படமாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு பெரும்பாலும் ஒத்துப்போகிறது படம். அரசியல், சினிமா, மீடியா என அனைத்தையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிருத்விராஜ். ஒரு இயக்குனராக ஜெயித்து காட்டியிருக்கிறார்.
குறிப்பாக மலையாள வாடையே இல்லாத அளவுக்கு சரியாக மொழியாக்கம் செய்திருக்கிறார் ஆர்.பி.பாலா. "அரசியலில் நன்மைக்கும் தீமைக்கும் போட்டின்னு ரொம்ப நாளா நாம ஏமாத்திட்டு இருக்கோம். ஆனா உண்மையில் இங்க தீமைக்கும் தீமைக்கும் தான் போட்டி. அது பெரிய தீமையாக, சின்ன தீமையாங்கிறது தான் விஷயம் " என மோகன் லால் பேசும் வசனம், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். படம் ஆரம்பித்து சுமார் கால் மணி நேரம் கழித்து தான் என்ட்ரிக்கொடுக்கிறார் மோகன் லால். 
ஆனால் ஆரம்பமே செம அதிரடி தான். முதல் காட்சியில் ஏற்படுத்தும் மாஸை, கடைசி காட்சி வரை அப்படியே மெயிண்டெய்ன் செய்கிறார். இரண்டு சண்டைக் காட்சிகளிலும் செம ஸ்டைலாக அப்லாஸ் அள்ளுகிறார் லாலேட்டன். அவரது ரசிகர்களுக்கு இந்த படம் சரியான பிரியாணி விருந்து.
ஹீரோவுக்கு இருக்கும் அதே மாஸ் வில்லனுக்கும் கொடுக்கப்படுகிறது. செம ஸ்டைலிஷ் வில்லனாக, கிங் மேக்கராக கெத்து காட்டுகிறார் விவேக் ஓப்ராய். குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் செய்யும் வேலைகள், நம்மை கோபப்படுத்துகிறது. இது தான் அந்த கதாபாத்திரத்தின் வெற்றி
இயலாமையால், வாழ்வை வெறுத்து போய் நிற்கும் பெரிய இடத்து பெண் கதாபாத்திரம் மஞ்சு வாரியருக்கு. அவர் பங்குக்கு அவரும் ஒரு பக்கம் ஸ்கோர் செய்கிறார். கட்சி பொதுக்கூட்டத்திலும், விவேக் ஓப்ராயிடம் கெத்து காட்டும் சீனிலும் செமையாக ஸ்கோர் செய்திருக்கிறார் மாரி 2 வில்லன் டொவினோ தாமஸ். நன்றாக ஸ்கோர் செய்யும் கதாபாத்திரம் ஜான் விஜய்க்கு. அதை சரியாக செய்திருக்கிறார் மனிதர். தமிழ் படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய ரசிகர்களுக்கு, ஜான் விஜய்யின் இந்த ரோல் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால், அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். அதுவும் நம்ம கஸ்தூரி பாட்டிக்கு இதில் செம ரோல். தீபக் தேவின் பின்னணி இசை அதிரடியாய் இடிக்கிறது. தேவையான சமயங்களில் மௌனித்து, அமைதியில் லயிக்கிறது. சுஜித் தேவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மோகன் லால் சம்மந்தப்பட்ட காட்சிகள் உள்பட, பல காட்சிகளை மாஸாக காட்டியிருக்கிறார். 
அதேபோல் எடிட்டிங்கில் தெறிக்கவிட்டிருக்கிறார் சம்ஜித் முகமது. பிருத்விராஜிக்கு இயக்குநராக இது முதல் படம் என்றால் நம்பவே முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக இயக்கி இருக்கிறார். ஹீரோ முதல் வில்லன் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்தை, மிக வலிமையானதாக படைத்திருக்கிறார். அதுவும், தனது கதாபாத்திரத்தை வேண்டுமென்று திணிக்காமல், அதையும் லாவகமாக சேர்த்திருக்கிறார்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால், அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள். அதுவும் நம்ம கஸ்தூரி பாட்டிக்கு இதில் செம ரோல். தீபக் தேவின் பின்னணி இசை அதிரடியாய் இடிக்கிறது. தேவையான சமயங்களில் மௌனித்து, அமைதியில் லயிக்கிறது. சுஜித் தேவனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். மோகன் லால் சம்மந்தப்பட்ட காட்சிகள் உள்பட, பல காட்சிகளை மாஸாக காட்டியிருக்கிறார். அதேபோல் எடிட்டிங்கில் தெறிக்கவிட்டிருக்கிறார் சம்ஜித் முகமது. பிருத்விராஜிக்கு இயக்குநராக இது முதல் படம் என்றால் நம்பவே முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக இயக்கி இருக்கிறார். 
ஹீரோ முதல் வில்லன் வரை ஒவ்வொரு கதாபாத்திரத்தை, மிக வலிமையானதாக படைத்திருக்கிறார். அதுவும், தனது கதாபாத்திரத்தை வேண்டுமென்று திணிக்காமல், அதையும் லாவகமாக சேர்த்திருக்கிறார்.

Post a Comment