ஒரு நாள் மீண்டும் மீண்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் ரிப்பீட் மோடில் திரும்பத் திரும்ப நடந்தால் மனநிலை எப்படி இருக்கும்? இந்த உலகத்தை எப்படி புரிந்து கொள்வது? நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் டைம் லூப் என்ற கான்செப்டுடன் இந்த மாநாடு படம் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சமீபத்தில் வெளிவந்த ஜாங்கோ என்ற திரைப்படம் டைம் லூப் சம்பந்தப்பட்ட கதை என்பது குறிப்பிடத்தக்கது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக வெளிவந்துள்ள மாநாடு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாகிடும்" என்ற சிவாஜிபட வசனத்தை யாரும் மறக்க முடியாது. ஆனால் நடக்கப்போவது எல்லாம் முன்னரே தெரிந்துவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவே திரைப்படமாக வந்தால் ? இயக்குனர் வெங்கட்ப்ரபு இயக்கத்தில் சிம்பு எஸ் சூர்யா இணைந்து மிரட்டும் தமிழ் திரைப்படமாக மாநாடு வந்து உள்ளது .
DOWNLOAD
படத்தின் கதாநாயகன் சிம்புவுக்கு எப்படி டைம் லூப் என்ற ஒரு விஷயம் நடக்கிறதோ அதேபோல் படத்துடைய வில்லன் எஸ் ஜே சூர்யா இதே டைம் லூப் என்ற ஒரு விஷயத்தை மேற்கொள்கிறார்.உண்மையை சொல்லப்போனால் எஸ் ஜே சூர்யாவுடைய மிக அற்புதமான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது இந்தப் படத்திற்கு பக்கபலமாக இருந்த ஒரு கதாபாத்திரம் என்றால் எஸ் ஜே சூர்யா என்றுதான் சொல்லியாக வேண்டும் . பார்த்த காட்சிகளையே திரும்பத் திரும்ப பார்க்கும் பொழுது ஒரு கட்டத்தில் சலிப்புத் தட்டுகிறது.
இருந்தாலும் கூட அதை எடிட் செய்த விதம் கதையை சொன்ன விதம் பாராட்டத்தக்கது. ஏகப்பட்ட ஹாலிவுட் படங்கள் பார்த்தவர்களுக்கு தமிழ் சினிமாவில் வந்த இந்த டைம் லூப் படம் ஒரு ஆவரேஜ் படம் என்று தான் சொல்லத் தோன்றும். இருந்தாலும் கூட தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றார்போல் வெங்கட்பிரபு இந்த படத்தை பிரபலமான நடிகர்களை வைத்து கொடுத்த விதம் பாராட்டத்தக்கது.
இந்தப் படத்தின் திரைக்கதையை பொருத்தவரை பலருக்கு புரியும் சிலருக்கு புரியாமலும் போகும் என்பது தான் நிதர்சனமான உண்மை. புரியாத படம் என்று ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது. புரிந்துகொள்ள வேண்டிய படம் என்றுதான் சொல்ல வேண்டும் .படத்திற்கு மிகப்பெரிய பலம் இசையமைப்பாளர் யுவன் என்பது தான் குறிப்பிடத்தக்கது. வந்த காட்சிகளே திரும்பத் திரும்ப வரும் பொழுது அதற்கு ஏற்றார் போல பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். சிம்பு வரும் பலதரப்பட்ட காட்சிகளுக்கு பலவகையில் பிஜிஎம் கொடுத்து அசால்டாக அப்ளாஸ் வாங்குகிறார் யுவன்.
மாநாடு படம் குடும்பத்துடன் சென்று பார்க்கவேண்டிய ஒரு ஜாலி என்டர்டைன்மென்ட் படமாகத்தான் இருக்கிறது. படத்தின் காட்சிகள் சில இடங்களில் சலிப்பு தட்டினாலும் பொறுமையாக பார்த்தால் ரசிக்கலாம்.சிம்புவின் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள், இருப்பினும் படத்தின் ட்யூரேஷன் கொஞ்சம் அதிகம் என்பதுதான் பலருடைய கருத்து.
சில பல காட்சிகள் ட்ரிம் செய்து படத்தின் கால அளவை குறைத்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் மாநாடு.கல்யாணி பிரியதர்ஷன் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார் பிரேம்ஜி வெங்கட்பிரபு படத்தில் இருப்பது புதிதல்ல இருந்தாலும் அவர் வரும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக மாநாடு திரைப்படம் ஒரு வெரைட்டியான சிம்பு படம்.
Post a Comment