கோமாதா - ஊர்வசி , ராணி அமிர்தகுமாரி - பானுப்ரியா , சுப்புலட்சுமி சரண்யா பொன்வண்ணன் ... கல்லூரியில் , பியூசி படிக்கும் காலத்தில்., இரவில் ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து , சினிமாவுக்கு போகும் அளவிற்கு நெருங்கிய குறும்புக்கார தோழிகள். அந்த அளவிற்கு மிஞ்சிய குறும்புத்தனமே தோழிகள் மூவரில் ., யார்? எங்கிருக்கிறார் ..? எனத் தெரியாத அளவிற்கு அவர்களை பல ஆண்டுகள் ...பிரித்து வைக்கிறது .இந்நிலையில் அந்த மூவரில் ஒருவரான ஊர்வசிக்கு மருமகளாக வர இருக்கும் பிரபாவதி ஜோதிகா .,
DOWNLOAD
தன் மாமியாராக வரப்போகும் ஊர்வசியின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமாக ., பேஸ்புக் மற்றும் வாட்ஸ் - அப் வாயிலாக அத்தையின் தோழிகள் இருவரையும் தேடிப் பிடித்து அவர்கள் மூவரையும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை ஒரு மூன்று நாட்கள் வாழ வைக்க தனக்குள் சபதம் ஏற்று தன் புரட்சி தோழர் தோழிகளின் உதவியுடன் களம் இறங்குகிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அதற்கு முதலில் ஒப்புக் கொள்ள மறுக்கும் ஜோதிகாவின் பிஸி டியூஷன் டீச்சர் மாமியார் ஊர்வசியும் , தன் குடிகார கணவன் மற்றும் படுத்த படுக்கை மாமியாருடன் போராடும் சரண்யா பொன்வண்ணனும் , ஆக்ராவில் அரசியல் பேமிலியில் வீட்டுக்காரம்மாவாக செட்டிலானாலும் ,கிட்டத்தட்ட, அவரது குடும்பத்தாராலேயே ஒரு வேலைக்கார அம்மா போன்று நடத்தப்படும் பானுப்ரியாவும் அதன் பின் ஒப்புக் கொண்டு ஜோதிகா காட்டிய வழியில் மூவரும் மூன்று நாட்கள் வாழ்ந்து காட்டினார்களா ? இல்லையா ..? இவர்களை மூன்று நாட்கள் பிரிந்ததால் ., அவர்களது குடும்பத்தினர் பெண் அடிமைத்தனத்தில் இருந்து திருந்தி, அதன் பின் இவர்களை மரியாதையுடன் நடத்தினார்களா ..?இல்லையா ...? என்பதுடன் ஜோதிகா - மாதவனின் இந்த தலைமுறை பெண் அடிமைத்தனம் இல்லா பெருந்தன்மையையும் பறைசாற்றும் விதமாக வந்திருக்கும் படம் தான் "மகளிர் மட்டும் ."
Post a Comment