தைரியமான போலீஸ்காரர், பயங்கரமான கேங்ஸ்டருக்கு இடையேயான மோதல் குறித்த படங்களுக்கு தமிழில் குறைவே இல்லை. இந்நிலையில் தான் பத்து தல படம் வந்திருக்கிறது. ஆனால் பத்து தல தனித்து தெரிகிறது. கன்னட படமான மஃப்டியின் ரீமேக் தான் பத்து தல.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
அன்டர்கவர் போலீஸ்காரரான சக்திவேல்(கவுதம் கார்த்திக்) தமிழக முதல்வர்(சந்தோஷ் பிரதாப்) மாயமானது குறித்து விசாரணை நடத்துகிறார். முதல்வர் மாயமானதற்கு கேங்ஸ்டர் ஏ.ஜி.ஆர்.(சிலம்பரசன்) தான் காரணம் என நினைக்கிறார் சக்திவேல்.
DOWNLOAD
மணல் பிசினஸில் பெரிய ஆளாக இருக்கும் ஏ.ஜி.ஆருக்கு எதிராக ஆதாரம் சேகரிக்க கஷ்டப்படுகிறார் சக்திவேல். ஏ.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆளாக மாற சக்திவேல் உழைத்துக் கொண்டிருக்கும்போது தான் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் எல்லாம் தெரிய வந்து ஆடிப் போகிறார்.
பத்து தல படத்தின் இரண்டாம் பாதியில் தான் வருகிறார் சிம்பு. அவர் வந்த பிறகே படம் சூடுபிடிக்கிறது. முன்னதாக ஏ.ஜி.ஆர். பற்றி சக்திவேல் கண்டுபிடிப்பது எல்லாம் அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இடைவேளைக்கு பிறகு தான் படம் உயிர் பெறுகிறது. சிம்புவின் நடிப்பு சிறப்பு.
தன்னை சுற்றியுள்ள மக்களுக்கு நல்லது செய்யும் கேங்ஸ்டர் அரசாங்கத்தின் கண்களில் குற்றவாளியாகத் தெரிவது ஒன்றும் புதிது இல்லை. கதையை திரையில் காட்டிய விதம், இரண்டாம் பாதியில் நடப்பது தான் சுவாரஸ்யமாக இருக்கிறது.
கேங்ஸ்டர் படங்களில் இருக்கும் துரோகம், வன்முறை எல்லாம் பத்து தல படத்திலும் இருக்கிறது. ஆனால் அவற்றின் தாக்கம் குறைவு.
சில குறைகள் இருந்தாலும் பத்து தல படம் சிம்பு ரசிகர்களை நிச்சயம் திருப்தி அடைய செய்யும். கிளைமாக்ஸில் வரும் சண்டை காட்சிக்கு ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்திருக்கிறது. அதனால் அந்த காட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மாவட்ட ஆட்சியராக ப்ரியா பவானிசங்கர் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும், கவுதம் கார்த்திக்கிற்கும் இடையேயான பிளாஷ்பேக் காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்கியிருக்கலாம்.
சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக்கின் அற்புதமான நடிப்பால் படத்தின் குறைகள் பெரிதாக தெரியவில்லை. அன்டர்கவர் போலீஸாகவே மாறியிருக்கிறார் கவுதம் கார்த்திக். துணை முதல்வராக சிறப்பாக நடித்திருக்கிறார் கவுதம் மேனன்.
Post a Comment