PT Sir Movie Review

பள்ளியில் பி.டி. வாத்தியாராக இருக்கிறார் கனகவேல்(ஹிப்ஹாப் தமிழா ஆதி). அவரின் தங்கை நந்தினி (அனிகா). பி.டி. வாத்தியாராக இருந்தாலும் பயந்த சுபாவம் உள்ளவர் கனகவேல். எந்த பிரச்சனைக்கும் போக மாட்டார். பிரச்சனை என்றால் அந்த இடத்திலேயே இருக்க மாட்டார். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் நந்தினிக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

DOWNLOAD

ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். தன் அன்புத் தங்கை தற்கொலை செய்து கொண்ட பிறகே வீரனாக மாறுகிறார் கனகவேல். தங்கையின் சாவுக்கு நியாயம் கேட்டு போராடுகிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

பெண்களுக்காக நியாயம் கேட்டு போராடும் ஹீரோவாக நடித்திருக்கிறார் ஆதி. ஒரு ஹீரோ வீரனாக மாற ஒரு பெண் பலியாக வேண்டியது இருப்பது தான் சோகம்.
நந்தினி சந்திக்கும் பிரச்சனையால் அவரின் குடும்பத்தாரும், சமூகமும் அவரை எப்படி நடத்துகிறது என்பதை நன்றாக காட்டியிருக்கிறார்கள்.

ஒரு பெண் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும்போது அவரை குறை சொல்லும் பெற்றோரை யாரும் கண்டுகொள்வது இல்லை. ஆனால் பி.டி. சார் படத்தில் அப்படி இல்லை. நம் சொந்தங்களே ஒரு பெண்ணை எப்படி எல்லாம் பேசி அவரை மோசமாக உணர வைக்கிறார்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள். ஆனால் இது காமெடி டிராமா என்பதால் கையில் இருக்கும் பிரச்சனையை ரொம்ப சீரியஸாக காட்டவில்லை.

படத்தில் ஒரு ஹீரோயின் இருக்க வேண்டும் என்பதற்காக காஷ்மிராவை நடிக்க வைத்திருக்கிறார்கள். அவருக்கும், ஆதிக்கும் இடையேயான காதல் டிராக் கை கொடுக்கவில்லை. தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

ஆதியின் இசை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. படத்தில் பவர்ஃபுல்லான வில்லனாக வந்திருக்கிறார் தியாகராஜன். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறி மிரட்டியிருக்கிறார் அவர்.
அக்கா போன்று இருக்கும் தேவதர்ஷினியை ஆதிக்கு அம்மாவாக நடிக்க வைத்தது ஒரு மைனஸ். ஆனால் தேவதர்ஷினியின் நடிப்பால் வயது வித்தியாசம் குறைவு என்பதை மறந்து அம்மா, மகன் உறவில் ஈர்க்கப்படுகிறோம்.

Post a Comment