Pushpa Movie Review

சாதாரண கூலி வேலை செய்து வரும் புஷ்பா {அல்லு அர்ஜுன்}, ஒரு நாள் செம்மர கடத்தல் வேளைக்கு கூலியாக செல்கிறார். அங்கு திடீரென போலீஸ் வருவதை அறிந்து செம்மர கட்டைகளை மறைத்து வைத்து, தான் மட்டும் போலீசிடம் சரணடைகிறார். இதனை கேள்விப்படும் செம்மர கடத்தல் தலைவர்களில் ஒருவரான 'கொண்டா ரெட்டி' புஷ்பாவை பெயிலில் எடுக்க, அவருடன் சேர்ந்து செம்மர கடத்தல் தொழில் துவங்குகிறார் புஷ்பா.

DOWNLOAD

தனது மூலையை பயன்படுத்தி பல வகையில் செம்மர கட்டைகளை கடத்தி வரும் புஷ்பாவை தடுத்து, செம்மர கட்டைகளை பிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. அப்படி ஒரு முறை, காவல் துறையில் புஷ்பா சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால், அப்போதும் அங்கிருந்து பாதுகாப்பாக செம்மர கட்டைகளை வேறொரு இடத்திற்கு அகற்றிவிடுகிறார். இதனால், அரசியல் வாதி 'பூமி ரெட்டி, முக்கிய புள்ளியான 'மங்களம் சீனு'வின் நம்பிக்கையை சம்பாதிக்கிறார் புஷ்பா.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

தொடர்ந்து 'மங்களம் சீனு'விடம் வேலை செய்து வரும் புஷ்பா, இனி இவர்களுக்கு கீழ் வேலைசெய்யமுடியாது என முடிவெடுத்து, தானே சொந்த முயற்சியில் செம்மர கட்டைகளை கடத்தி, நேரடியாக வாங்குவர்களிடம் டீல் பேசுகிறார். இதனால், மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கும் புஷ்பாவை கொள்ள 'கொண்டா ரெட்டி' முயற்சி செய்கிறார். ஆனால், அந்த முயற்சியில் கொண்டா ரெட்டியை, 'மங்களம் சீனு'வின் ஆட்கள் கொன்றுவிட, 'மங்களம் சீனு' மனைவியின் தம்பியை, புஷ்பா கொன்று விடுகிறார்.
இதனால் புஷ்பாவிற்கு எதிராக பல பகைகள் புதிதாக முளைக்கிறது. எதிர்க்க ஊரில் யாரும் இல்லாத காரணத்தினால், தொடர்ந்து வளர்ந்து கொண்டே போய்க்கொண்டு இருக்கும் புஷ்பாவை தடுத்து நிறுத்த, காவல் துறை புதிதாக நியமிக்கும் போலீஸ் அதிகாரியாக பகத் பாசில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார். இதற்கு பின் என்ன நடந்தது, பகத் பாசில் கொடுத்த கொடைச்சல்களை புஷ்பா எப்படி எதிர்கொண்டார்..? புஷ்பாவால் பகத் பாசிலுக்கு என்ன நடந்தது..? என்பதே படத்தின் மீதி கதை.

Post a Comment