சினிமா உதவி இயக்குநர் விஷ்ணு விஷால், உலகெங்கும் இருக்கும் சைக்கோக்களைப் படித்து, முதல் படத்துக்கான கதையெழுதி தயாரிப்பாளருக்கான தேடுதலில் அலைந்து திரிகிறார். இன்னொரு பக்கம் அப்பா இழந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் அப்பா விட்டுச் சென்ற காக்கிச் சட்டையைப் போட வேண்டிய சூழலும் இவருக்கு ஏற்படுகிறது. துணை ஆய்வளராகப் பொறுப்பேற்றதும் ஊருக்குள் நடக்கும் சில கொடூரக் கொலைச் சம்பவங்களில் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
பள்ளி மாணவிகளை மட்டுமே குறிவைத்து நடக்கும் அக்கோரச் சம்பவத்தின் பின்னணி என்ன... ஊரே அலறும் அளவுக்கு எதற்காக அந்த சைக்கோ அப்படியொரு கொலைவெறிச் செயல்களைச் செய்கிறான், ராட்சசனாக வேட்டையாடும் அக்கொலைகாரனை துணை ஆய்வாளர், விஷ்ணு விஷால் எப்படித் தடுத்து நிறுத்துகிறார் என்பதே ராட்சசன் படத்தின் கதை.
DOWNLOAD
ஹார்டின் கிளிக் விஷ்ணு விஷால். சினிமா வாய்ப்புக்காக தயாரிப்பாளர்களை தேடியலைந்து ஓய்வது. சைக்கோ வில்லனைப் பிடிக்க போலீஸாக உருவெடுத்து, சோர்ந்து போகாமல் ஓடுவது, சேஸிங்கில் ஏற்படும் சண்டைக் காட்சிகள், குடும்பப் பாசம் ... எனப் பல்வேறு சூழலில் தன்னுடைய தேர்ந்த நடிப்பை அலட்டாமலும், உறுத்தாமலும் நடித்துக் கொடுத்திருக்கிறார். சினிமாவுக்காகச் சேகரித்து வைத்திருக்கும் குறிப்புகளையெல்லாம் கொலையாளியைக் கண்டுபிடிக்க கைகொடுக்கும்போது, விஷ்ணு விஷாலிடம் இருக்கும் உற்சாகமும், பரபரப்பும் நமக்கும் ஒட்டிக்கொள்கிறது. த்ரில்லர் படங்களில் வரும் அதே வழக்கமான ஹீரோயின், அதே வழக்கமான அமலாபால், அதே வழக்கமான நடிப்பு.
இந்தப் படத்துக்கு முன்புவரை நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த முனீஸ்காந்துக்கு இந்தப் படத்தில் குணச்சித்திர கதாபாத்திரம். அதை முடிந்தவரை சிறப்பாகவே செய்திருக்கிறார். கதையோடு பயணிக்கும் காளி வெங்கட், வினோதினி படத்தோடு பயணிக்கிறார்கள். `மைனா' சூசன், துணை ஆய்வாளர் விஷ்ணு விஷாலுக்குக் குடைச்சல் கொடுக்கும் உயர் அதிகாரி கதாபாத்திரம். அதைச் சரிவரச் செய்திருக்கிறார்.
சீரியல் கில்லர், சைக்கோ கொலைகள் என்றாலே ரத்தம் தெறிக்கத் தெறிக்கத்தான் காட்ட வேண்டும் என்றில்லாமல் முகம் சுழிக்க வைக்காமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தின் பலம். தனது முதல் படத்தில் விஷ்னு விஷால், காளி வெங்கட், முனீஸ்காந்த் என இந்த மூவரையும் வைத்து நகைச்சுவையில் பின்னியெடுத்த ராம்குமர், இந்தப் படத்தில் அதே நடிகர்களை வேறொரு பரிமாணத்தில் காட்டி, ஆச்சர்யப்படுத்துகிறார். நடிகர்களும் அதை உணர்ந்து சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய கதை சொல்லி ஜிப்ரானின் இசையமைப்பு. கோரக் கொலைகள், கணிக்க முடியாத காட்சியமைப்பு, பரபர திரைக்கதை... இவற்றை ஒன்றிணைத்து படு சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது இவரது பின்னணி இசை. போக, படத்தின் ஆர்ட் டைரக்ஷன் குறிப்பிட வேண்டிய ஒன்று. குறிப்பாக, சைக்கோ கொலைகாரனின் `மேஸ்' ரக வீடு... எனப் படம் முழுவதுமே ஆர்ட் டைரக்ஷனில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறர், கோபி ஆனந்த். எடிட்டர் ஷான் லோகேஷின் சிறப்பான எடிட்டிங் வொர்க், பல சமயங்களில் துண்டாகத் தெரிகிறது. பி.வி ஷங்கரின் ஒளிப்பதிவு, சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது.
படத்தின் முதல் பாதியில், ஒரே ஒரு காதல் பாடலைத் தவிர தடையின்றி காட்சிகள் பரபரப்பாய் நகர்கிறது. இரண்டாம் பாதியில் அப்படியே நேரெதிர். ஒரு க்ளைமாக்ஸ் வைப்பதற்கு பதில் 9 க்ளைமாக்ஸ்களை வைத்தது அலுப்பு. ஆங்காங்கே `மெமரீஸ் ஆஃப் மர்டர்' படம் பார்த்த பாதிப்பும் வருகிறது. எதற்கும் பதற்றப்படாத சீரியல் கொலைகாரர் எல்லாம் ஓகேதான். ஆனால் போலீஸ் வீசும் வலையிலிருந்து தடயமின்றித் தப்பித்துக்கொண்டே இருப்பது, அமலாபாலையும், ராதாரவியையும் ஜஸ்ட் லைக் தட் கண்டுபிடிப்பது என்பதெல்லாம். அதிலும் அந்த வில்லனாய்க் காட்டப்படும் நபர், ஆகப்பெரிய லாஜிக் ஓட்டை. பொம்மை எல்லாம் ஆன்லைன்ல ஈஸியா வாங்கலாம் பாஸ். இன்னுமா கடை கடையா ஏறி இறங்கிட்டு இருக்கீங்க.
யாரை வேண்டுமானாலும் வில்லனாய்க் காட்டலாம் என இயக்குநர்களுக்குச் சுதந்திரம் இருந்தாலும், இதைப் போன்ற தன்மையிருக்கும் ஒரு நபர், இப்படி ஜாக்கி சான் போல் களேபரம் செய்வதெல்லாம் சினிமாவில் கூட முடியாத லாஜிக் பாஸ். பொதுவாக, சைக்கோ கொலையாளனாக மாறுபவர்களிடம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பின்கதை இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த கதையையும் நகர்த்திச் செல்லும் இவரது காரணக் கதையில் அபத்தம் மட்டுமே நிரம்பியிருக்கிறது.
ராட்சனுக்கான பில்ட்-அப் எல்லாம் பக்கா. ஆனால், கடைசியில் ஒரு மினியனைக் காட்டியதுதான் கொஞ்சம் ஏமாற்றம். ஆனாலும், பெரும்பகுதிகளில் மிரட்டுகிறான் ராட்சசன்!
Post a Comment