Rekka Movie Review

கும்பகோணத்தில் அமைதியாக, தெரிந்த / தெரியாதவர்களின் காதலுக்கு உதவும் வக்கீல் சிவாவாக, விஜய் சேதுபதி. அவரது அமைதியான அப்பாவாக கே.எஸ்.ரவிகுமார். வில்லன் ஹரீஷ் உத்தமனுக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு காதல் பிரச்னையில் வாய்க்கா தகராறு. ஹரீஷ் உத்தமனுக்கு ஏற்கனவே, இன்னொரு வில்லன் கபீர் துஹான் சிங்கோடு இன்னொரு வரப்புத் தகராறு. 

 Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

ஒரு சின்ன டாஸ்மாக் சண்டையில், விஜய் சேதுபதிக்கு, ஹரீஷ் உத்தமனோடு மீண்டும் ஒரு வரப்பு தகராறு. ஆனால் அடுத்தநாள் அதிகாலையில் தங்கை திருமணம் இருப்பதால், ‘பிரச்னை வேண்டாம் நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்’ என்கிறார் விசே. ஹரீஷோ, ‘என் பரம வைரி கபீர் துஹான் சிங் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை மதுரையிலிருந்து கடத்தி வா.. இல்லையென்றால் மண்டபத்தைச் சுற்றி இருக்கும் என் ஆட்கள் கல்யாணத்தில் புகுந்து கலாட்டா செய்வார்கள்’ என்று மிரட்டுகிறார். அந்தப் பெண்தான் லக்‌ஷ்மி மேனன். 

DOWNLOAD

மதுரைக்குப் போய், அத்தாம் பெரிய அரசியல்வாதி பெண்ணான லக்‌ஷ்மி மேனனை தூக்கும் சிவா, சும்மா ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டு விடலாம் என்று பார்த்தால் விடாது கருப்பாய் தொடர்கிறது தொல்லைகள். கடத்தியவர் நேரே கோவைக்கு வருகிறார். அங்கேதான் தாடி வில்லன் கபீர் இருக்கிறார். அங்கே லக்‌ஷ்மி மேனனை கைமாற்றி விட்டாரா.. இல்லை கை பிடித்தாரா என்பதை காதைச் சுற்றி மூக்கைத் தொட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இதுக்கு நடுவில் எமோஷன் குறைவாக இருக்கிறதென ஒரு ஃப்ளாஷ்பேக் வேறு.

விஜய் சேதுபதி.. வழக்கம்போல நடிப்பில் கலக்குகிறார் என்று வழக்கம்போலவே நம்மைச் சொல்ல வைக்கிறார். அசால்டாக ‘கயிறு கட்டிருக்கவன்லாம் அடிக்க மாட்டானா?/’ என்று கேட்கும்போது கண்ணில் திமிரும், அப்பாவின் பயம் கண்டு கண்ணில் பாசமுமாய்.. செம ப்ரோ. ஆக்‌ஷன் காட்சிகளில் டபுள் தமாகா வெடியாய் வெடித்திருக்கிறார்.  
கிஷோரின் அந்தக் காதல் அத்தியாயம் துருத்திக் கொண்டு தெரிந்தாலும், அவரது நடிப்பு சலிப்பை மறக்கடிக்கிறது. இப்படி கிஷோரைப் பார்த்ததே இல்லை என்பதால், நடிப்பில் ரசிக்க வைக்கிறார். சதீஷுக்கு   பதற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற கேரக்டர் என்பதால், ஆரம்பத்தில் மட்டும் கொஞ்சம் காமெடி பண்ணுகிறார்.
கே.எஸ்.ரவிகுமார் அப்பா கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்தி வருகிறார். ‘நாம ஃப்ரெண்ட்ஸாவே இருக்கணும்’ அப்பாவும் மகனும் என்று சைட்டடித்துக் கொண்டே சுற்றுவதும் மற்றவர்கள் முன் விறைப்பாக இருப்பதும் செம. லக்‌ஷ்மி மேனன், இடைவேளைக்குக் கொஞ்சம் முன்தான் வருகிறார். காதலிக்கிறார். டூயட் பாடுகிறார். ‘பார்த்தவுடன் எப்படி காதல்?” என்ற கேள்விக்கு குட்டி ஃப்ளாஷ்பேக்கில் சாமர்த்தியமாக லாஜிக் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் ரத்தினசிவாவுக்கு முதல் படம். ‘நம்ம பேர் சொல்ற படமா இருக்கணும்; என்று முடிவு செய்தவர்  கே.எஸ்.ரவிகுமாருக்கு ரத்தினம் என்றும், விஜய் சேதுபதிக்கு சிவா என்றும் பெயர் வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்குகிற படத்தின் ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாய் நம்மை ‘அடுத்து?’ என்று இழுக்கிறது. விர்ரு விர்ரு என்று விஜய் சேதுபதி ஆடுவது, முதல் 50 நிமிடங்கள் ஹீரோயினை கண்ணில் காட்டாமல் தண்ணி காட்டுவது என குட்டி குட்டி சுவாரஸ்யங்கள் ஒகேதான். ஆனால், அதன் பிறகு நடப்பதெல்லாம் வி...ர்...ர்....ரு. 
பூசாரி முதற்கொண்டு தீவிரவாதியா மாத்தி வச்சது மாதிரி, எல்லோரையும் சுகி சிவம் ஆக்கியிருக்கிறார் இயக்குநர். எதை சொன்னாலும், ஒரு லீடு கொடுத்துதான் பேசுகிறார்கள். ஒரு கட்டத்தில் வில்லனிடம் கடுப்பாகும் விசே “உனக்கு ஒரு அட்வைஸ் சொல்லவா.. ஓவர் பில்டப் பண்ணாத. நேரா விஷயத்துக்கு வா” என்கிறார். படம் ரன், கில்லி, சண்டைக்கோழி என்று பல படங்களை அங்கங்கே ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

மந்திரவாதியின் உயிர் கிளிக்குள் இருப்பதை போல, இமானின் உயிர் ஷ்ரேயா கோஷலிடம். ”கண்ணை காட்டு போதும்” நம் காதில் ரீங்காரிமிட்டுக்கொண்டே இருக்கிறது. அப்புறம் அந்த தீம். கண்ணம்மா பாடலில் சூழலும் குரலும் என்னவோ பண்ணுது பாஸ். 
விஜய் சேதுபதியின் ஆஸ்தான தினேஷ் கிருஷ்ணன் கேமரா தெறிக்கிறது. வழக்கமான வேலையை விட 200% அதிகம் உழைத்திருக்கிறார். அத்தனை ஷாட்கள்.
கல்யாணத்தை கும்பகோணத்தில் வைத்துக்கொண்டு, ஹரீஷ் சொன்னார் என்பதற்காக மதுரையில் போய் அத்தனை பேரையும், கோயமுத்தூர் போய் அத்தனை பேரையும் அடித்து துவம்சம் செய்யும் விஜய் சேதுபதி, ஆரம்பத்தில் கும்பகோணத்திலேயே ஹரீஷின் ஆட்களை துவம்சம் செய்துவிட்டுப் போயிருக்கலாமே என்று தோன்றாமல் இல்லை.

Post a Comment