மாவட்டத்திலேயே ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றம் செய்யப்படும் இயற்பியல் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி), அந்த பள்ளியின் நிலையை மாற்ற தலைமை ஆசிரியர் (ஜூனியர் பாலையா) துணையோடு பல மாற்றங்களை செய்கிறார். துணை தலைமை ஆசிரியர் சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற ஆசிரியர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
DOWNLOAD
தயாளன் தன் அணுகுமுறையால் மாணவர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராகவும் ஆகி விடுகிறார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
பன்னிரண்டாம் வகுப்பு மாணவனான பழனி (யுவன்), தனது சக வகுப்பு மாணவி அறிவழகியை (மகிமா) காதலிப்பதாகச் சொல்லி அவருக்கு தொந்தரவு கொடுக்க, ஒரு கட்டத்தில் அறிவழகி விசம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அறிவழகி விசம் குடித்ததற்குக் காரணம் ஆசிரியர் தயாளன் தான் என்று புரிந்துகொள்ளும் அறிவழகியின் குடும்பத்தார் தயாளனை அடித்து காவலர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.
மாணவியின் தற்கொலை முயற்சிக்குத் தான் காரணம் அல்ல என்பதை தயாளன் நிரூபித்து பல தடைகளை முறியடித்து அந்தப் பள்ளியை நல்ல நிலைமைக்கு கொண்டுவருகிறார்.
Post a Comment