தமிழ்நாட்டு ரவுடிகளை களையெடுத்த டெபுடி கமிஷனரான துரைசிங்கத்திற்கு ஆந்திராவிலிருந்து அழைப்பு வருகிறது. விசாகபட்டினம் கமிஷனர் ஜெயபிரகாஷ் கொலையை கண்டுபிடிக்க சிறப்பு அனுமதியில் சிபிஐ அதிகாரியாக அங்கே செல்கிறார் சிங்கம். கமிஷனரைக் கொலை செய்த குற்றவாளிக்காக வியூகம் வகுக்கும் துரை சிங்கத்தின் வலையில் சிக்கியிருப்பது கெளுத்தியோ, கெண்டையோ அல்ல சுறா எனத் தெரிகிறது. இந்தியாவையே ‘குப்பை’யாக்கிக்கொண்டிருக்கும் இன்டர்நேஷனல் வில்லன் இந்தக் கொலையின் பின் இருப்பதைக் கண்டுப்பிடிக்கிறார்.
DOWNLOAD
இந்தியன் போலீஸாக இருந்து, யுனிவர்சல் COP செய்யும் வேலைகளைச் செய்து, தீயவர்களை அலறடிக்கிற சிங்கத்தின் வேட்டையும், தப்பு செய்பவர்களை ஒன்றரை டன் வெய்ட்டில் ஓங்கி அடிப்பதும்தான் கதை.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
முதல் இரண்டு பாகங்களை விடவும், இதில் இன்னும் உக்கிரமாக இருக்கிறார் துரைசிங்கம் சூர்யா. அதே வேகம், அதிரடி, கோவம், பாசம், பஞ்ச் டயலாக்ஸ் என்று இது சூர்யாவின் 3.0 வெர்ஷன். அந்த ரயில்வே ஸ்டேஷன் என்ட்ரியும் ஃபைட்டும்... பரபரக்க வைக்கிறது.அதிலும் ஒரு அடியாளை சூர்யா அடிக்க, அவர் அங்கு இருக்கும் ஒரு எடைக்கல்லில் விழுவார். உடனே அதில் 1500 கிலோ (1.5 டன்) எனக்காட்டும். ஹோம் மினிஸ்டர் சரத்பாபு உதவியுடன் விசாகபட்டினம் துணை கமிஷனராவது, ஒரே அடியில் ஃபைட்டர்களை பவுன்ஸாகி பறக்கவிடுவது, அனுஷ்காவுடன் காதல், ஸ்ருதிக்கு அட்வைஸ், குடும்பத்திடம் பாசம் என்று படம் முழுவதும் சூர்யாவின் ஹீரோயிஸம்.
ஹன்சிகாவிற்குப் பதில் ஸ்ருதிஹாசன், மன்சூர் அலிகானுக்குப் பதில் ரோபோ சங்கர், விவேக்கிற்கு பதில் சூரி, முகேஷ் ரிஷிக்குப் பதில் ரெட்டியாக சரத் சக்ஷேனா, மொட்ட ராஜேந்திரனுக்குப் பதிலாக லோக்கல் ரவுடி, இலங்கை கூலிப்படைக்கு பதிலாக மும்பை அடியாள், ரகுமானுக்குப் பதில் சுமன், ஆஸ்திரேலியா டேனிக்குப் பதில் மெயின் வில்லன் தாகூர் அனூப் சிங் என்று இரண்டாம் பாகத்தின் விறுவிறுப்பான லேட்டஸ்ட் வெர்ஷன் தான் சி3.
அனுஷ்காவிற்கு அதிகப்படியான காட்சிகளோ, டச்சிங் சீன்களோ இதில் கிடையாது. பாடல்காட்சிகள், லவ் சீன் என்று இடையிடையே வந்துசென்றாலும் அதே அழகு தான். என்ன, இஞ்சி இடுப்பழகி ஷுட்டிங் முடித்து வந்ததுபோல இருக்கிறார். சீக்ரெட் ஜார்னலிஸ்டாக ஜாலியாக நடித்திருக்கிறார் ஸ்ருதி. இந்தப் படத்திற்கு தன் காஸ்ட்யூம் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறார். சூர்யாவை காதலிப்பது, கலாய்ப்பது, கிளாமரான பாடல் காட்சிகள், தியாகம் என படத்தின் க்ளாமர் கேர்ளாக வலம் வருகிறார்.
காமெடியனாக சூரிக்கு மிகப்பெரிய களம். அதில் அவர் என்ன செய்திருக்கிறார் என்பது கேள்விக்குறிதான். மாடுலேஷனை கொஞ்சம் மாத்துங்க பாஸ். எழுத முடியாத அளவுக்கு எக்கச்சக்க கதாபாத்திரங்கள். ரோபோ சங்கர், நிதின் சத்யா, சரத்பாபு, ராதிகா, நாசர்.. இத்தனை பேரை வைத்துக் கொண்டு, எல்லாருக்கும் குறைந்த பட்ச முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கது. ஆறடி உயரமும், ஆஜானுபாகு உடம்பும், முகத்தை மறைக்கும் ஹேர்ஸ்டைலுமாய் மிரள வைக்கிறார் மெய்ன் வில்லன் தாகூர் அனூப் சிங்.
முந்தைய பாகங்களின் தொடர்ச்சியை அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஹரி. ஹன்சிகாவின் மரணம், வில்லன் டேனியை ஜெயிலில் அடைப்பது, சூர்யாவின் ஃபேவரைட் திட்டான ‘பக்கி’, சூர்யா, அனுஷ்காவின் திருமணம் வரை முந்தைய பாகங்களை நினைவுப்படுத்துவதில் ஜொலிக்கிறது சி3. குறிப்பாக மனோரமாவிற்கான காட்சிகள் நெகிழ்ச்சி. இவைதான் ரசிகர்களைப் படத்துடன் ஒன்ற வைக்கிறது
கேமராமேனுக்கு எக்ஸ்ட்ரா லைக்ஸ். கோப்ரோ முதல் ஹெலிகேம் வரை அனைத்து ரக கேமராக்களையும் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரியன். தூத்துக்குடி, சென்னை, விசாகபட்டினம், ஆஸ்திரேலியா என்று ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் பறக்கும் காட்சிகளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து வேலை செய்திருக்கும் ப்ரியனின் ஒளிப்பதிவும், அந்தப் பரபரப்பை அப்படியே திரையில் பிரதிபலிக்க வைத்த வி.டி.விஜயன், டி.எஸ்.ஜெய்க்கும் சபாஷ் பாஸ்.
தேவிஸ்ரீபிரசாத் விட்ட இடத்தை பின்னணி இசையிலும், பாடல்களிலும் மிரட்டு மிரட்டு என்று உருட்டி எடுக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். 7ம் அறிவு பட க்ளைமேஸ் பின்னணி இசை இந்தப் படத்தின் க்ளைமேக்ஸிலும் எட்டிப்பார்க்கிறது.
ஜீப்பிற்கு இணையாக வேகத்தில் ஓடுவது, ரன்வேயில் விமானத்திற்கு இணையாக காரை ஓட்டுவது, ஃபைட் சீன்களில் எல்லாரையும் பறக்கவிடுவது, எதையும் அசால்டாக கண்டுப்பிடிப்பது, நடப்பது, ஓடுவது முதல் ஆஸ்திரேலியாவின் இண்டு இடுக்கெல்லாம் கார் ஓட்டுவது, கன்டெய்னர் ஓட்டுவது என்று சூர்யா நினைக்கும் எல்லாமே ஜஸ்ட் லைக் தட் நடக்கிறது. நிதின்சத்யாவை வைத்துக் கொண்டு ஊர் உலகத்தில் உள்ள எல்லா டெக்னிகல் வேலைகளையும் செய்கிறார். ஸ்ஸ்ப்ப்பா... முடியல!
ஸ்டிரியோ டைப்பில் ஒரே கதை, அதற்கு மூன்றாவது திரைக்கதை தான் சி3. விறுவிறுப்பும், படுவேகமுமாக ரசிகர்களை குஷிப்படுத்துகிறார் இயக்குநர் ஹரி. நாட்பட்ட மருந்துகள், எலக்ட்ரானிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் பற்றி பேசியிருப்பதற்குப் பாராட்டுகள். ஆனால் காமெடிக்கு இன்னும் மெனக்கெடலாம். யார் யாரையோ தட்டிக் கேட்கும் சூர்யா, சின்னப் பையனை வைத்து இரட்டை அர்த்தக் காமெடி பேசும் கான்ஸ்டபிள் சூரியைத் தட்டிக் கேட்க மாட்டாரா?
படத்தில் மட்டும் கதைக்கு ஒரு ஹீரோயின், கமர்ஷியலுக்கு ஒரு ஹீரோயின் என்று வைத்துக் கொண்டு எடுக்கும் நீங்கள் ‘பெண்கள் இப்படித்தான் இருக்கணும்.. இங்க இங்கதான் வரணும் போகணும்’ என்றெல்லாம் ஹீரோவைப் பேசவைத்திருப்பது என்ன நியாயம்? தொடர்ந்து ஹரி படங்கள் என்றாலே பெண்களுக்கு கலாசார வகுப்பெடுக்க ஆரம்பிப்பாரே என்றுதான் தோன்றுகிறது.
படத்தின் பலமே, மேலே உள்ள குறைகளையெல்லாம் யோசிக்க விடாமல், விர்ர்ர்ரெனப் பறக்கும் திரைக்கதைதான். பக்காவான ஆக்ஷன் கமர்ஷியல் பேக்கேஜாக வந்திருக்கும் சி3ன் வேட்டை தொடரும் என்றுதான் முடிக்கிறார்கள். என்னதான் நினைத்ததையெல்லாம் நடத்தும் சூப்பர் மேன் போலிஸாக இருந்தாலும், அடுத்த படத்திலாவது சிங்கம் கொஞ்சம் லாஜிக்கோடு சீறட்டும்!
Post a Comment