Thalaivaa Movie Review

ஆஸ்திரேலியாவில் ஜாலியாக டான்ஸ் குழு நடத்தும் விஜய், தன் அப்பா சத்யராஜை சில சமூக விரோதிகள் கொன்றுவிட, மும்பை திரும்புகிறார். தந்தையின் இடத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். முட்டுக் கட்டையாய் வந்து நிற்கும் சதிகார சமூக விரோதிகளுடன் மோதி மக்கள் தலைவனாகிறார்.

DOWNLOAD

இதைத்தான் பாட்டு, சண்டை, காமெடி என கதம்பமாக்கி கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு ஜவ்வாய் இழுத்திருக்கிறார் இயக்குநர் விஜய். விஜய்யின் நடிப்பு என்று தனியாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு பஞ்ச் விடுவதிலும், வில்லன்களுக்கு அறிவுரை சொல்வதும்தான் ரொம்ப போரடிக்கிறது. நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் வழக்கம்போல அசத்தியிருக்கிறார்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

ஹீரோயின் அமலா பாலுக்கு பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில். அவரும் பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார். சில காட்சிகளில் சந்தானம் சிரிக்க வைக்கிறார். யு ட்யூப் புகழ் சாம் ஆன்டர்சனும் இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறார். சிரிப்புதான் வரமறுக்கிறது. சத்யராஜுக்கு முக்கியமான பாத்திரம்தான். ஆனால் அவரது பாத்திரம், அவரது காஸ்ட்யூம் எல்லாமே ஏற்கெனவே அமிதாப் நடித்த சர்க்கார் படத்தை நினைவூட்டுகிறது.
வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் கவர்கின்றன. மற்ற பாடல்களும் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசை காட்சிகளை இன்னும் டம்மியாக்கும் அளவுக்குதான் உள்ளது.

Post a Comment