Thalaivii Movie Review

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அறியாத, தெரியாத பல விஷயங்களை இன்றைய தலைமுறைக்கும், நாளைய அரசியல் வரலாற்றை படிப்பவர்களுக்கும் தெரிவிக்கும் வாழ்க்கை வரலாறு படத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக தலைவி திரைப்படம் அமைந்திருக்கிறது.

DOWNLOAD

ஜெயலலிதாவின் வாழ்க்கையில் எம்ஜிஆர் எந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்தவர், ஏன் எதற்கு எப்படி என்று எத்தனை கேள்விகள் இருந்தாலும் ஜெயலலிதா வாழ்க்கையில் சகலமுமாய் இருந்த எம்ஜிஆர் என்ன நினைத்தார் என்ன நடந்தது என்பதை மிகவும் அற்புதமாக ஒரு கமர்ஷியல் மசாலா கலந்த சுவாரசியமான அரசியல் படமாக தலைவி வெளியாகியுள்ளது. 

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

இரண்டு விரல்களை காட்டி கட்சியின் சின்னத்தை பல மேடைகளில் பிரமாண்டமாக காட்சிப்படுத்திய விதம் அசத்தல் . ஒரு மிக பெரிய தலைவன் அல்லது தலைவி கையை தூக்கி மக்களிடம் கட்சியின் அன்பை காட்டும் பொழுது ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியின் வீரியம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை தெள்ளத்தெளிவாக பல நுணுக்கங்களை நன்கு கவினித்து செயல்பட்டதால் ஒட்டு மொத்த குழுவுக்கும் சிறப்பு பாராட்டுக்களை ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர் .
இந்த படத்தைப் பொருத்தவரை எந்த எந்த கதாபாத்திரத்திற்கு யார் யார் நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்டிஸ்ட் தேர்வு மிகவும் நேர்த்தியாக அமைந்ததுதான் ஆச்சரியமான விஷயம் . அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி , ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம் ஆர் ராதா கதாபாத்திரத்தில் ராதாரவி , ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி , கருணாநிதி கதாபாத்திரத்தில் நாசர் என்று மிகவும் துல்லியமாக முக அசைவுகளையும் உடல் அசைவுகளையும் சரி வர பொருத்தி படம் பார்க்கும் ரசிகர்களை ஒரு மிகப்பெரிய சந்தோஷம் தொத்தி கொள்கிறது .
வசீகரமான தோற்றம் உடைய எம்ஜிஆர் மக்களை எப்படி கவர்ந்தார் தன்னை சுற்றி உள்ளவர்கள் எம்ஜிஆரை எப்படி வணங்கினர் என்பதை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ஏஎல் விஜய். எம்ஜிஆரின் உடல் மொழி, உடை, பேசும் தன்மை, போன்றவற்றை நன்கு அனுபவித்து எம்ஜிஆர் ஆக தன்னை மாற்றிக்கொள்ள மிகவும் மெனகெட்டுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி. ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் மக்கள் மதிக்கும் ஒரு மாபெரும் அரசியல் தலைவராக இருந்த எம்ஜிஆரை திரையில் பார்க்கும் பொழுதும் , நேரில் பார்க்கும் போதும் ஏற்படும் வித்யாசங்களை சொல்லிய விதம் அழகு.
இந்தப் படத்திற்காக கூட்டம் கூட்டமாக மக்களை திரட்டி பட்ஜெட் பற்றி கவலைப்படாமல் என்று சொல்லக்கூடிய பல காட்சிகளில் பல இடங்களில் மக்களை மிகவும் நேர்த்தியாக கேமரா அங்கிள்ஸ் மூலம் பிரம்மாண்ட படுத்தியுள்ளார்கள் தலைவி படக்குழுவினர். வாழ்க்கை வரலாறு படம் என்று எடுத்துக்கொண்டு ஒரு படத்தை இயக்கும் பொழுது- எதை விடுவது எதை சேர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய சவால். அதை நன்கு புரிந்து கொண்டு மக்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களை ஜெயலலிதா என்னும் ஒரு இரும்பு மனுஷியின் மீது மக்கள் கொண்ட அபிமானம் ,ரசனை, ஆச்சரியம், 
ஜெயலலிதா எடுத்த துணிவான முடிவுகள், சந்தித்த அவமானங்கள், அந்த அவமானங்களை எதிர்கொண்ட விதம் போன்ற அத்தனையும் ஒரே நேர்கோட்டில் போரடிக்காமல் ஸ்கிரீன்பிளே அமைத்து அசத்தியுள்ளார் படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய்.
படம் ஆரம்பித்த முதல் காட்சி "பாஞ்சாலி சபதம்" போல ஜெயலலிதா சட்டசபையில் சந்தித்த அவமானங்களை கடந்து ஒரு நவீன பாஞ்சாலி ஆக உருவெடுத்து முதலமைச்சராக தான் மீண்டும் சட்டசபையில் வந்து அமர்வேன் என்று சவால் விடும் காட்சி, அதை கனெக்ட் செய்யும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஏற்படும் பிரமிப்பு, இதற்கு நடுவே அட்டகாசமான ஒரு காட்சியில் இன்டர்வெல் பிளாக் அமைத்து  மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் . 
திமுக அதிமுக என்ற கட்சிகளின் தொண்டர்கள், சினிமா ரசிகர்கள், பாமர மக்கள் , சராசரியான ஒரு பார்வையாளன் என்று பார்த்தாலும் புரியும் அளவுக்கு படத்தின் காட்சிகள் அமைந்தது தான் இயக்குனரின் பெரிய வெற்றி .சர்ச்சையை ஏற்படுத்தும் பல காட்சிகளை மிகவும் தைரியமாக சொல்லியது மட்டும் அல்லாமல் நிறைய வசனங்களை குறைத்து விஷுவல்ஸ் மூலம் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிய விதம் சூப்பர் . இருப்பினும் படம் பார்த்து விட்டு நிறைய சர்ச்சையான கேள்விகளையும் , இது உண்மை, இது பொய் என்று பல விமர்சனங்கள் எழத்தான் போகிறது என்பது நிதர்சனமான உண்மை . ஆனாலும் காட்சிகளை கிரிஸ்பாக எடிட் செய்த விதம் , உண்மைகளை உரக்க சொல்லி உற்சாக படுத்தி உள்ளது தலைவி படம் என்பதில் மாற்று கருத்து இல்லை .
சத்துணவு திட்டம்,எம்ஜிஆர் ஷூட்டிங் ஸ்பாட் கத்தி சண்டை , எம் ஆர் ராதா துப்பாக்கியில் சுட்டது , இந்திரா காந்தியின் மறைவு , ராஜீவ் காந்தியின் குண்டுவெடிப்பு , கலைஞர் ஜெயலலிதா சந்தித்த வெற்றி தோல்விகள்,திருச்செந்தூர் வேல் காணாமல் போனது ,எம் ஜி ஆர் மனைவி சதாநந்தவதியை நினைவு கூர்தல் , எம்ஜிஆர் மறைவு,ஜானகி முதல்வராக மாற நடந்த சம்பவங்கள் , ஆட்சி கவிழ்ப்பு , ஜெயா என்ற ஒரு சிங்கப்பெண் அம்மாவாக மாறிய ட்ரான்ஸ்ஃபர்மேஷன் , பார்லிமென்டில் பேசும் கம்பீரம் , ஆங்கிலத்தை பயன் படுத்திய விதம் , தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் செய்த தியாகங்கள் ,தேர்தல் அறிக்கைகள், மக்களை எதிர்கொண்ட விதம் என்று மிகவும் சுவாரசியமான அரசியல் பக்கங்களை ஜெயலலிதா வாழ்க்கையில் ரீவைண்ட் செய்து, ஒரு பயோ பிக் படத்திற்கு தேவையான பல விஷங்களை ""ஆர் அண்ட் டி" செய்து உண்மையாக உழைத்து இருக்கிறார் ஏஎல் விஜய்.
மாதவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்த தம்பி ராமையா, ஆர் எம் வீரப்பன் ஆக வரும் சமுத்திரக்கனி எம்ஜிஆர் மனைவி ஜானகி யாக மதுபாலா பல முக்கிய அமைச்சர்கள் - அவர்கள் ஜெயலலிதா வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்கள் அத்தனையும் ரசிக்க வைக்கிறது. தெள்ளத் தெளிவாக ஒரு முதலமைச்சரின் வாழ்க்கையை மிகவும் பிரம்மாண்டமாக சொல்லி உள்ளார்கள் . 
அரசியல் பின்னணி எதுவாக இருந்தாலும் படம் பார்க்கும் ஒரு ரசிகன் இந்த படத்தில் வரும் பல காட்சிகள் கண்டிப்பாக ரசிப்பான் என்பதுதான் படத்தின் சக்சஸ்.பீரியாடிக் ஃபிலிம் என்பதால் படத்தில் வரும் பழைய கார்கள், பழைய சோபாக்கள், தொலைபேசிகள் அன்றைய மவுண்ட் ரோடு, பேட்டா ஷோரூம், சட்டசபை, பழைய ஸ்டான்லி ஹாஸ்பிடல் , அரசியல் தலைவர்கள் பயன்படுத்திய உடை போன்ற பல விஷயங்களுக்கு முக்கித்துவம் கொடுத்து நுணுக்கங்களை மேற்கொண்டு காஸ்ட்யூம் மற்றும் ஆர்ட் டிபார்ட்மெண்ட் செவ்வனே வேலை செய்துள்ளார்கள். 
அர்ப்பணித்துக் கொண்ட ஒரு நடிகையின் தனிமை, அம்மாவை இழந்த சோகம், திருமணத்திற்காக தவிக்கும் ஒரு பெண்ணின் மனது, பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையின் அடுத்த கட்ட முடிவுகள், எம்ஜிஆர் என்னும் ஒரு மிகப்பெரிய சக்திக்கு பக்கபலமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஜெயலலிதா சந்தித்தது என்ன? சிந்தித்தது என்ன ? ஒட்டுமொத்தமாக செயல்படுத்தியது என்ன ? ஆண் ஆதிக்கம் கொண்ட சமூகத்தில் ஒரு பெண் அரசியலில் வெற்றிபெற அதிகாரத்தின் உச்சத்தை தொட எடுத்த முயற்சிதான் தலைவி படத்தின் ஒட்டு மொத்த கதை . 
சசிகலாவாக நடிகை பூர்ணா நல்ல தேர்வு . மதன் கார்க்கி வசனங்கள் நீ மக்களை விரும்பினால் மக்கள் உன்னை விரும்புவார்கள் என்கின்ற வசனம் படம் பார்த்த ஒவ்வொருக்கும் மனதில் நிற்கும் . ஜி வீ பிரகாஷின் இசை அற்புதமான பாடல்கள் குறிப்பாக துகலாய் துகலாய் பாடல் அந்த பாடலில் வரும் மாண்டேஜ் மனதை மிகவும் பாதிக்கும். ஒரு நடிகை, அரசியல் தலைவி , சந்தித்த வலி அரசியல் நெருக்கடிகள், சோகத்தின் உச்சம் போன்ற பல காட்சிகளுக்கு மதன் கார்க்கியின் வசனங்கள் வேற லெவல். இப்படிப்பட்ட வசனங்கள் தான் இந்த படத்தில் இருக்க வேண்டும் இந்த இடத்தில் வசனங்கள் வேண்டாம் என்று ஏஎல் விஜய் செலக்ட் செய்த காட்சிகள் மிகவும் நேர்த்தி. கண்டிப்பாக இந்த படம் பல விருதுகள் வெல்லும் என்று பலரும் சொல்லி வருவது ஆச்சர்ய படுவதிற்கில்லை . நிச்சயமாக நிறைய விருதுகள் வெல்ல கூடிய ஒரு படம் தான் தலைவி . 
சிவாஜி கணேசன் படத்தின் மைனஸ் என்று மிகவும் முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் சிவாஜி கணேசன் என்னும் கதாபாத்திரத்தை அவர்கள் காட்டிய விதம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சிவாஜி கணேசன் கதாபாத்திரத்திற்கு சரியான முகத்துடன் தேர்ந்தெடுத்திருக்கலாம் . மற்றபடி பல விஷயங்கள் இந்தப் படத்தில் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக முதல் பாதியில் வரும் எம்ஜிஆர் இரண்டாம் பாதியில் அரசியல் தலைவராக வரும் எம்ஜிஆர் இரண்டுக்கும் உண்டான மாறுபாடு கர்ச்சீஃப் பயன்படுத்தும் விதம், உதட்டை குவித்து கொள்ளும் விதம் என்று அரவிந்த்சாமி அசத்தியுள்ளார். 
ஒரு நடிகையாகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் பல தருணங்களில் கங்கனா ரனாவத் தனது நடிப்பின் ஆளுமையையும் அசாத்திய திறமையும் வெளிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதா கதாபாத்திரத்தை நன்கு புரிந்துகொண்டு இளமை துள்ளலுடன் முதல் பாதியிலும் முதிர்ந்த பெண்ணாக இரண்டாம் பாதியிலும் வெரைட்டி காண்பித்து அமர்க்களப்படுத்தி உள்ளார். இன்னும் கொஞ்சம் டப்பிங் வாய்ஸ் சிங்க் செய்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது பலரின் கருத்து. கங்கானாவுக்கு தமிழ் டப்பிங் பேசிய விதம் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் மிரட்டல் . மைனஸ் பெரிய பட்ஜெட்டில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கியுள்ள தலைவி படத்தில் பல பிளஸ்கள் இருந்தாலும் சில மைனஸ்களும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது. 
ஆரம்பத்தில் ஏற்படும் தொய்வான காட்சிகள் ரசிகர்களை நெளிய வைக்க சில இடங்களில் ஃபயர் இன்னும் பத்தல தலைவி என்றே சொல்லத் தூண்டுகிறது. பயோபிக் படங்கள் என்றாலே சில விஷயத்தை பூசி மொழுகியது போலத்தான் சொல்வார்கள் அது போன்ற இடங்களில் வரலாறு தெரிந்த ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

Post a Comment