மனித வாழ்க்கையை யதார்த்தமாக சொல்லும் டைரக்டர் ஒருவர் இருக்கிறார் என்றால் அது பாலா ஒருவராகத்தான் இருக்கமுடியும். அவர்களின் உணர்ச்சியை அப்படியே பிரதிபலித்து சொல்லும் அளவுக்கு அவருடைய திரைக்கதை அமைந்திருக்கும். படம் பார்க்கும் ரசிகர்களை தன் சொந்த வாழ்க்கைக்கு திரும்ப அழைத்துச் செல்லும் அளவுக்கு அவர் படத்தில் சீன்கள் அமைந்திருக்கும். அதே மாதிரிதான் இந்த ‘தாரை தப்பட்டை’ படமும்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
டைரக்டர் பாலா படங்கள் என்றாலே இந்திய திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தில் தமிழக பாரம்பரிய கலையான கரகாட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமார் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.
DOWNLOAD
இந்தப் படம் இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படம். அதுவே தமிழராகிய நமக்குக் கிடைத்த முதல் பெருமை.
தஞ்சாவூரை கதை களமாக கொண்டு, கரகாட்டக் குழுவை நடத்தி வருபவர் சன்னாசி (சசிகுமார்). அக்குழுவில் சூறாவளி (வரலட்சுமி) என்ற பெயரில் கரகாட்டகாரி ஒருவர் இருக்கிறார். அவர் சன்னாசியை உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார். அதை வெளிப்படுத்தாமல் தன் மனதுக்குள் போட்டு வருகிறார்.
இந்நிலையில் சூறாவளியை (வரலட்சுமி) தான் காதலிப்பதாக ஆர்.கே.சுரேஷ், தன் அம்மாவிடம் கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய சொல்கிறார். இவர் தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் டிரைவராக இருப்பதாக கூறியிருக்கிறார். சூறாவளியின் அம்மாவோ, சன்னாசியிடம் சென்று தன் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையவிருக்கிறது. ஆகையால் நீ என் பெண் சூறாவளியின் வாழ்க்கையில் குறுக்கிடாதே என்று கூறுகிறார்.
சன்னாசி வேறு வழியில்லாமல் தன்னை வெறுப்பதுபோல் சூறாவளியிடம் நடந்து கொள்கிறார். சன்னாசி தன்னை காதலித்த சூறாவளியிடம், ஆர்.கே.சுரேஷை நீ கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார். பின்பு ஆர்.கே.சுரேஷுக்கும், சூறாவளிக்கும் திருமணம் நடக்கிறது.
திருமணம் ஆனபின் மணமக்கள் இருவரையும் காணவில்லை என்று சூறாவளியின் அம்மா, சன்னாசியிடம் வந்து சொல்கிறார். உடனே சன்னாசி, சூறாவளி எங்கு சென்றார், அவளுக்கு என்ன ஆனது என்று பதறுகிறார்.
சூறாவளிக்கு என்ன ஆனது? உண்மையில் ஆர்.கே சுரேஷ் யார்? சன்னாசி (சசிகுமார்) என்ன செய்தார் என்பதை தனது வழக்கமான பாணியில் சொல்லி முடித்திருக்கிறார் டைரக்டர் பாலா.
சசிகுமார் சன்னாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். அந்தளவு நீளமாக வளர்ந்த தாடி, நீளமான தலைமுடி என கெட்டப்பில் தனக உருவத்தையே மாற்றி நடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அனல் பறக்கும் சண்டை காட்சி தத்ருபமாக நடித்துள்ளார். இன்றைய காலத்தில் கரகாட்டக்குழுவிற்கு எந்தளவுக்கு மரியாதை இருக்கிறது என்பதை இந்த படம் மூலம் நமக்கு காட்டியிருக்கிறார் பாலா.
இதற்கு முன் வரலட்சுமி நடித்த படங்களை விட இந்த படம் மூலம் அவரது சினிமா கேரியர் உயரும் என்றே தெரிகிறது. அந்தளவுக்கு அவர் நடித்திருக்கிறார். படத்தில் உண்மையான ஹீரோ வரலக்ஷ்மி தான். அவர் சசிகுமாரை முரட்டுத்தனமாக காதல் செய்வதும், சசிகுமாருக்கு கையில் காசு இல்லாத போது பசி எடுத்தால் விஸ்வரூபம் எடுத்து நடுவிதியில் கரகாட்டம் ஆடுவதும், உனக்காக என்றால் நான் அம்மணமாக கூட நடு ரோட்டில் ஆடுவேன் போன்ற வசனங்கள் பாலா படங்களில்தான் காணமுடியும். அந்த வசனங்கள் நம்மை மெய்சிலிர்க்கை வைக்கின்றன.
வில்லன் ஆர்.கே சுரேஷ்பாலாவின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக இருக்கும். அதே மாதிரி இந்தப் படத்திலும் தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை அவரும் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
படத்தில் இளையராஜாவின் இசை நம்மை மெய்மறக்கச் செய்கிறது. பாலாவின் திரைக்கதை கண்ணீர் வழிய நம்மை தியேட்டரை விட்டு வெளியே வரவைக்கிறது.
Post a Comment