சாதுவான மருத்துவராக இருக்கும் ராம் பொத்தினேனி மதுரை தாதா ஆதியை போலீசாக மாறி எப்படி பந்தாடுகிறார் என்பது தான் தி வாரியர் படத்தின் ஒன் லைன்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
ஒன் லைன் நல்லா புதுசா இருக்கேன்னு நினைச்சி ராம் பொத்தினேனி இயக்குநர் லிங்குசாமியிடம் ஏமாந்தாரா? அல்லது சிம்பு பாட கிர்த்தி ஷெட்டி ஆடும் புல்லட் பாடலை பார்த்து தியேட்டருக்கு நம்பிப் போன ரசிகர்கள் ஏமாந்தார்களா என்பது தான் தெரியவில்லை. அஞ்சான், சண்டக்கோழி 2 உள்ளிட்ட சம்பவங்களை பண்ணிவிட்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் லிங்குசாமி ரசிகர்களை வைத்து செய்துள்ள தி வாரியர் படத்தின் விமர்சனத்தை விரிவாக இங்கே பார்ப்போம்..
DOWNLOAD
சென்னையில் இருந்து மதுரைக்கு மருத்துவராக செல்லும் ராம் பொத்தினேனி மதுரையையே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கில்லி முத்துப்பாண்டி போன்ற ஆதியிடம் சிக்கி அடிவாங்க, அதன் பின்னர், போலீஸ் ஆனால் தான் பவர் கிடைக்கும் என நினைத்து போலீசாக மாறி அதே ஊருக்கு மீண்டும் வந்து ஆதியை துவம்சம் செய்வதே தி வாரியர் படத்தின் கதை. பல்லாயிரக் கணக்கான பழிவாங்கும் கதைகள் வந்தாலும், திரைக்கதையில் புதுமை இருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனால், அதையும் செய்ய தவறிவிட்டார் இயக்குநர் லிங்குசாமி.
தமிழில் இந்த படத்தின் மூலம் டோலிவுட் இளம் நடிகர் ராம் பொத்தினேனி அறிமுகமாகிறார் என அறிவித்த நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சந்துக்கு சந்து ஹீரோ வரும் புல்லட்டின் ஆந்திரா/ தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் மாறி வருவது. ஆந்திராவில் காட்சிகளை எடுத்து விட்டு திருப்பதியில் ஜிலேபி கொடுக்கிறாங்கன்னு மயில்சாமி சொல்வது போல இப்படி ஏமாற்றி விட்டாரே லிங்குசாமி என ரசிகர்கள் தியேட்டரிலேயே கத்த ஆரம்பித்து விட்டனர்.
தமிழுக்கு அறிமுகமாகி உள்ள ராம் பொத்தினேனியின் நடிப்பு, கிர்த்தி ஷெட்டி மற்றும் ஆதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் நடிப்பு படத்திற்கு பெரிய ஆறுதலாக உள்ளது. இந்த வாரம் வெளியாகி உள்ள படங்களில் தி வாரியர் மட்டுமே பக்கா கமர்ஷியல் படம் என்பதால், ஹரியின் யானை படம் போல இந்த படமும் வசூல் குவிக்க வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. ஆனால், அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாத நிலையில், எந்த அளவுக்கு வசூல் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
படம் வெளியாகும் முன்னமே ஹிட்டான புல்லட் பாடல் ரசிகர்களை ஆட்டோமேடிக்காக தியேட்டருக்கு வரவழைக்கும் வேலை செய்கிறது. அடிதடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த மாஸ் மசாலா படம் வசூலுக்கு வழி வகுக்கும் வில்லன் ஆதியின் பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. நடிகை நதியாவின் போர்ஷனும் படத்துக்கு பிளஸ் ஆக மாறி உள்ளது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாம் ஓகே ரகம் தான்.
இயக்குநர் லிங்குசாமியின் வேட்டை படத்தில் மாதவனும், ஆர்யாவும் ஒரே ஆளாக இருந்தால் எப்படி இருக்குமோ, அதே போன்ற ஒரு கதையை மீண்டும் பட்டி டிக்கெரிங் பார்த்து எழுதி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது. ரன், சண்டைக் கோழி படங்களில் இருக்கும் எதார்த்தமான கதை இந்த படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். டப்பிங் பிரச்சனை, தேவிஸ்ரீ பிரசாத்தின் சுமாரான பின்னணி இசை என ஏகப்பட்ட மைனஸ்கள் தி வாரியர் படத்தை நல்லாவே வாரி விட்டுள்ளது.
Post a Comment