தன் தம்பியையும், தன் தம்பி மாதிரியான சிறுவர்களையும் தவறான பாதையில் அழைத்துச் சென்று தன் சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் சர்வ வல்லமை உடைய தாதாவை தீர்த்து கட்டும் சாதா போலீஸே இப்படக்கரு.
DOWNLOAD
விருதுநகரில், சாதாரண குடும்பத்தில் பிறந்த போலீஸ் ஏட்டு விஜய் ஆண்டனி. தனது தம்பியுடன் இருக்கும் விஜய் ஆண்டனி, தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக தம்பியிடம் மிகவும் கண்டிப்பாக இருந்து வருகிறார். ஒரு கட்டத்தில், அண்ணன் விஜய் ஆண்டனியின் அன்பை, அடக்கு முறையாக நினைத்து கோபித்துக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார் தம்பி.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
கொஞ்ச நாள் கழித்து, தம்பியைத் தேடி சென்னைக்கு வருகிறார் விஜய் ஆண்டனி. வந்த இடத்தில் ஒரு கொலையை பார்க்கிறார். அந்த கொலையை தான் பார்த்ததாக போலீசிடம் கூறுகிறார். இந்த கொலையை தாதா சாய்தீனாவின் தூண்டுதல் பெயரில், செய்தது விஜய் ஆண்டனியின் தம்பி என்று தெரிய வருகிறது. தம்பிக்கு விஜய் ஆண்டனி எஸ்.ஐ.ஆக இந்த ஊருக்கு வந்திருக்கிறார்.... என்றும் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தம்பியை சுட்டுக் கொன்று விடுகிறார் விஜய் ஆண்டனி.
இதன் பின் இன்ஸ்பெக்டராக மாறும் விஜய் ஆண்டனி, தன் தம்பி மாதிரி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வைத்துக் கொண்டு பல கொடூர சம்பவங்கள் மற்றும் கொலைகளை ரவுடியான சாய் தீனா செய்து வருவது கண்டு கொதிக்கிறார். இதனால், சாய் தீனாவை என்கவுண்டர் செய்ய முடிவு செய்கிறார் விஜய் ஆண்டனி. அதை தன் போலீஸ் பவரை பயன்படுத்தி நேரடியாக செய்யாமல், சாய்தீனா கூடவே ரசிகர்களையும் செம்மய்யாக சுற்றலில் விட்டு, காண்டு ஏற்றி செய்ய முயற்சித்திருப்பது கடுப்பு.
ஒரு வழியாக இறுதியில் சாய் தீனாவை விஜய் ஆண்டனி என்கவுண்டர் செய்தாரா? இல்லையா? என்பது தான் "திமிரு புடிச்சவன்"படத்தின் மீதிக்கதையும், களமும்.
புதியவர் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், சாய் தீனா, லொள்ளு சபா சுவாமிநாதன்... உள்ளிட்டோர் நடிக்க, விஜய் ஆண்டனியே தயாரித்திருக்கும் "திமிரு புடிச்சவன்" படத்தின் மொத்த காட்சிப்படுத்தலும் போலீஸ் ஸ்டோரி என்பதாலோ, என்னவோ, போலீஸ் டாக்குமென்டரி மாதிரி படமாக்கப்பட்டிருப்பது பெருங் குறை. நிவேதா பெத்து ராஜீன் டப்பிங் வாய்ஸ் வேறு கடுப்பேத்தும் விதமாக படம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்டிருப்பது மேலுங்குறை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், தம்பி மீது அக்கறை காட்டுபவராகவும், வில்லனை பழிவாங்க துடிப்பவராகவும் வழக்கம் போலவே மென்மையாக நடித்திருக்கிறார். போலீஸ்காரருக்குமென்மை சரிபட்டு வருமா? என்பதை விஜய் ஆண்டனி சற்றே யோசித்திருக்கலாம்.
மாமூல் வாங்கும் பெண் எஸ்.ஐ. கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி நிவேதா பெத்துராஜ். போலீஸ் உடை இவருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. ஆனால் அவரது ஆக்டிவிட்டீஸும், வாய்ஸும் பெரிய மைனஸ். விஜய் ஆண்டனியுடன் குறும்பு செய்வது, அவரை காதலிப்பது என சற்று ஒவராகவே நடித்திருக்கிறார்.... அம்மணி காமெடியிலும் கடித்திருக்கிறார். பாவம்!
தம்பியாக வரும் இளைஞர், அரும்புமீசை குறும்பு பார்வை சிறுவனாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கத்தைக் காட்டிலும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் சாய் தீனா. லொள்ளு சபா சுவாமிநாதன், நிவேதா பெத்து ராஜின் தந்தையாக தன் காமெடியில், ரசிகனுக்கு சற்றே ஆறுதல் தருகிறார்.
விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அவரது இசை, மற்றும் பாடல்கள்... அவரது நடிப்பைக் காட்டிலும் பத்து மடங்கு திருப்தி. பின்னணி இசை, பாடல்கள் இரண்டிலும் தனக்கே உரிய பாணியில் சாகசம் செய்திருக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் .
Post a Comment