போலீஸ் கதைன்னாலே நமக்கு இது தாண்டா போலீசில் டாக்டர் ராஜசேகர் கம்பீர நடிப்பும் கடமை கண்ணியம் கட்டுப்பாடு சத்யராஜ் கோப மிடுக்கும் நினைவு வரும். சிங்கம் சூர்யா போல் அதிரடி சாகசம் ஏதும் செய்யாத, ஆனா விறுவிறுப்பான கதை. புலன் விசாரணை கேப்டன் போல் என்கொயரியில் மிளிரும் போலிஸ் ஆஃபீசர் கதைகள் பலது பார்த்தாச்சு. இது ஒரு சாதா கான்ஸ்டபிளின் எதார்த்தக் கதை, சுவராஸ்யமாகக் கொடுத்திருக்காங்க. ஹிட் அடிக்கும் இந்தப் படத்தைப் பத்தி பார்ப்போம்.
DOWNLOAD
போலீஸ் குவாட்டர்சில் அசிஸ்டெண்ட் கமிஷனரின் பையனுக்கும் ஹெட் கான்ஸ்டபிள் பையனுக்கும் அடிக்கடி மோதல் நடக்குது. நேர்மையான ஹெட் கான்ஸ்டபிள், அசிஸ்டெண்ட் கமிஷனரின் பையனோட தில்லுமுல்லுகளை சாட்சியோட அம்பலம் ஆக்கப் போறதா சவால் விடறார். பையன் பொறம்போக்கா இருக்கான்னு அப்டியே மேம்போக்கா விட்டுட முடியுமா? அதனால பையனைக் காப்பாத்த அப்பாவான அந்த ஏசி. ஹெட் கான்ஸ்டபிளை அடியாள் வெச்சு, போட்டுத் தள்ளிடறார்.
Download Diskwala app
Enjoy HD MoviesJoin Telegram Channel
கருணை அடிப்படையில் கான்ஸ்டபிள் பையனான ஹீரோவுக்கு அதே வேலை கிடைக்குது. அவர் போலீசா படும் கஷ்டங்கள், அப்பா செண்ட்டிமெண்ட்ஸ், கொலை செய்யப்பட்ட அப்பாவின் சாவுக்குப் பழி வாங்குவது என ஜனரஞ்சகமாகத் திரைக்கதை பயணிக்குது.
DOWNLOAD
அட்ட கத்தி, குக்கூ நாயகன் தினேஷ் தான் இதிலும் நாயகன். இவருக்கு இது ஒரு திருப்பு முனைப் படமா இருக்கும். ஏன்னா இதுவரை இவர் படங்கள் ரெண்டும் விமர்சகர்களால் பலத்த பாராட்டைப் பெற்றும் கமர்ஷியலா சக்சஸ் காட்ட முடியலை. இந்தப் படம், அதுக்குப் பிள்ளையார் சுழி போட்டுடுச்சு. பி, சி சென்ட்டர்களில் நல்லாப் போகும்.
குக்கூ பட விழி ஒளி இழந்த கேரக்டர் பாதிப்பில் இருந்து இவர் இன்னும் வெளி வர்லை. பாடி லேங்குவேஜ் அப்டியே சில சீன்களில் இருக்கு. இது பெரிய குத்தம் இல்லை. ஆனானப்பட்ட ராஜ பார்வை கமல்க்கும் காசி விக்ரமுக்குமே அந்தப் பாதிப்பு இருந்தது.
DOWNLOAD
வழக்கமான தாடி கெட்டப் தினேஷை விட, போலீஸ் கட்டிங்க் அடிச்ச தினேஷ், கைத் தட்டலை அள்ளறார். அப்பாவை நினைத்துக் கலங்கும் இடங்கள் அருமை. காதலியுடனான ரொமான்ஸ் காட்சிகளில் பாஸ் மார்க். டூயட் காட்சியில் சமாளிக்கிறார்.
DOWNLOAD
வில்லனின் அடியாளாக வரும் நான் கடவுள் மொட்டை பாஸ் ராஜேந்திரனுக்கு, இது மறக்க முடியாத படம். சமீப காலத்தில் வில்லனுக்குக் கைத் தட்டல் கிடைத்த வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். அதுவும் அவர் பெண் வேடத்தில் அந்தக் குத்தாட்டப் பாட்டில் செய்யும் சேஷ்டைகள் கலக்கல் ரகம். கிளைமாக்ஸில் என்னை விஷம் வெச்சுக் கொன்னுடு, ஆனா பேசிக் கொல்லாதே எனப் புலம்பும் காட்சி அற்புதம்.
DOWNLOAD
ஹீரோவின் நண்பராக வரும் பால சரவணன், கலக்கல் நடிப்பு. பண்ணையாரும் பத்மினியும், குட்டிப்புலி ஆகிய ரெண்டு படங்களில் வந்ததை விட இதில் நல்ல வாய்ப்பு. அவரது கேரக்டரை ஒட்டிய டயலாக்குகள் அப்ளாஸ் அள்ளுது (மொக்கை போடும் சூரி வகையறாக்கள் கவனிக்க)
DOWNLOAD
ஜான் விஜய், அவர் பங்குக்குக் காமெடியில் அள்ளறார். ஆனா அவருக்கு வாய்ப்பு கம்மி.
அப்பாவாக வரும் ராஜேஷ், நல்ல குணச்சித்திர நடிப்பு.
நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதம். அவரைக் கிளாமராகக் காட்டாமல் கண்ணியமாகக் காட்டிய இயக்குநருக்கு ஒரு சபாஷ்
DOWNLOAD
நிதின் சத்யா, வில்லன் நடிப்பு சுமார் தான். அவர் பல பெண்களை ரேப் பண்ணி இருக்கார் என்பது வெறும் வசனமாத்தான் வருது. காட்சியா வெச்சாதான் கேரக்டர் கொடூரம் புரியும் (மாமியார் வீட்டுக்கு விசிட் அடிச்சது மாதிரியும் இருக்கணும், மச்சினியை சைட் அடிச்சது மாதிரியும் இருக்கணும்)
ஆடுகளம் நரேன் நடிப்பும் கன கச்சிதம்.
Post a Comment