ஜோதிகாவின் 50வது படம் உடன்பிறப்பே. அவரின் அறிமுக காட்சி விசில் பறக்கும் வகையில் இருக்கிறது. ஜோதிகாவை காணவில்லை என்று குளத்தில் அனைவரும் தேடி பதறும்போது, காணாமல் போன சாமி சிலையுடன் நீருக்கு அடியில் இருந்து வருகிறார்.
DOWNLOAD
மாதங்கி எனும் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார் ஜோதிகா. கர்ப்பிணியின் பிரசவத்திற்காக தன் தாலியை அடகு வைக்கிறார் ஜோதிகா. அது குறித்து கேட்கும்போது தாலி சென்டிமென்ட் பார்க்குற நேரத்த பாரு என்று கூறி தமிழ் சினிமாவின் தாலி சென்டிமென்ட்டை ஓரங்கட்டிவிட்டார்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
மாதங்கியின் அண்ணன் வைரவன்(சசிகுமார்) கோபக்காரர், அடிதடி ஆள் என்று காட்டியுள்ளனர். ஆனால் அவர் அப்படி யாரையும் அடித்து நொறுக்கியதாக காட்டவில்லை. சசிகுமாரின் செயல் மாதங்கியின் கணவர் சற்குணத்திற்கு(சமுத்திரக்கனி) சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் இரு குடும்பத்திற்கும் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை.
தனிப்பட்ட முறையில் இழப்பை சந்தித்ததால் சற்குணத்திற்கு வைரவன் மீது கோபம். இரு குடும்பமும் சேரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்போது உள்ளூர் விஷயத்தில் வைரவன் தலையிடுவதால் அவர்கள் மேலும் விலகிச் செல்லும் சூழல் ஏற்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு தங்கள் வாழ்க்கைத் துணைகளால் அண்ணனும், தங்கையும் பிரிவதை பாசமலர் காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். கிராமத்து பின்னணியை பார்க்கும்போது கிழக்குச் சீமையிலே நினைவுக்கு வருகிறது. ஆனால் அண்ணன், தங்கை பாசம் நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை.
வைரவனின் மனைவி தன் நாத்தனாரை மகள் போன்று பார்க்கிறார். ஆனால் அவர்கள் பெரிதாக பாசத்துடன் பேசுவதை நாம் பார்க்கவில்லை. ஒரு கதாபாத்திரம் எமோஷனலாக பேசினால் டிவி சீரியல் பார்க்கும் ஃபீலிங் வருகிறது. மாதங்கி தன் அண்ணனுக்காக செய்யும் பெரிய தியாகம் கூட நம்மை பெரிதாக பாதிக்கவில்லை.
தன் அண்ணனுக்கும், கணவருக்கும் ஒரே கொள்கை தான் என்கிறார் மாதங்கி. ஆனால் அவர்களை சேர்த்து வைக்க எதையும் செய்யவில்லை. வைரவனை பிரிய சற்குணம் முடிவு செய்தபோது அமைதியாக தன் கணவருடன் சென்றுவிடுகிறார் மாதங்கி. இழப்புக்கு தான் தான் காரணம் என்று நினைக்கிறாரா, தன் அண்ணன் பற்றி கணவருடன் பேசுவாரா என்றே தெரியவில்லை.
திரைக்கதையில் தொய்வு இருக்கிறது. அதிபன் கதாபாத்திரம் வரும்போது அது வேறு ஒரு படத்தின் கதையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. சூரி இருந்தும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை.
Post a Comment