Vaanam Kottattum Movie Review

ஒரு அழகான கிராமம் அதில் ஒரு அழகான குடும்பம் சரத்குமார், ராதிகா மற்றும் அவர்களின் குழந்தைகள் மற்றும் சரத்குமார் அண்ணன் அவரை ஒருவர் வெட்டி விடுகின்றனர். வயலிலே அவர் விழுந்து கிடக்கிறார் வெட்டப்பட்ட அரிவாளை சரத்குமார் மகன் எடுக்கிறான். சரத்குமார் மற்றும் ராதிகா குழந்தைகளுடன் கோவிலுக்கு செல்கின்றனர். 

DOWNLOAD

அச்சமயம் சரத்குமார் மகன் சரத்குமாரிடம் வந்து அப்பா பெரியப்பா அங்கு வெட்டப்பட்டு விழுந்து கிடக்கிறார் என்று கூறுகிறான். சரத்குமார் உடனே கோபம் கொண்டு பலி தீர்க்க கட்சிகாரர் இருவரை வெட்டி விடுகிறார் இருவரும் இறந்து விடுகின்றனர். இறந்ததில் ஒருவருடைய குழந்தைகள் அதனை கண்கூடாக பார்க்கிறது இது தான் படத்தின் முதல் காட்சி படு சுவாரசியமாக கதை ஆரம்பிக்கிறது.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

சரத்குமார் மீண்டும் சாமி தரிசனம் செய்ய வருகிறார் வந்து ராதிகாவிடம் கூறுகிறார் நான் ஜெயிலுக்கு செல்கிறேன் குழந்தைகளை பார்த்துகொள் என்று மற்றும் மகனிடமும் மகளிடமும் பாசமான வார்த்தைகள் கூறுகிறார். சரத்குமார் ஜெயிலுக்கு சென்று வெளியே வந்தாரா ? வந்ததும் அவரை பழிவாங்க துடிக்கும் இறந்தவரின் மகன் பல வருடங்களாக காத்து கொண்டு கடைசியில் என்ன செய்தான் , அது நடந்ததா இல்லையா என்பதை விறு விறுப்பான திரைக்கதை உடன் நமக்கு வழங்கி உள்ளார் இயக்குனர் தனா.
கான்செப்ட் என்னவோ பழசு தான். ஆனால் பழைய பழிவாங்கும் கதையை தூசிதட்டி இந்த காலத்திற்கு ஏற்றது போல பட்டி டிங்கரிங் செய்து நமக்கு வழங்கி உள்ளனர்.
விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் ராதிகா சரத்குமாரின் குழந்தைகள். விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் எல்லோரும் வளர்ந்து விடுகின்றனர். இருவரையும் இந்த கிராமம் வேண்டாம் என்று சிட்டிக்கு அழைத்து வருகின்றார் அம்மா ராதிகா. சிட்டியில் வாழைக்காய் மண்டி ஆரம்பிக்க வேண்டும் என்பது விக்ரம் பிரபுவின் ஆசை அதில் பல கஷ்டங்களை மற்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார். அங்கும் அப்பாவை போல பலரிடம் சண்டை போடுகிறார் அடிக்கடி போலீஸ் ஸ்டேஷன் சென்று வருகிறார் இதனை பார்க்கும் ராதிகா அவருக்கு அட்வைஸ் செய்கிறார். என்னப்பா ரொம்ப கருத்து ஊசி போடுகிறீர்கள் என்கின்ற ஆடியன்ஸ் கமென்ட் தியேட்டரில் சில இடங்களில் கேட்க பட்டாலும் சொல்லிய விதம் திரைக்கதை அமைத்த விதம் எல்லாம் சூப்பர் .
இதற்கிடையில் ஒரு வித்யாசமான குழப்பமான ட்ரையான்குளர் லவ் ஸ்டோரி ஒன்று நடக்குறது . சிறு வயது பப்பி காதல் தொடங்கி ஐஸ்வர்யா ராஜேஷ் மீது அன்பு காட்டும் ஒரு நபராக சாந்தனு வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் சாந்தனு உடனும் நல்ல நண்பராக பழகுகிறார். மறுபக்கம் மற்றும் ஒரு நபர் அமிதாஷ் ஆந்திராவில் ஒரு வாழைக்காய் மண்டி வைத்திருக்கும் ரெட்டிகாரு மகனாக வருகிறார். அவருடனும் ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல நண்பராக பழகுகிறார் அமிதாஷ் இதற்கு முன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்த அமுல் பேபி என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா யாரை காதலிக்கிறார், யாருடையது உண்மை காதல் , இவர்களில் யார் ஐஸ்வர்யாவின் கை பிடிக்க போகிறார்கள் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக படத்தின் கடைசி காட்சி வரை கொண்டு சென்றதற்கு சபாஷ் போடலாம் .
இவர்கள் மூவருக்கும் சேர்ந்து ஒரு இனிமையான பாடல் ஒலித்தது. இருவருடனும் ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக பழகுகிறார் யாரை இவர் கல்யாணம் செய்து கொள்ள போகிறார் என்பது பலருக்கும் கேள்விக்குறி. அண்ணாவிற்கு பல உதவிகளை செய்யும் ஒரு நல்ல தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடித்து இருக்கிறார்.
அப்பா இல்லாத இரு பிள்ளைகளை ஒரு அம்மா தனி பெண்ணாக எப்படி வளர்க்கிறார் என்று உணர்த்தும் ஒரு படம் . அந்த காட்சிகளில் ராதிகாவின் நடிப்பு அற்புதம். சிங்கள் பாரென்ட் என்ற வாழ்க்கை முறை இப்போதெல்லாம் பல இடங்களில் நாம் பார்க்கிறோம். அதை உணர்ந்து விக்ரம் பிரபு அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார் .அம்மாவை பெயர் சொல்லி கூப்பிடும் அளவிற்கு பாசமான மகன். ஐஸ்வர்யா ராஜேஷ் கூறும் ஒரு வசனம் பலரையும் கவர்ந்தது. என்ன தான் அண்ணன் தங்கையாக இருந்தாலும் தொழிலில் நான் பார்ட்னர் மற்றபடி மற்ற விஷயங்களில் தட் தட் மேன் தான் என்று சொல்வது மிக அழகு , அப்ளாஸ் அள்ளுகிறது அந்த காட்சி.
மடோனா செபாஸ்டின் வரும் காட்சிகளில் பெரும்பாலும் அழுகை சோகம் அப்பாவை பிரிந்த ஒரு பெண் என்று பலவற்றை வைத்து ஒரு கதாபாத்திரம் அவருக்கு அமைத்து அதனை கட்சிதமாக செய்துள்ளார் . அவர் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனை இன்னும் அழகாக மெருகேற்றி இருக்கிறார் என்றே சொல்லலாம் படத்தை ராதிகா மற்றும் சரத்குமார் மட்டும் அவ்வளவு தாங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்த படம் பல விருதுகளை அள்ளி கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சரத்குமார் ஜெயிலுக்கு சென்று திரும்பி வந்து ராதிகாவை பார்த்து பேசும் காட்சி அந்த காட்சியில் அவர் நடிப்பு நம்மை உருக வைக்கிறது. மற்றும் படத்தில் ஒரு நல்ல மெசேஜ் உண்டு. ஜெயில் வாழ்க்கை எவ்வளவு கடினம் மற்றும் கஷ்டங்களை புரிய வைக்கிறது. படத்தின் படத்தொகுப்பு தரமாக உள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாராட்டுவார்கள் அந்த அளவிற்கு இருந்தது சங்கத்தமிழனின் படத்தொகுப்பு. படத்தில் உச்சகட்டம் ஒளிப்பதிவு தான் விஷவல் அனைத்தும் மணிரத்னம் படத்தை பார்ப்பது போல இருந்தது பிரிதா ஜெயராமின் ஒளிப்பதிவு அதனை தத்ரூபமாக காட்டியது அவருக்கு பல படங்கள் இனிமேல் வந்து குவியும். 
இவை அனைத்திற்கும் மேலாக படத்திற்கு மிகப் பெரிய பலம் சித் ஸ்ரீராமின் இசை .. பின்னணி இசையில் கலக்கி உள்ளார் சித் ஸ்ரீராம் பூவா தலையா பாடல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் சிறு சிறு இடைவெளியில் வந்து கதையின் ஓட்டத்துடன் நகர்வது ரசிக்க வைக்கின்றது. சில இடங்களில் பாடல்கள் கொஞ்சம் ஓவர் டேக் செய்வது போல தோன்றுவது தான் கொஞ்சம் மைனஸ்.
படத்தின் படத்தொகுப்பு தரமாக உள்ளது. கண்டிப்பாக அனைவரும் பாராட்டுவார்கள் அந்த அளவிற்கு இருந்தது சங்கத்தமிழனின் படத்தொகுப்பு. படத்தில் உச்சகட்டம் ஒளிப்பதிவு தான் விஷவல் அனைத்தும் மணிரத்னம் படத்தை பார்பது போல இருந்தது பிரிதா ஜெயராமின் ஒளிப்பதிவு அதனை தத்ரூபமாக காட்டியது அவருக்கு பல படங்கள் இனிமேல் வந்து குவியும். 
இவை அனைத்திற்கும் மேலாக படத்திற்கு மிகப் பெரிய பலம் சித் ஸ்ரீராமின் இசை .. பின்னணி இசையில் கலக்கி உள்ளார் சித் ஸ்ரீராம் பூவா தலையா பாடல் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. பாடல்கள் அனைத்தும் சிறு சிறு இடைவெளியில் வந்து கதையின் ஒட்டத்துடன் நகர்வது ரசிக்க வைக்கின்றது. சில இடங்களில் பாடல்கள் கொஞ்சம் ஓவர் டேக் செய்வது போல தோன்றுவது தான் கொஞ்சம் மைனஸ். படத்தில் மற்ற துறைகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு கலை இயக்குனர் பங்களிப்பு இருந்தது பல இடங்கள் கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் மார்கெட் போன்ற இடங்களில் ஷூட்டிங் எடுக்கப்பட்டு இருக்கிறது . 
அதில் முக்கிய பங்கு கலை துறைக்கு உண்டு கண்டிப்பாக கதிரை பாராட்ட வேண்டும். வாழ்வில் நாம் தவறுதலாக செய்யும் ஒரு காரியம் ஒரு குடும்பத்தையே காயப்படுத்தும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் அது போல நடக்க கூடாது என்பதை உணர்த்தி இருக்கும் படம் வானம் கொட்டட்டும். ஆத்திர காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். அதை வைத்து கோபம் தான் நம் வாழ்க்கையின் எதிரி என்பதை உணர்த்தும் படம். படத்தில் வானத்தில் மழை கொட்டும் போது அதை படமாக்கிய விதம் அற்புதமாக உள்ளது. வாழ்க்கையின் துயரங்களை மழையின் அழகுடன் ஒப்பிட்டு கூறிய இயக்குனர் சுவாரஸ்யமான சவால்களை செய்துள்ளார்.

Post a Comment