குத்தாட்டம் போடும் இடத்தில் கொண்டாட்டம், காய் அறுப்பு என்று வார்த்தையைக் கேட்டாலே மிரட்சி, டீச்சரைப் பார்க்கும் இடத்திலெல்லாம் மனதுக்குள் பட்டாம்பூச்சி என சிவனனைந்தனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் பொன்வேல். 'ம்பா... ம்பா...' எனப் பதறும் இடத்திலும், 'பேசுமா என்கிட்ட பேசுமா' என்று கெஞ்சும் இடத்திலும் அவருக்காகக் கண்கள் பனிக்கிறது. அவரது நண்பராக வரும் சேகர் கமல் ரசிகராக அடிக்கும் லூட்டி, வகுப்பறையில் கலாட்டா எனச் சிரிப்பு வெடிகளைக் கொளுத்தி பட்டையைக் கிளப்புகிறார். அனைவருக்கும் பிடித்துப் போகும் ஜாலியான டீச்சராக நிகிலா விமல், தன் பூங்கொடி கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்கிறார்.
DOWNLOAD
‘கொடுப்பதற்கு உழைப்பைத் தவிர என்னிடம் என்ன இருக்கிறது’ என்று கணவரில்லாமல் தவிக்கும் ஒரு தாயின் பரிதவிப்பை கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஜானகி. சுயமரியாதையோடு எதிர்த்து கேள்வி கேட்கும் தொழிலாளியாக மிளிர்கிறார் கலையரசன். வேம்புவாக வரும் திவ்யா துரைசாமியின் திரை நேரம் குறைவென்றாலும் நடிப்பில் குறையேதுமில்லை. புரோக்கர் பத்மன், வியாபாரி ஜெ.சதீஷ் குமார் என நடித்த அனைவரும் வட்டார மொழியில் வாழ்ந்திருக்கிறார்கள்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
சுற்றிலும் பச்சை சுமக்கும் வாழைத்தோப்பு, காற்றில் வருடும் ஆவாரம் பூ, முள்ளில் ஏறும் ரயில் பூச்சி, கண்மாய் சேற்றைச் சுமக்கும் மனித கால்கள் என நெல்லை மண்ணின் கிராமத்து அழகியலைச் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். குறிப்பாகக் கறுப்பு வெள்ளை காட்சிகளில் அவர் வைக்கும் அழுத்தமான பிரேம்கள் பதைபதைக்க வைக்கும் செல்லுலாயுடு ஆயுதம். வாழைக்கேற்ற உரம் போல இந்த காட்சிகளின் மீட்டர் அறிந்து கச்சிதமாகக் கோர்த்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சூர்யா பிரதாபன். சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘ஒரு ஊர்ல ஒரு ராஜா’, ‘தென்கிழக்கு தேன் சிட்டு’ ஆகிய பாடல்கள் நெஞ்சை வருட, க்ளைமாக்ஸ் காட்சியில் ஒலிக்கும் வயலின் பின்னணி இசை வாழையின் (கதையின்) வேரினைத் தொடுகிறது.
இதைத் தாண்டி கொட்டடிக்கும் குடுகுடுப்பை, பறவைகளின் கிரீச்சிடும் சிறகுகள், ‘பாம்’, ‘பாம்’ என ஒலிக்கும் லாரியின் ஹாரன், தட்டப்படும் கதவுகள் என அஃறிணைகளை உயர்திணையாக உயர்த்தியிருக்கிறது சுரேன் மற்றும் அழகிய கூத்தனின் ஒலிப்பதிவு. கட்சிக்கு ஓட்டு கேட்கும் சுவரோவியம், தொண்ணூறுகளின் திரைப்பட சுவரொட்டிகள் என தன் பங்குக்குக் கலை இயக்குநர் குமார் கங்கப்பனும் பங்களித்திருக்கிறார்.
கிராமத்து வீடு, பள்ளி, பூங்கொடி ஆசிரியர், காய் அறுக்கும் வாழைத்தோப்பு, லாரி ஆகியவற்றின் விவரிப்புகளுடன் சிவனனைந்தனின் உலகுக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றன ஆரம்ப காட்சிகள். “ராஜாதி ராஜா இதுதான் உன் ராதாவா”, “இங்க ரஜினி படம் தாம்ல ஓடுது... கமல் படம் என்னைக்கு ஓடிருக்கு?” என்று சிறுவன் சேகர் சேட்டையாகப் பேசும் வசனங்கள் கைதட்டல் அள்ளுகின்றன. சிவனனைந்தன் உழைத்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் சமூகம் பிடுங்குகிற குழந்தைப் பருவத்தையும், அதிலிருந்து சற்று ஆசுவாசம் செய்யும் பூங்கொடி டீச்சரின் பால்யகாலத்து அன்பையும் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதையே திரைக்கதையின் திருப்பங்களுக்குப் பயன்படுத்திய விதமும் சிறப்பு!
Post a Comment