ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக்கை, அவரது துப்பறியும் திறமைக்காக காவல்துறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் விவேக்கின் மகன் தேவ், அந்நாட்டைச் சேர்ந்த ஆலிஸ் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் விவேக் மகனுடன் மூன்று ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்.
DOWNLOAD
இந்நிலையில்தான் ஒரு போலீஸ் நண்பர் விவேக்கை அமெரிக்கா சென்றுவர கட்டாயப்படுத்துகிறார். அந்த கட்டாயத்தின் பேரில், அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு செல்கிறார் விவேக். மகனுடன் சமாதானம் ஆனாலும், மருமகள் மீது கோபத்தை தொடர்கிறார் விவேக். ஆலிஸ் வலிய வந்து பேசினாலும், அவருடன் பேசாமல் தவிர்க்கிறார் விவேக்.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
இதற்கிடையே அதே ஊரில் மகளுடன் தங்கியிருக்கும் சார்லியை சந்திக்கிறார். அவருடன் விவேக்கிற்கு நட்பு ஏற்படுகிறது. இருவரும் ஊரைச் சுற்றி திரிகிறார்கள். இந்நிலையில், விவேக்கின் பக்கத்து வீட்டு பெண் மோனா மர்மமான முறையில் கடத்தப்படுகிறார். இந்த விவகாரத்தில் விவேக் தானாக தலையிட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார்.
இது அவரது மகனுக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை. இருப்பினும் விவேக்கின் போலீஸ் மூளை அவரை அதைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது. மோனா போலவே வேறொரு சிறுவனும் கடத்தப்படுகிறான். பின்னர் விவேக்கின் மகனே கடத்தப்படுகிறார். இவர்களை கடத்தியது யார்? விவேக் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.
அமெரிக்காவில் வாழும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தான் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார்கள். அதனாலேயே படத்தின் மேக்கிங் ஹாலிவுட் படம் பார்த்த உணர்வை தருகிறது. சீரியசான திரில்லர் படத்தை, மிக எளிமையான திரைக்கதையில், சுவாரஸ்யமாக தந்திருக்கிறார் இயக்குனர் விவேக் இளங்கோவன். சியாட்டல், ஒடிசி, வெளிநாட்டு நடிகர்கள், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் என புதிய உணர்வை தருகிறது வெள்ளைப் பூக்கள்.
க்ளைமாக்ஸ் காட்சியில் நல்லதொரு கருத்தை சொல்லி இருக்கிறார்கள். பெரிய நட்சத்திர பட்டாளம் இல்லாத இந்த படத்தில், பொறுப்பை உணர்ந்து, முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார் விவேக். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விவேக்கின் ஆட்சி தான். வயதான போலீஸ் அதிகாரி ரோலுக்கு, நன்றாகவே பொருந்துகிறார். தனது இயல்பான ஜாலி நடிப்பால், சீரியஸ் காட்சியையும் காமெடியாக்கிவிடுகிறார்.
விவேக்கிற்கு அடுத்தப்படியாக படத்தில் நமக்கு நன்றாக தெரிந்த முகம் சார்லி. படம் முழுவதும் விவேக்குடனேயே வருகிறார். பழைய படங்களில் சிறு வயதில் அவர்கள் என்ன செய்தார்களோ, அதேவேலையை முதிய பருவத்தில் செய்திருக்கிறார்கள். குற்றவாளியை கண்டுபிடிக்கிறேன் என கிளம்பி இவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி, செம பியூட்டி. பூஜா தேவரியாவுக்கு படத்தில் பெரிய வேலை எதுவும் இல்லை. ஆனால் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். ஒரே காட்சி தான் என்றாலும், மிரட்டி இருக்கிறார். விவேக்கின் மகனாக நடித்துள்ள தேவ் தமிழுக்கு நல்ல அறிமுகம். அதேபோல் அவரது மனைவியாக நடித்துள்ள பேய்ஜ் ஹெண்டர்சனும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
திரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில், மிகையில்லாத பின்னணி இசையை தந்திருக்கிறார் ராம்கோபால் கிருஷ்ணராஜு. ஒரே பாடல் தான் என்றாலும், ராப் இசையில் கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. ஜெரால்ட் பீட்டரின் ஒளிப்பதிவு, படத்தை பிரஷ்ஷாக காட்டுகிறது. படம் போராடிக்காத வகையில் எடிட் செய்திருக்கிறார் பிரவீன் கே.எல். படம் சுவாரஸ்யமாக நகர்வதற்கு பிரவீனின் எடிட்டிங்கும் ஒரு காரணம்.
விவேக், சார்லி சம்மந்தப்பட்ட காட்சிகள் சீரியஸ் படத்தை ஜாலியாக மாற்றிவிடுகிறது. இதனால் ஒரு திரில்லர் படம் ரசிகர்களிடையே ஏற்படுத்த வேண்டிய பதட்டம் இதில் மிஸ்ஸிங். க்ளைமாக்ஸ் சர்ப்ரைசிங்காக இருந்தாலும், அதுமட்டும் தான் படம் என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. இருப்பினும் வெள்ளைப் பூக்கள் நல்ல ஒரு புதிய அனுபவம் என்பதை மறுப்பதற்கில்லை.
Post a Comment