Venghai Movie Review

சிவகங்கையில் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக்கொண்டு, ஊர்வம்பை விலைக்கு வாங்குபவர் ஹீரோ தனுஷ். இவரது கண்ணியமிக்க அப்பா ராஜ்கிரண். பையன் இப்படி உதவாக்கரையாய் இருக்கிறானே என்று வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சிக்கிறார். தனுஷோ, ஊரைவிட்டுப் போக வேண்டும் அவ்வளவுதானே... நான் திருச்சிக்குப் போகிறேன், என்று கிளம்புகிறார்.

DOWNLOAD

திருச்சிக்கு வந்து பார்த்தால்.... பால்ய சினேகிதி தமன்னா! இருவருக்கும் வழக்கம் போல காதல்... இன்னொரு பக்கம் ராஜ்கிரணின் நண்பனாக இருக்கும் பிரகாஷ்ராஜ், தனது மோசடிகளால் எதிரியாகிறார். இந்த பகைக்கு பழி வாங்கும் முயற்சியாக, தனுஷை போட்டுத் தள்ள முயல்கிறார் பிரகாஷ் ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும் பிகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது... க்ளைமாக்ஸ்.

Download Diskwala app
Enjoy HD Movies
Join Telegram Channel 

செல்வம் என்ற பாத்திரத்தில் வேங்கையாக சீறுகிறார் தனுஷ். அவரது உருவத்துக்கும் இந்த அடைமொழிக்கும் சம்பந்தமிருக்கிறதா என்ற கேள்வியெல்லாம் எழுப்பாமல், சமர்த்தாகப் படம் பார்த்தால் கடைசி காட்சி வரை உட்கார முடியும்... இல்லாவிட்டால் உங்கள் பாடு!! தமன்னா செம க்யூட். நடிக்க நிறைய வாய்ப்பு தந்திருப்பதாக ஹரி பேட்டியெல்லாம் கொடுத்திருந்தார். ஆனால் படத்தில் அப்படி ஒன்றுமில்லை. ஆனாலும் வருகிற காட்சிகளிலெல்லாம் கண்களை நிறைக்கிறார் அழகாக. 
கதாநாயகியின் வேலை அதானே! வழக்கம்போல கண்ணியத்தின் மறுபெயர் ராஜ் கிரண். மனதில் நிற்கிறார். சிங்கம் படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு... முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ் ராஜ். வடிவேலுவின் அருமையைப் புரிய வைக்கிறார் கஞ்சா கருப்பு. அடுத்தவாட்டி நல்லா முயற்சி பண்ணுங்க கருப்பு. தேவி ஸ்ரீ தேவி இசையில் சொல்லிக் கொள்ளும்படி பாடல்கள் இல்லை. 
இந்த மாதிரி படங்களுக்கென்றே வைத்திருக்கும் ரெடிமேட் பின்னணி இசை. கஷ்டம்! ஆனால் வெற்றியின் காமிரா கலக்கல். விடி விஜயன் ஹரிக்கு இன்னொரு வலது கரம். காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடிவது இவரது வேகமான 'கட்'களால்தான்! செல்போன் டெக்னிக், டாடா சுமோ பறப்பது, விஷ்க் விஷ்க் என்று பேசும் அரிவாள்... இப்படி ஹரி க்ளிஷேக்கள் இந்தப் படத்திலும் தொடர்வது அலுப்புதான் என்றாலும், குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கை இந்தப் படம் தருகிறது.

Post a Comment