கார்த்தி எனும் ஸ்ரீயும் , அருள் எனும் ஹரீஸ் கல்யாணும் ஒரே ஏரியாவில் வெவ்வேறு பொருளாதார சூழலில் வளர்ந்து ஆளாகும் இளைஞர்கள் .தில்லு முள்ளும், திருட்டு தனமும்நிரம்பிய குப்பத்து கார்த்தி - ஸ்ரீயால் எந்த தப்பும் செய்யாத படித்த இளைஞரானஅருள் - ஹரீஸ் கல்யாண் தொடர் பிரச்சினைகளை சந்திக்க, அதன் தொடர் ச்சியாக அருள் - ஹரீஸால் ,கார்த்தி - ஸ்ரீ பெரும் சிக்கலில் சிக்குவதும் அவைகளில் இருந்து அதற்கு முன் இருவரும் மீண்டு ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிகரமான வாழ்க்கை வாழ்வதும்தான் "வில் அம்பு'' படக்கதை.
DOWNLOAD
மேற்படி , கதையில் ஒரு துரோக அரசியலையும் , இளமை துள்ளும் இரண்டு காதலையும் , ஒரு வலியான காதல் பிரிவையும் , அப்பாவின் ஆசையை பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது .... எனும் பாடத்தையும் , யாரும் இந்த பூமியில் யார் உதவியும் ,உபத்திரமும் இல்லாமல் வாழ்ந்து விட முடியாது ... எனும் தத்துவ வித்துவத்தையும் கலந்து கட்டி , காட்சிப்படுத்தி ...வில் அம்பு படத்தை வித்தியாசமாக தரமுயன்றிருக்கிறார்கள்.... வளரும் இளம் நடிகர்கள் ஸ்ரீயும் , ஹரீஸ் கல்யாணும் இணைந்து நடிக்க, 'தா' எனும் தரமான படம் தந்த இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் இயக்கத்தில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் தயாரித்திருக்கும் "வில் அம்பு'' வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்பிற்குரியது.
Download Diskwala appEnjoy HD MoviesJoin Telegram Channel
குப்பத்து கார்த்தியாக பிறந்தது முதல் பெரும் திருட்டு , புரட்டாக திரியும் ஸ்ரீயும் , நடுத்தர வர்க்கத்து கனவுகளை சுமந்த இளைஞன் அருளாக ஹரீஸ் கல்யாணும் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள் ... என்று சொன்னால் அது வழக்கமாக சொல்வது போலாகிவிடும் .... என்றாலும் அதுதான் நிஜம்!
அசால்ட்டாக அக்கியூஸ்ட் தனங்களை தன் பிறவிகுணமாக வெளிப்படுத்துவதில் ஸ்ரீ ஜெயித்திருக்கிறார் .... என்றால் , ஸ்ரீயால் , தான் செய்யாத குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கும் ஆசாமியாக ஹரீஸ் பட்டைய கிளப்பி இருக்கிறார்.
நித்யா - சிருஷ்டி டாங்கே , பூங்கொடி - சமஸ்கிருதி , கெங்கவள்ளி - சாந்தினி உள்ளிட்ட நாயகியர் மூவரும் , அவர்களுடனான நாயகர் ஹரீஸின் இரண்டு காதலும் , நாயகர் ஸ்ரீயின்ஒற்றை காதலும் ரசனை .அதிலும் ஸ்ரீ - சமஸ்கிருதியின காதல் கவிதை !
ஹரிஸ் உத்தமன் , நந்தகுமார் , கலா ,மதன் குமார் , நிஷா கிருஷ்ணன் , யோகி பாபு , ஹலோ கந்தசாமி , பைவ் ஸ்டார் கல்யாண் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பு அதிலும், ஹான்ஸ்ட் - யோகி பாபு சிறப்போ சிறப்பு!
மார்ட்டின் ஜோயியின், ரசிகனின் அகக்கண்ணையும் மயக்கும் ஒளிப்பதிவு , நவீனின் நவீன இசை மற்றும் பாடல்கள் , ரூபனின் நச்-டச் படத்தொகுப்பு.... உள்ளிட்ட சிறப்புகள் ரமேஷ் சுப்ரமணியத்தின் எழுத்து , இயக்கத்தில் இன்றைய இளைஞர்களுக்கு எதிரில், மிகப் பெரும் எதிரியாய் பயமுறுத்தும் சவாலான சாக்கடை சமூக சூழலை அப்பட்டமாய் படமாக்கியிருப்பதில் 'வில் அம்பு' வெகுவாய் ஜொலித்திருக்கிறது! ஜெயித்திருக்கிறது!
Post a Comment